லாக்டவுனில் அம்மாவானார் மைனா நந்தினி

29

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் குடும்பப் பாங்கான கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரது இதயத்திலும் இடம்பிடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களின் தேர்வாக வலம் வரத் தொடங்கினார்.

அதன்பிறகு இவருக்கு தொடர்ச்சியாக சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரை மூலம் பிரபலமான மைனா நந்தினி. அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மைனா நந்தினி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து, அவர் அளித்த பேட்டியில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், 3 மாதம் வரை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது 5 மாதம் ஆகிவிட்டதாகவும், வயிறு பெரிதாக பெரிதாக லூசான ஆடைகளை தான் அணிய வேண்டியிருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை வேண்டும் என்றெல்லாம் கிடையாது. மொத்தத்தில் எங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று மைனா நந்தினி தெரிவித்துள்ளார்.