தமிழ் சினிமா நடிகர்களின் சைடு பிசினஸ் !

19

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் பலரும், தங்களுக்கென ஒரு வியாபாரத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

ஏனென்றால், சினிமா நிரந்தரமில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துள்ளது போல.

ஹீரோக்களோ, ஹீரோயின்களோ அல்லது காமெடி நடிகர்களோ அவர்களுக்கென்று மார்க்கெட் இருக்கும் வரைத்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.

அந்தவகையில், சினிமாவில் சம்பாதித்து பிசினஸ் நடத்திக்கொண்டிருக்கும் சில நடிகர், நடிகைகளை பற்றி காணலாம்.

விஜய்

தளபதி விஜய், லண்டனில் தன் மனைவி சங்கீதா பெயரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். அதேபோல சென்னையில் 3 கல்யாண மண்டபங்கள் இருக்கிறது.

அஜித்

தல அஜித் குமார் மலேசியாவில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். அதேபோல அஜித்துக்கு சென்னையில் ரேஸ் கோர்ட் ஒன்றும் இருக்கிறது.

நயன்தாரா

தென்னிந்திய மொழி நடிகைகளிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் நயன்தாரா, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வருகிறார்.

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற இடங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கும் நயன்தாரா, அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறார்.

சமந்தா

சென்னை மற்றும் ஐதராபாத்தில் நிறைய அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்கி குவித்து அதை வாடகைக்கு விட்டுள்ளார்.

சூர்யா

கோயம்புத்தூரில் காற்றாலை மில் ஒன்றும் கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட்டும் செய்து வருகிறார்.

ஆர்யா

சென்னை அண்ணாநகரில் SEA SHELL என்ற ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார்.

ஜீவா

சென்னை தி.நகரில் ONE MB என்ற ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார்.

சூரி

மதுரையில் அம்மன் என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார்.

தமன்னா

தன் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை தங்க வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார். புதிய நகைகளை டிசைன் செய்து, அதை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் பிசினஸில் இறங்கியிருக்கிறார்.

அமலாபால்

கொச்சியில் ஒரு பிரமாண்டமான யோகா நிலையத்தை நடத்தி வருகிறார். அங்கு, ஏரோபிக் மற்றும் ஸ்கூபா நடனமும் கற்றுத் தரப்படுகிறது.

காஜல் அகர்வால்

துணிக்கடை மற்றும் நகைக்கடை விளம்பரங்களிலும் விளாசிக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால் ரியல் எஸ்டேட்டில் தான் மொத்தப் பணத்தையும் முதலீடு செய்கிறார்.

அரவிந்த் சாமி

சென்னையில் Talent Maximus HR என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.