மகேஷ்பாபுவிற்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

3

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. இந்நிலையில், தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் இயக்குநர் பரசுராம் அடுத்ததாக ஒரு புதிய படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தில் நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக படக் குழு தெரிவித்திருக்கிறது.