காட்டுமிராண்டிகளா இவர்கள்? கண்டனம் தெரிவித்த இயக்குநர்

1

மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார், தன் சமூக வலைதள பக்கத்தில், வருத்தத்துடன் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், ‘மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில், பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்ற பரிசோதனையை மேற்கொள்ள வந்த சுகாதார பணியாளர்களை, கல்லால் அடித்து, ஓட ஓட விரட்டும் வீடியோ, நெஞ்சை பதற வைக்கிறது. சிறிதும் மனிதத்தன்மையே இல்லாத காட்டுமிராண்டிகளா இவர்கள்?’ என, கண்டனம் தெரிவித்துள்ளார்.