தர்பார் பிரமோஷன் பணிகள் தீவிரம்

12


முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தர்பார் படத்தின் போஸ்டர்களை விமானங்களில் ஒட்டியுள்ளனர். இந்த விமானம் சென்னையில் இருந்து ஐதராபாத் வரை இயக்கப்படுகிறது. தர்பார் போஸ்டருடன் கூடிய விமானத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.