அழுதுவிட்டார் அனுஷ்கா

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் சைலன்ஸ். இப்படத்தின் ‘பிரமோஷன்’ நிகழ்ச்சி தனியார் ‘டிவி’ ஒன்றில் நடந்தது. அப்போது மறைந்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா குறித்து பேச்சு வர, அவரை நினைத்து நெகிழ்ந்து அழுதுவிட்டார் அனுஷ்கா. அது குறித்து அவர் கூறுகையில், ”கோடி ராமகிருஷ்ணா இயக்கிய, அருந்ததி படம் தான் என்னை புகழ் பெற்ற நட்சத்திரமாக உருவாக்கியது,” என்றார்.