ஆல்யாவின் குட்டி பப்புகுட்டிக்கு பெயர் வைத்தாச்சு

6

சின்னத்திரை பிரபலங்களான ஆல்யா மானசாவும், சஞ்சீவும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு கடந்த வாரம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை சஞ்சய் மகிழ்ச்சியுடன் சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘பப்புகுட்டிக்கு குட்டி பப்புகுட்டி வந்தாச்சு’ என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தன் மகளுக்கு அய்லா சையத் என பெயர் சூட்டியிருப்பதாக ஆல்யா இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.