லாக்டவுனில் நிச்சயதார்தத்தை முடித்த சின்னத்திரை நடிகர் கதிர்

July 3, 2020
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்றான செம்பருத்தி.தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார் VJ கதிர். செம்பருத்தி தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவராக ஆனார். இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை என்று பதிவிட்ட கதிர்.கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரும் அழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை உருக்கம்

July 3, 2020
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமாவர் ஆத்மிகா. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கடந்த ஜூன் 26 ஆம் தேதி தனது அப்பா மரணமடைந்ததாக பதிவிட்டுள்ளார்.

சைவத்திற்கு மாறிய சமந்தா

July 3, 2020
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், தொழில் முனைவோருமான ஸ்ரீதேவி ஜஸ்டியை பின்பற்றும் சமந்தா, ‘இன்ஸ்டாகிராமில்’ அவரை புகழ்ந்துள்ளார்.@உணவே உங்கள் மருந்தாகவும், மருந்தே உங்கள் உணவாகவும் இருக்க வேண்டும்’ என, கிரேக்க நாட்டு மருத்துவ அறிஞர் ஹிப்போகிரட்டீஸ் கூறியதை மேற்கோள்காட்டி, நடிகை சமந்தா கூறுகையில், ”நான் சமைப்பதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டேன் என நினைத்தேன். ஆனால், தற்போது தெய்வீக சுவை பற்றி அறிய ஆர்வம் காட்டுகிறேன். ”நாம் நன்றாக சாப்பிடுவதோடு, அவை, நம் ஆரோக்கியத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை […]

மீண்டும் பிஸியாகும் ரம்யா நம்பீசன்

July 3, 2020
ரம்யா நம்பீசனுக்கு நடிக்க மட்டுமல்ல, நன்றாக பாட்டு பாடவும் தெரியும். ஏற்கனவே, சில மலையாளம், தமிழ் திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே, பிரபலமான பாடல்களை பாடி, அதை, ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொழுது போக்கி வருகிறார். அவர் நடித்த சேதுபதி படத்தில் இடம் பெற்ற, ‘கொஞ்சி பேசிட வேணாம்… உன் கண்ணே பேசுதடி’ என்ற பாடலை பாடி, வீடியோவை பதிவிட்டுள்ளார். அதற்கு ஏராளமானோர், ரம்யாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

நானும் வெற்றி கொடியை பறக்கவிடுவேன் – பயல் ராஜ்புத்

July 3, 2020
ஏஞ்சல் படத்தின் மூலமாக, தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் பயல் ரஜ்புத். இவர், வட மாநிலத்தைச் சேர்ந்தவர். ஹிந்தி, ‘டிவி’ சீரியல்களில் பிரபலமான நடிகையான இவர், ஒரு சில ஹிந்தி திரைப்படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்தார். தற்போது உதயநிதி ஜோடியாக, ஏஞ்சல் படத்தில் நடித்து வருகிறார். ”ஏற்கனவே, சிம்ரன், ஜோதிகா போன்ற நடிகையர், வட மாநிலங்களில் இருந்து வந்து தான், கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டினர். அதே போன்ற ஒரு வாழ்க்கை எனக்கும் கண்டிப்பாக அமையும். கோடம்பாக்கத்தில் […]

இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பார்வதி

July 3, 2020
ஊரடங்கு எப்போது முடியும், தான் நடித்த, 83 ஹிந்தி படம் எப்போது வெளியாகும் என, ஆவலுடன் காத்திருக்கிறார் பார்வதி நாயர்.கடந்த, 1983ல், இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கவாஸ்கர் கேரக்டரின் மனைவியாக நடித்துள்ளார் பார்வதி. இந்த படத்தின் மூலம், பாலிவுட்டில் தனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என, கனவில் மிதந்து வந்தார். 83 படம் வெளியாகும். என் திரையுலக வாழ்வில் திருப்புமுனை ஏற்படும்’ என, நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் […]

புதிய மொழியை விரும்பும் நித்யா மேனன்

July 3, 2020
நடிகை நித்யா மேனன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:நான்கு மொழிகளில் நான் நடித்து வருகிறேன்; படங்களுக்கு பஞ்சமில்லை. எந்த மொழிப் படமாக இருந்தாலும், நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்.பெங்காலி மற்றும் மராத்தி படங்களில் நடிக்க, மிகவும் விரும்புகிறேன். புதிய மொழியை கற்பதிலும், எனக்கு ஆசை உண்டு. வங்காளம் கற்க விரும்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

நல்லது கெட்டது என அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்! காயத்ரி

July 3, 2020
பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டியை பார்ப்பவர்கள், ‘அசின் மீண்டும் நடிக்க வந்து விட்டாரா…’ என்ற கேள்வியை தான் எழுப்புவர். அந்தளவு, அசினின் நகல் போல் உள்ள இவர், மாடல் அழகியாக இருந்து நடிக்க வந்துள்ளார்.’வாழ்க்கையில் நடக்கும் எல்லா கெட்ட காரியங்களுக்கும் நன்றி சொல்லுங்கள். நீங்கள் இதுவரை கவனம் செலுத்தாத நல்ல விஷயங்களை காண, அவை உதவும்’ என்ற தாரக மந்திரத்தை, தான் கடைப்பிடிப்பதாக, காயத்ரி ரெட்டி கூறுகிறார்.

போலீஸ் அதிகாரியான நந்திதா

July 3, 2020
பிரபாகர் தயாரிக்க, ராம்குமார் சுப்பராமன் எழுதி இயக்கியுள்ள, ஐ.பி.சி., 376 படத்தில், நந்திதா ஸ்வேதா கதை நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின், ‘டிரெய்லர்’ இன்று வெளியாகிறது. படம் குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு, நந்திதா நேற்று சமூக ஊடகம் வாயிலாக பதிலளித்தார். இப்படத்தில், போலீஸ் அதிகாரியாக நந்திதா நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பற்றி பேசும். திகில் கலந்த ஆக் ஷன் படமாக உருவாகியுள்ளது.

மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்த சாக் ஷி

July 3, 2020
இந்தியா – சீனா மோதலை தொடர்ந்து, சீனப் பொருட்களை நான் துறந்தேன். இந்நிலையில், 59 சீன செயலிகளை முடக்கிய, மத்திய அரசிற்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என, நடிகை சாக் ஷி அகர்வால் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் மேலும் கூறுகையில், இதற்கு பின், நிறைய மாற்றங்கள் வரும். இதற்காக, மத்திய அரசுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன், என்றார்.

கணக்கெடுப்பை தொடங்கிய யாஷிகா

July 3, 2020
மாடல் அழகியாக இருந்து, நடிகையாக உயர்ந்த யாஷிகா ஆனந்த், சினிமாவில் போதிய வாய்ப்பின்றி, தற்போது சின்னத்திரை பக்கம் வர உள்ளார்.இந்நிலையில், தன் ரசிகர்கள், எந்த இடத்தில் அதிகமாக இருக்கின்றனர் என்ற கணக்கெடுப்பை துவங்கியுள்ளார். இதற்காக, தன் ரசிகர்கள், அவர்களின் இருப்பிடத்தை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

சமந்தா பயன்படுத்தும் பெல்ட் மற்றும் ஹேண்ட்பேக்கின் விலை எவ்வளவு தெரியுமா..?

July 2, 2020
நடிகை சமந்தா விரும்பிப் பயன்படுத்தும் லூயிஸ் வியூட்டன் கிராஸ் பாடி பேக் ஒன்றின் விலை ரூ. 2, 17,000 ஆகும். இதே போல் அவர் பயன்படுத்தும் மற்றொரு ஹேண்ட் பேக்கான கஸ்ஸி மார்மோண்ட் பேக்கின் விலை ரூ. 1,95,000. ஹேண்ட் பேக்குகள் மட்டுமின்றி அவர் பயன்படுத்தும் பெல்ட்டுகளுமே காஸ்ட்லியானவை தான்.

புதிய தொழிலதிபரான மகிழ்ச்சியில் வரலட்சுமி

July 2, 2020
ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்து வரும் வரலட்சுமி, ‘லைப் ஆப் பை’ என்ற பெயரில் புதிதாக பேக்கிங் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக நடந்தி வருகிறார். லைப் ஆப் பை – மூலமாக பிரஷ்ஷாக பேக் செய்யப்பட்ட சீஸ் டேட்ஸ்களை செய்து கொடுக்கிறேன். இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் செய்தேன். தற்போது அது ஒரு சிறிய பிசினஸாக வளர்ந்து இருக்கிறது என்றார்.

டுவிட்டரில் முதலிடம் பிடித்தார் மகேஷ் பாபு

July 2, 2020
சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர். தென்னிந்திய நடிகர்களில் டுவிட்டரில் அதிக பாலோயர்களைப் பெற்ற நடிகராக மகேஷ் பாபு இருக்கிறார். அவரது டுவிட்டர் கணக்கை தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தொட்டுள்ளது. அதாவது 1 கோடி பாலோயர்கள். இந்திய அளவில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் 43 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

மீண்டும் திரையரங்குகளை திறக்க வலியுறுத்தல்

July 2, 2020
மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா விரைவில் திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. திரைப்படத் துறையின் சுற்றுச்சூழல் சரிசெய்வதற்கு உதவும் வகையில் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதிக்க முன்கூட்டியே முடிவு செய்யுமாறு MAI வலியுறுத்தியுள்ளது.

திரிஷ்யம் 2 ஸ்கிரிப்ட்டுடன் படப்பிடிப்பு யூனிட் தயார்

July 2, 2020
திரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் விரைவில் தொடங்கவிருப்பதாக சமீபத்தில் நடிகர் மோகன்லால் தனது 60வது பிறந்த நாளின்போது தெரிவித் தார். முதல்பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் 2ம் பாகமும் இயக்குகிறார். அதற்கான ஸ்கிரிப்ட் எழுதி வந்தார். அப்பணி முடிந்து ஷூட்டிங்கிற்கு தயாராக உள்ளனர். வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் படப் பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்பட் டுள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளான பாலிவுட் சீரியல் நடிகை அதிதி குப்தா

July 2, 2020
பாலிவுட் பிரபல டிவி சீரியல் நடிகை அதிதி குப்தா. இவர், இஷ்குபாஸ், கிஸ் தேஸ் மெயின் ஹை மேரா தில் போன்ற ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன் வாசனை நுகரும் உணர்வு இல்லாமல் போனது. இதில் சந்தேக மடைந்து கொரோனா டெஸ்ட் எடுத்தார். அதில் பாசிடிவ் என தொற்று உறுதியானது. தற்போது வீட்டில் தனிமையில் இருக்கும் அவர் தொற்றிலிருந்து மீண்டு வருகிறார்.

சுஷாந்த் சிங்குடன் நடித்த கதாநாயகியிடம் போலீஸ் விசாரணை

July 2, 2020
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம் ’தில் பேச்சாரா’. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சனா சங்கி. படப்பிடிப்பின் போது விரும்பதாகாத சம்பவம் அல்லது வேறு ஏதாவது பிரச்னை ஏற்பட்டதா? கடைசியாக சுஷாந்த் சொன்னது என்ன? மன அழுத்தம் பற்றி அவர் ஏதும் வெளிப்படுத்தினாரா என பல்வேறு கோணங்களில் சஞ்சானாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்கள்

July 2, 2020
சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் ஒரு வரமாக அமைந்துள்ளன. திரையரங்குகள் கிடைக்காமல் தவித்த பல படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகவுள்ளன. அந்தகாரம், அண்டாவ காணோம், வா டீல், காக்டெயில், டேனி போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாவதைச் சமீபத்தில் உறுதி செய்தன. இந்நிலையில் கரு. பழனியப்பன் நடித்துள்ள கள்ளன், குழந்தைகள் படமான மங்கி டாங்கி, தேவதாஸ் ஆகிய படங்கள் தி ஆலி (theally.com) என்கிற புதிய ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.

பெண் காவலருக்கு ராயல் சல்யூட் – ராஜ் கிரண்

July 2, 2020
காவல்துறைக்கு இலக்கணமாக விளங்கும் தலைமை காவலர் ரேவதி பல சாத்தான்கள் சூழ இருந்தும் யாருக்கும் பயப்படாமல் அரசியல், அதிகாரம் போன்ற பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் எள்ளளவும் கவலைப்படாமல் உண்மையை ஓங்கி ஒலித்து சத்தியத்தை காத்த தேவதையே உனக்கு அடிக்கிறேன் ராயல் சல்யூட். என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.

பாடகர்களிடம் அந்த மாதிரி கேட்காதீங்க ப்ளீஸ்!

July 2, 2020
தனக்கு பிடிக்காத விஷயம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாடகர், நடிகர் விஜய் யேசுதாஸ், `ஒரு பாடகர்கிட்ட பேச ஆரம்பிச்சதுமே ‘ரெண்டு வரி பாடிக் காட்டுங்களேன்’னு சொல்லும்போது கொஞ்சம் கடுப்பா இருக்கும். ஆனா, அந்தக் கடுப்பையெல்லாம் இப்போ தாண்டி வந்தாச்சு. பாடிக்காட்டுங்கன்னு கேட்கிற யாரும் நடிகர்களைப் பார்த்தா நடிச்சுக்காட்டுங்களேன்னு கேட்க மாட்டீங்க” என்றார்.

உடல் உறுப்புகள் தானம் செய்த ஜெனிலியா – ரித்தேஷ்

July 2, 2020
ஜெனிலியாவும் ரித்தேஷும் இது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்தார்களாம் ஆனால், அதை செய்ய முடியாமலே இருந்ததாம். இன்று(நேற்று ஜூலை 1) டாக்டர்கள் தினத்தில் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய வாக்குறுதி கொடுத்துவிட்டார்களாம். அடுத்தவருக்கு நாம் தரும் மிகப் பெரும் பரிசு, ‘வாழ்க்கைப் பரிசு’ தான். உயிர்களைக் காப்பாற்ற இது போல நீங்களும் உங்களது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.அவர்களின் இந்த தானத்திற்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

உற்சாகத்தில் விஜயகாந்த்!

July 2, 2020
‘2021-ல் அதிசயம் நிகழும்’ என்றார் ரஜினிகாந்த். அதிசயத்தை ரஜினிகாந்த் நிகழ்த்தப்போகிறாரோ இல்லையோ, விஜயகாந்த் நிகழ்த்தப்போகிறாராம். ஆம், விஜயகாந்த்-க்கு வழங்கப்படும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் அவரால் நடக்க முடிகிறது என்றும் கூறுகிறார்கள். மேலும் தூக்கமின்மையால் அவதிப்பட்ட அவர் தற்போது தினமும் 7 மணி நேரம் தூங்குகிறாராம். அதனால் அவரது பேச்சிலும் நிறைய மாற்றம் தெரிகிறது என்கிறார்கள்.

ஓ.டி.டி நேரடி ரிலீஸில் வரும் த்ரிஷா

July 1, 2020
ஓ.டி.டி நேரடி ரிலீஸுக்கு நாயகிகள் படம்தான் ராசி போலிருக்கிறது. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ படங்கள் ஏற்கெனவே ரிலீஸாகிவிட்ட நிலையில், வரலட்சுமி சரத்குமாரின் ‘டேனி’ படமும், ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்த ‘ராங்கி’ படமும் அடுத்து ரிலீஸாக விருக்கின்றன.

வாங்க.. என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள் – ரசிகர்களை அழைக்கும் அடா சர்மா

July 1, 2020
கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் செம ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ” வாங்க.. என் பக்கத்தில் உட்கார்ந்து உங்களுக்கு தெரிந்த நல்ல ஜோக் சொல்லுங்க” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

தனுஷ் பிறந்தநாளில் அட்டகாசமான டிரீட்

July 1, 2020
தனுஷ் பிறந்தநாள் அன்று ஜகமே தந்திரம் படத்தின் சிங்கள் ட்ராக் “ராட்சா ராட்சா” என்ற பாடல் வெளியிட இருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனுஷின் பிறந்தநாளில் வெளியாகும் இந்த பாடலை கேட்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மீண்டும் ஓடிடியில் சூரரைப் போற்று சர்ச்சை

July 1, 2020
தமிழில் நேரடி ஓடிடிக்கு சூர்யா ஆதரவு தெரிவித்ததால் ‘சூரரைப் போற்று’ படத்தை எப்படியாவது ஓடிடியில் வெளியிட மீண்டும் பேச்சு வார்த்தை நடப்பதாக ஒரு பரபரப்பை டோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளனர். ‘சூரரைப் போற்று’ படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கெனவே பெரிய விலைக்கு விற்றுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனத் தரப்பில் படத்தை தியேட்டரில்தான் வெளியிடப் போகிறோம் என தெரிவித்துள்ளார்களாம். இந்நிலையில் மீண்டும் இந்த சர்ச்சை எழ என்ன காரணம் எனத் தெரியவில்லை.

அடுத்த சில்க் ஸ்மிதா இவர் தானாம்

July 1, 2020
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்களில் சந்திரிகா ரவியும் ஒருவர். ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும், இந்தியா மீதும், தமிழ் மீதும் பற்று கொண்டவர். கொரோனாவால், இவரது திரைப்பயணத்திற்கு தற்காலிகமாக இடைவெளி விழுந்துள்ளது. இவர் கடைசியாக, உன் காதல் இருந்தால் படத்தில் நடித்தார். தற்போது, கவர்ச்சிப் படங்களை, ‘டுவிட்டர்’ தளத்தில் பதிவேற்றி, தன்னை ரசிகர்கள் மத்தியில், நிலைநிறுத்தி வருகிறார். கோலிவுட்டின் அடுத்த சில்க் ஸ்மிதா என்ற புகழ்ச்சியுடன், வலம் வரத் துவங்கி உள்ளார்.

கவர்ச்சிக்கு புது விளக்கம் தந்தார் வாமிகா

July 1, 2020
மாலை நேரத்து மயக்கம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வாமிகா கபி. ஊரடங்கு நாட்கள் நீண்டுகொண்டே செல்வதால் ரசிகர்கள் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக, தற்போது தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வாமிகா. மேலும், “உடல்தோற்றத்தில் இருந்து வெளிப்படுவது அல்ல கவர்ச்சி.. அது உள்ளத்தில் எரியும் தீ’ என கவர்ச்சிக்கு புது விளக்கமும் அளித்துள்ளார்.

சத்தியமா விடவே கூடாது! – ரஜினிகாந்த்

July 1, 2020
ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்டிரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். சத்தியமா விடவே கூடாது” என கூறியுள்ளார்.

விஜய் – வெற்றி காம்போ! – எப்போது?

July 1, 2020
சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்துக்கு அடுத்தபடியாக விஜய்யை இயக்கப்போகிறார் வெற்றிமாறன். ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் காம்போவில் உருவாகும் படத்துக்கு அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கும் படம் 2021-ல் டேக் ஆஃப் ஆகும் என்கிறார்கள் இருவருக்கும் நெருங்கிய வட்டாரத்தினர்.

களைகட்டும் விர்ச்சுவல் போட்டோ ஷூட்!

July 1, 2020
ஊரடங்கால் போட்டோ ஷூட்கள் எடுக்க முடியவில்லை’ என்ற நடிகைகளின் வருத்தம் குறைந்திருக்கிறது. பிரபல போட்டோகிராபர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஃபேஸ் டைம், கூகுள் டியோ ஆப்களின் மூலம் விர்ச்சுவல் போட்டோ ஷூட் செய்கிறார்கள். சமந்தா, ஹன்சிகா, கேத்ரின் தெரசா ஆகியோர் இந்த விர்ச்சுவல் போட்டோ ஷூட்டில் முதலில் இறங்க… அடுத்தடுத்து பல நடிகைகளும் இதில் போஸ்கொடுக்க… இப்படி எடுக்கப்பட்ட போட்டோக்களால் ‘இன்ஸ்டாகிராம்’ களைகட்டுகிறது.

வெப்சீரீஸில் நடிக்கும் கெளதம் மேனன்!

July 1, 2020
‘கிடாரி’ படத்தின் இயக்குநரான பிரசாத் முருகேசன், ஏற்கெனவே ‘குயின்’ வெப்சீரீஸை கெளதம் மேனனுடன் இணைந்து இயக்கியிருந்தார். அடுத்து, ‘மத்தகம்’ எனும் வெப்சீரிஸை இயக்குகிறார் பிரசாத் முருகேசன். இதில், கெளதம் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தினமும் ஆபீஸுக்குப் போய்வரும் விஜய் சேதுபதி!

July 1, 2020
கொரோனா காலத்தில் எல்லா நடிகர்களும் வீட்டுக்குள் முடங்கியிருக்க, தினமும் தன்னுடைய ஆபீஸுக்குப் போய்வருகிறாராம் விஜய் சேதுபதி. ‘‘சீக்கிரம் வேலைக்குப் போகணும்டா… முடியலை’’ என நண்பர்களிடமும் சொல்கிறாராம் விஜய் சேதுபதி.

பிகில் ராயப்பன் குறித்த சீக்ரெட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்

June 30, 2020
ராயப்பன் தோற்றம் பற்றிய சீக்ரெட் ஒன்றை அர்ச்சனா கல்பாதி தெரிவித்தார். அவர் கூறும்போது,’பிகில் படத்தில் விஜய் ஏற்ற ராயப்பன் வேடத்தில் முதலில் அவர் நடிப்பதாக இல்லை. அந்த கெட்டபோட்டு யாரை வேறு நடிகரை நடிக்க வைக்க ஆலோ சித்தபோது மும்பை மேக்கப்மேன் ஒருவர் சிச்சோரே படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் போட்டிருந்த வித்தியாச மான மேக்கப் படத்தை காட்டினார். அதன் பிறகு விஜய்க்கு அந்த மேக் அப் அணிந்து பார்த்த்போது பொருத்தமாக இருந்தது. பின்னர் விஜய்யே ராயப்பன் […]

ஜெயலலிதாவாக கங்கனா நடிப்பது அவமானம் – மீரா மிதுன்

June 30, 2020
சுஷாந்த் சிங் மரணம் குறித்து உயிரோடு இருந்தபோது கங்கனா சொல்லாதது ஏன்? அவர் இறந்தபிறகு பப்ளிசிட்டிக்காக இப்போது பேசுகிறார். இவர் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்கு தகுதியே இல்லாதவர். எதையும் தைரியமாக எதிர்த்து குரல் கொடுப்பவர் ஜெயலலிதா. அந்த தைரியம் கங்கனாவுக்குகிடையாது என்கிறபோது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடிப்பது அவமானம்’என குறிப்பிட்டிருக்கிறார் மீரா மிதுன்.

டிரெட்மில் மிஷன் நடன நடிகர் – தனுஷ் பட நடிகர்

June 30, 2020
தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர் அஸ்வின் குமார். இவர் சமீபத்தில் கமல்ஹாசனின் ’அண்ணாத ஆடுறார் ’ பாடலுக்கு டிரெட்மில் மிஷினில் கமல் போலவே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார். அதை பார்த்து கமல் பாரட்டினார். இதனைத் தொடர்ந்து நடைபயிற்சி செய்யும் நடை மிஷின் மீது நின்று நடனம் ஆடும் அஸ்வினை தற்போது டிரெட்மில் மிஷன் நடன நடிகர் என்று ரசிகர்கள் அவரை செல்லமாக அழைக்கின்றனர்.

டிக்டாக் தடைக்கு நன்றி சொன்ன சாக் ஷி

June 30, 2020
மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல் போன் செயலிகளுக்குத் தடை விதித்தி ருப்பதை அறிந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். நடிகை சாக்‌ஷி அகர்வால் இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.

கவர்ச்சி பாதையில் யாஷிகா ஆனந்தை பின்பற்றும் தங்கை ஓஷின் ஆனந்த்

June 30, 2020
யாஷிகா ஆனந்த்தின் தங்கை ஓஷின் ஆனந்த்தும் அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார்.. தனது அக்காவை பின்பற்றி அவருக்கே டஃப் கொடுக்கும் விதமாக குட்டைப்பாவாடை உடைகளை அணிந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ஓஷின் ஆனந்த். இது திரையுலக வாய்ப்புகளை அவருக்கு உருவாக்கி தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

எல்லை மீற வேண்டாம் – பூர்ணா வேண்டுகோள்

June 30, 2020
திருமண சம்பந்தம் என்கிற பெயரில் போலி பெயர்கள் கொண்ட மோசடி கும்பல் குறித்து நடிகை பூர்ணா போலீசிடம் புகார் அளித்தார். புகாருக்குப் பிறகு தற்போது, கேரள போலீஸ் துரிதமாக வேலை செய்து, அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடித்து விட்டனர்.. எனவே விசாரணை முடியும் வரை என் குடும்பம் மற்றும் என் தனிப்பட்ட விஷயங்கள் குறித்த செய்திகளில் எல்லை மீற வேண்டாம் என அனைத்து ஊடக நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன் எந நடிகை பூர்ணா கேட்டுள்ளார்.

ஹுமா குரோஷிக்கு ஹாக் கொடுத்த மின்சார கட்டணம்

June 30, 2020
கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகளில் மின் அளவீடு எடுப்பதில் குளறுபடி ஏற்பட்டதால் மின்சார கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஹுமா குரோஷி கூறியிருப்பதாவது: நான் கடந்த மாதம் 6 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தினேன். இந்த மாதம் 50 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளது. இந்த அளவு உயரக் காரணம் என்ன என்பதை எனக்கு சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிப்பார்களா? என்று கேட்டுள்ளார்.

விஜய்யின் மறுமுகத்தை பார்த்த மாளவிகா மோகனன்

June 30, 2020
மாஸ்டர் படப்பிடிப்பில் கொஞ்ச நாள் பழக்கத்திலேயே நடிகர் விஜய்யின் இன்னொரு முகத்தை பார்த்துவிட்டேன் என்றார் மாளவிகா மோகனன். விஜய் இவ்வளவு ஜாலியான ஆளான என பார்த்து வியந்துவிட்டேன். நிறைய ஜோக்கடிப்பார். சில சமயம் வேடிக்கையாக என்னை வம்பிழுப்பார். யாரை பற்றியும் எதிர்மறையாக பேசவே மாட்டார். பாசிட்டிவிட்டி என்றால் அது விஜய் தான்”, என மாளவிகா மோகனன் விஜய்யை பாராட்டி தள்ளியுள்ளார்.

டிக் டாக்கிற்கு எதிராக மீரா மிதுன்

June 30, 2020
நடிகை மீரா மிதுன், ‘டிக்டாக்’கிற்கு எதிராக, புகார் தரப்போவதாக கூறியுள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது:நான், ‘டிக்டாக்’ செயலியை பயன்படுத்தவில்லை. ஆனால், என் பெயரில் ஒரு கணக்கு உள்ளது. என் பெயரில், ‘ஹேஷ்டேக்’ போன்றவை இடம் பெற்று உள்ளன. இது, மற்ற வர்களை ஊக்கப்படுத்த பயன்படுத்தப் படுகிறது. டிக்டாக், சட்டவிரோதமாக என் பெயரை பயன்படுத்துகிறது. இந்தியர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.சீனாவின் டிக்டாக்கை புறக்கணியுங்கள் என அவர் கூறியுள்ளார்.

ஓடிடியை நோக்கி பயணிக்கும் தமிழ் சினிமா

June 30, 2020
சார்லஸ் இயக்குனராக அறிமுகமாகும், லாக்கப் படத்தில், வைபவ், வாணி போஜன் ஆகியோருடன் இயக்குனர் வெங்கட்பிரபு, முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமும், ஆன்லைனில், ‘ஜீ5’ தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்சூட் ஆசை நிறைவேறியது – நெப்போலியன்

June 29, 2020
தமிழ் திரையுலகில் நண்பர்களால் ‘’மாவீரன்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நெப்போலியன். நடிகர், தொழில் அதிபர் என இவருக்கு இரண்டு முகங்கள். மகனின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் குடியேறி விட்டார். அங்கே சென்ற பிறகும் அவர் திரையுலகை மறக்கவில்லை. ‘டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் படத்தில் நடித்ததால் கோட்டு சூட் ஆசை நிறைவேறியதாக தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் – சிவகார்த்திகேயன்

June 29, 2020
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தில் நீதியை நிலைநாட்டி மக்களுக்கு நம்பிக்கை அளிக்குமாறு, அரசுக்கு சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓடிடி-யில் வெளியாகும் வெங்கட் பிரபு படம்

June 29, 2020
ஷ்வேத் புரடெக்‌ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த லாக்கப் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படம் ஜூலை மாதம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஜானி டெஃப்பின் சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்

June 29, 2020
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் அடுத்த பாகம் தயாராக உள்ளது. ஆனால் கேப்டன் ஜாக் ஸ்பேரோ இல்லாமலேயே அந்த படத்தை உருவாக்க முடிவு செய்துவிட்டது தயாரிப்பு நிறுவனம். அதற்கு காரணம் ஜாக் ஸ்பேரோ கேட்ட சம்பளம் தான் என்கிறது ஹாலிவுட் சமாச்சாரம். கேப்டன் ஜாக் ஸ்பேரோ சுமார் 700 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். இதைக் கேட்ட தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்து விட்டதாம்.

கமல்ஹாசன் கெட்டப்பில் விஜய் சேதுபதி

June 29, 2020
கமல்ஹாசன் தேவர்மகன்2ம் பாகத்தை ’தலைவன் இருக்கிறான்’ என்ற பெயரில் இயக்கி நடிக்க உள்ளார். முதல்பாகத்தில் இறந்துபோகும் நாசரின் மகனாக 2ம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். இதுகுறித்து கமல், விஜய்சேதுபதி இருவரும் ஜூம் வீடியோவில் கலந்துரையாடினார். இப்படத்தில் இணைவதற்கு முன்பே விஜய் சேதுபதி, கமல்ஹாசன் கெட்டப்பில் இருக்கும் ஒரு புகைப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது.

சாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – வைரமுத்து

June 29, 2020
ஊரடங்கில் கடை திறந்து வைத்திருந்ததாக சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனை போலீசார் சிறைக்கு அழைத்து சென்று அடித்து உதைத்து, துன்புறுத்தி கொன்ற சம்பவத்திற்கு சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் கவிப் பேரரசு வைரமுத்து கவிதை நடையி கர்ஜனை செய்திருக்கிறார்.

ராம் கோபாலின் அடுத்த திட்டம் பவர் ஸ்டார்

June 29, 2020
ராம்கோபால் வர்மா, ஆன்லைனில் வெளியிட்ட, இரண்டாவது படமான, நேக்டு நங்கா நக்னம், வெளியான சில மணி நேரத்தில், 60 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன. இந்நிலையில், தன் அடுத்த படத்திற்கு, பவர் ஸ்டார் என, டைட்டில் வைத்து உள்ளார்.

ஆன்லைனில் நடிப்பு பயிற்சி – நடிகை திட்டம்

June 29, 2020
கொரோனா காலத்தில், ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில், பலரும் உள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலர், மாற்று வழியில் பயணிக்கத் துவங்கி விட்டனர்.இதில், திரைத்துறையினரும், தங்களுக்கு தெரிந்த வித்தையை கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில், நடிகை விஜி சந்திரசேகர், ‘ஆன்லைன்’ வாயிலாக, நடிப்பு பயிற்சி தரும் திட்டத்தை துவக்கியுள்ளார். ஜூலை, 6ம் தேதி முதல், 16ம் தேதி வரை, ‘ஜூம்’ செயலி மூலம் நடிப்பு பயிற்சி தரவுள்ளதாக அறிவித்துள்ளார். சேர விரும்புவோர் அவரது, actbyviji@gmail.com என்ற மின்னஞ்சலில் […]

வடுக்கள் அழகானவை – ஸ்ருதி ஹாசன்

June 28, 2020
சிலருக்கு சிறுவயதில் ஏற்பட்ட காயங்கள் ஆறாத தழும்புகளாக மாறி அதுவொரு அடையாள குறியாக மாறிவிடுகிறது. நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு இடது கண்ணில் ரத்த கசிவு போல் ஒரு வடு பிறக்கும் போதிலிருந்தே இருக்கிறது. இதுகுறித்து கூறுகையில் பிறந்த போது சில அடையாளங்கள். என் கண்ணில் இருந்தது, அது நோய் அல்ல. பொது வானது. என்னைப் பொறுத்த வரை அது சூப்பர் ஸ்பெஷல். இதுபோன்ற வடுக்கள் அழகானவை. அப்படி உள்ளவர்கள் அதை கொண்டாட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

முலான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைப்பு

June 28, 2020
கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகவிருந்த டிஸ்னியின் ‘முலான்’ படம் வரும் ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் பெரும்பாலான நாடுகளில் குறையாயததால் ‘முலான்’ திரைப்படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைத்துள்ளது டிஸ்னி நிறுவனம். இப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகும் என்று டிஸ்னி அறிவித்துள்ளது.

கருத்து வேறுபாட்டால் பிரித்விராஜ் படத்திலிருந்து விலகிய ஸ்கிரிப்ட் டைரக்டர்

June 28, 2020
கேரளாவில் 1921 மலபாரில் நடந்த போரட்டத்தை மையமாக வைத்து ’வாரியம்குன்னன்’ என்ற படம் உருவாகிறது. இதில் நடிகர் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார், ஆஷிக் அபு இயக்குகிறார். இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார் ரமீஸ். ஆனால் அவர் தற்காலிகமாக படத்திலிருந்து விலகி இருப்பதாக இயக்குனர் தெரிவித்திருக் கிறார்.

காதல் காட்சிகளால் படவாய்ப்புகளை இழந்துள்ளேன் – அபிசேக் பச்சன்

June 28, 2020
எனது மகள் ஆரத்யா பிறந்த பின் காதல் காட்சிகள் மற்றும் கதாநாயகியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருக்கிறேன்’’ என்கிறார், உலக அழகியின் மணவாளன். ‘’ என் மகள் அசவுகரியாக உணரும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன். படம் பார்த்து விட்டு, அவள் முகம் சுழித்து,’’ இங்கே என்ன பண்றீங்க?’ என்று அவள் கேட்கும் காட்சிகளில் நடிப்பதை மறுத்ததால் நிறையப் படங்களை நான் இழந்துள்ளேன் என அபிசேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

நடிகை பூர்ணாவின் உதவியாளருக்கு போலீஸ் வலைவீச்சு

June 28, 2020
நடிகை பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கி, கடைசி நேரத்தில் அவர்களிடம் இருந்த தப்பித்த நிகழ்வு கடந்த இரண்டு நாட்களாகவே பரபரபப்பு செய்தியாக மாறியுள்ளது. நடிகை பூர்ணாவின் ஒப்பனை கலைஞராக பணியாற்றியவர் தான் இந்த மோசடிக்கு உடைந்தையாக இருந்துள்ளாராம். ஷெரீப் என்பவரின் உறவினர் ஆவார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம் குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்

June 28, 2020
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி, அவர்களிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.. இந்த தகவலை ரஜினியின் மக்கள் தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரச்சனைக்கு எதிர்ப்பு கொடுக்காதவர்கள் மனிதர்களே கிடையாது – ஆண்ட்ரியா

June 28, 2020
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள செய்தியில்,’இந்தியாவில் கருப்பினவெறி இயக்கம் வந்திருக்கிறது. தூத்துக்குடியில் நடந்த சாத்தான்குள சம்பவம் கொடூரமானது. இதை எதிர்த்தும், நீதி கேட்டும் குரல் கொடுக்காதவர்கள் மனிதர்களே கிடையாது. இறந்தவர்களுக்கு நீதிவேண்டும்’என கேட்டிருக்கிறார்.

சாத்தான்குளம் சம்பவத்திற்கு நடிகை காஜல் கடும் கண்டனம்

June 28, 2020
காஜல் அகர்வால் தனது இணைய தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இது சகிக்க முடியாதது. ஒரு சமூகமாக நாம் எப்படி அமைதியாக இருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜெயராஜ் அண்ட் ஃபெனிக்ஸ் மரணத்துக்கு இப்போது நாம் குரல் எழுப்ப வேண்டும். அவர்களது உயிருக்கு நியாயம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தின் துக்கத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார் காஜல்.

பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார்: மகன் தகவல்

June 28, 2020
பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார் என அவரது மகன் முரளி கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். எஸ்.ஜானகிக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது; அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது எனவும் கூறினார்.

கிராமியப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி விபத்தில் சிக்கினார்

June 28, 2020
பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி, நேற்று இரவு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதால், அவரது கால் எலும்பு முறிந்தது. காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்கும் கமல்ஹாசன்

June 28, 2020
சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும் அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்முடைய விதைத்திருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட இருவரையும் தாக்கும் மூர்க்கத் தனம் கொலை பாதகச் குற்றம். அதைச் செய்தவர் எவராக இருந்தாலும் அந்த தவறுக்காக தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சிதலைவர் கமல்ஹாசன் நீதி கேட்டுள்ளார்.

தனி ஒருவன் 2 வில் மம்முட்டியா..?

June 28, 2020
நடிகர் ஜெயம் ரவி, அரவிந்தசாமி நடித்த படம் ’தனி ஒருவன்’. இப்படத்தை மோகன்ராஜா டைரக்டு செய்தார். இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்க இயக்குனர் முடிவு செய்தார். அதற்கான ஸ்கிரிப்ட் எழுதி வந்தார். தற்போது ஸ்கிரிப்ட் பணி முடிந்திருக்கிறது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காக மம்மூட்டியிடம் பேசி வருகிறார் இயக்குனர் மோகன்ராஜா.

சாத்தான்குளம் சம்பவத்திற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

June 27, 2020
மறைந்த துாத்துக்குடி வியாபாரிகளுக்காக, ‘டுவிட்டரில்’ அவர்கள் பெயரில், ‘ஹேஸ்டேக்’கை உருவாக்கி, அதை டிரெண்டாக்கி வருகின்றனர். ஜெயம் ரவியை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ்குமார், ‘டுவிட்டரில்’ பதிவிட்டதாவது:பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும், அதிகாரமும், இந்த பூமியில் யாருக்கும் இல்லை. நீதி வழங்காவிட்டால், பாதிக்கப்பட்ட சமூகம், அதற்கான நீதியை பெற்றுக் கொள்ளும் என்பதே வரலாறு. இருவர் மரணத்தை, மனித குலத்தோடு சேர்ந்து, நானும் வன்மையாக கண்டிக்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.

இசையமப்பாளருக்கு நிதியமைச்சர் பாராட்டு

June 27, 2020
சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர் கணேஷ் பி.குமாரின், சிம்பொனி இசை ஆல்பம், நேற்று உலகம் முழுக்க வெளியானது. அவருக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ஸ்பிரிட் ஆப் ஹியுமினிடி’ என்ற இந்த இசை ஆல்பத்தில், புறநானுாற்று தமிழ் பாடலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் அனுப்பிய வாழ்த்தில், கடந்த கால வரலாற்றில், இந்தியா, அமைதியை நாடி வந்த அனைவருக்கும், காரணம் எதுவாக இருந்தாலும், ஆதாரமாக இருந்துள்ளது. புகலிடம் தேடி வந்தவர்களுக்கு, இந்தியா அடைக்கலம் […]

வெறுப்பவர்களுக்கு சமந்தா தரும் பதில்!

June 27, 2020
நடிகை சமந்தாவிடம், ரசிகர் ஒருவர், ‘உங்களை வெறுப்பவர்களுக்கு, நீங்கள் தரும் பதில் என்னவாக இருக்கும்?’ என, கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சமந்தா, ‘நீங்கள் என்னை ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பதை, துரதிர்ஷ்டவசமாக நீங்கள் உணரவில்லை. பாராட்டுகள் என்னை சோம்பேறியாக்கி, அவமானப்படுத்தும். நீங்கள் என் சிறந்த படைப்பைக் கொடுக்க துாண்டுகிறீர்கள். எனவே, நன்றி’ என, பதிலளித்துள்ளார்.

கலக்கத்தில் கோடம்பாக்கம்!

June 27, 2020
தமிழ்நாட்டின் மூத்த தயாரிப்பாளர்கள் பலரையும் கொரோனா தாக்கியிருப்பதால், கலக்கத்தில் இருக்கிறது கோடம்பாக்கம். இளம் ஹீரோக்கள் எல்லோரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே இருக்க, தயாரிப்பாளர்கள் மட்டும் ஆபீஸுக்குப் போவதும் வருவதுமாக இருந்ததோடு, தேர்தல் சம்பந்தமாகப் பலரையும் சந்தித்ததுதான் கொரோனா பரவலுக்குக் காரணம் என்கிறார்கள்.

கொரோனா குமார் – நட்புக்காக விஜய் சேதுபதி!

June 27, 2020
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், இந்த கொரோனா சூழலைவைத்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். இதற்காக ஹோட்டலில் தங்கி கதை, திரைக்கதை எழுதிவரும் கோகுல், ‘ஊரடங்கு முடியும் நேரத்தில் கதை முழுவதுமாகத் தயாராகிவிடும்’ என்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நட்புக்காகத் தலைகாட்டுவாராம். ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

விஜய்யின் ஃபேவரைட்!

June 27, 2020
விஜய்யின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ‘மாஸ்டர்’ நடிகை மாளவிகா மோகனன். இதுவரை விஜய் தன்னுடைய ஃபேவரைட் உணவாக தோசையைச் சொல்லிவந்த நிலையில், ‘தயிர் சாதம்தான் விஜய்யின் ஃபேவரைட்’ என எக்ஸ்க்ளூசிவ் தகவல் பகிர்ந்திருக்கிறார் மாளவிகா. ‘விடியற்காலை 4 மணிக்கெல்லாம் தூங்கி எழுந்துவிடும் விஜய், என்னுடைய 4 மணி நண்பர்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

விஜய்யின் ஃபேவரைட்!’

June 27, 2020
விஜய்யின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ‘மாஸ்டர்’ நடிகை மாளவிகா மோகனன். இதுவரை விஜய் தன்னுடைய ஃபேவரைட் உணவாக தோசையைச் சொல்லிவந்த நிலையில், ‘தயிர் சாதம்தான் விஜய்யின் ஃபேவரைட்’ என எக்ஸ்க்ளூசிவ் தகவல் பகிர்ந்திருக்கிறார் மாளவிகா. ‘விடியற்காலை 4 மணிக்கெல்லாம் தூங்கி எழுந்துவிடும் விஜய், என்னுடைய 4 மணி நண்பர்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

இரவுப் பறவை ஸ்ருதி ஹாசன்!

June 27, 2020
மும்பையில் கொரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து ஹைதராபாத்துக்கு வீடு மாறிக் குடியேறிவிட்டார் ஸ்ருதி ஹாசன். சென்னையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால்தான் ஹைதராபாத்தைத் தேர்ந்தெடுத்தாராம். பகலில் முழுவதுமாகத் தூங்கிவிட்டு, இரவில் அமெரிக்க நண்பர்களுடன் வீடியோ சாட்டிங், பாட்டு, சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ்கள் என இரவுப் பறவையாக வாழ்ந்துவருகிறார் ஸ்ருதி.

கெளதம் மேனன் செம பிஸி!

June 27, 2020
‘துருவ நட்சத்திரம்’, ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’, ‘விடிவி-2’ என கையில் மூன்று படங்கள் வைத்திருக்கும் கெளதம் மேனன், ஓ.டி.டி நிறுவனங்களுக்காகவும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். ஏற்கெனவே வெற்றிமாறன், சுதா கோங்ரா, விக்னேஷ் சிவன் ஆகியோரோடு இணைந்து நெட்ஃபிளிக்ஸுக்காக ஆந்தாலஜி படம் இயக்கியிருக்கும் கெளதம், அமேஸான் பிரைமுக்காக அடுத்து ஒரு பெரிய புராஜெக்ட்டில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால் இது வெப்சீரிஸ் இல்லையாம்!

செப்டம்பரில் பிக் பாஸ் சீஸன் 4…?

June 26, 2020
பிக்பாஸ் அடுத்த சீசன் தொடர்பாக சேனல் தரப்பில் சிலரிடம் பேசுகையில். `லாக் டௌன் நாள்களிலேயே போட்டியாளர்களை இறுதி செய்துவிடுவது’ எனச் சேனல் முடிவு செய்திருந்ததாகவும், கமலிடம் இதுபற்றிச் சேனல் தரப்பிலிருந்து சொன்னபோது, `இப்போது வேண்டாம். சூழல் சரியாகட்டும்’ என கமல் சொன்னதாகவும் சொல்கிறார்கள். செப்டம்பரில் ஷோவை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்!

கணவனின் சபதத்தை நிறைவேற்றிய சமந்தா

June 26, 2020
நடிகை சமந்தா தலை கீழ் நிற்கும் யோகா செய்ய உள்ளதாக தெரிவித்தவுடன் அது கடினமானது இன்னும் நிறைய பயற்சி தேவை என்றார் சைதன்யா. ஆனால் தன்னால் அந்த பயிற்சியை இன்றே செய்ய முடியும் என்று முயன்றார். கச்சிதமாக அதை செய்தும் முடித்தார். சமந்தாவின் விடாமுயற்சியை பாராட்டிய சைதன்யா கேமராவில் சமந்தாவின் அசத்தலான யோகாசன போஸ்களை படமாக்கினார்.

மணிரத்னத்திற்கு நோ சொன்ன ஜெயம் ரவி

June 26, 2020
மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு முக்கிய காட்சியில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி நடிப்பதாக இருந்ததாம். ஆனால், ஆரவ்விற்கு ஸ்கூல் எக்ஸாம் என்று இருந்ததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.

மீண்டும் வடிவேலு – சுந்தர் சி கூட்டணி

June 26, 2020
சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. அவர்கள் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தான் இணைய உள்ளனர் என கூறப்படுகிறது. சுந்தர்.சி நடித்த இருட்டு என்ற பேய் படத்தினை இயக்கி இருந்த வி. இசட். துரை தான் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாராவின் சம்பளத்தை மிஞ்சும் மாஸ்டர் படநாயகி

June 26, 2020
பாலிவுட் ஆக்‌ஷன் கதையொன்றில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றிருக்கிறாராம் மாளவிகா மோகனன். ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தை இயக்கிய ரவி உதய்வார் இயக்க உள்ளாராம். சித்தார்த் சதுர்வேதி ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.இப்படத்திற்காக மாளவிகா மோகனனுக்கு ரூ 5 கோடி சம்பளம் தரப்படுகிறதாம். கடந்த 15 வருடமாக நடித்து வரும் நயன்தாரா தற்போதுதான் 3 அல்லது 4 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகை மாளவிகா மிக குறுகிய காலத்தில் நயன்தாரவை சம்பளத்தில் மிஞ்சி இருக்கிறார்.

மீண்டும் அசினா…? கோடம்பாக்கம் எதிர்பார்ப்பு

June 26, 2020
மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் வெற்றிக்கொடி நாட்டிய கையுடன், ‘பாலிவுட்’டிலும் தன் தடத்தை அழுத்தமாக பதித்தவர் அசின். தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து, அமைதியாக, ‘செட்டில்’ ஆகி விட்டார். தற்போது அசினுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சமீபகாலமாக, அசின் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அது குறித்து விசாரித்தபோது, ‘அசின், தன் கணவருக்கு உதவியாக சில தொழில்களை கவனித்து வருகிறார். அவரது கவனம் முழுதும், அந்த தொழில்கள் […]

வாய்ப்பு இருந்தால் திறமை காட்டுவேன் – பனிதா

June 26, 2020
ஆதித்ய வர்மா படத்தில் நடித்த பனிதா சிந்துவுக்கு, தமிழில் வரவேற்பு இல்லாததால், ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கவிதா அண்டு தெரசா என்ற ஆங்கில படத்திலும், சர்தார் உதம் சிங் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். ”எந்த மொழி படமாக இருந்தாலும் நடிக்கத் தயார். வாய்ப்பு வந்தால், திறமையைக் காட்டுவேன்,” என்கிறாராம் பனிதா. சர்தார் உதம் சிங் படத்தில், விக்கி கவுசலுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஹிந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பது […]

வாய்ப்பு தேடி களத்தில் களமிறங்கும் சதா

June 26, 2020
தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார் சதா. நீண்ட இடைவெளிக்குப் பின், சதா நடித்த, டார்ச்லைட் என்ற படம், இவரது சினிமா வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சவில்லை. இதனால், சில காலம் அமைதியாக இருந்த அவர், தற்போது மீண்டும் வாய்ப்பு தேடி களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக, சமூக வலைதளங்களில், தன்னுடைய வித விதமான புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். ஊரடங்கு காலம் முடிந்ததும், முழு வீச்சில் களத்தில் இறங்கி, ‘கோலிவுட்’டை ஒரு […]

அனைவரும் பிரார்த்தனை செய்வோம் – வேதிகா

June 26, 2020
”இயற்கை, மனிதனுக்கு ஏதோ உணர்த்துகிற விதமாக, இந்த காலக்கட்டம் அமைந்துள்ளது. எல்லா மக்களும், நலமாக இருக்க, அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். என் அழகான உடலுக்கு காரணம், நீச்சல் பயிற்சி தான். தினமும், சிறிது நேரமாவது, நீச்சல் பயிற்சி மேற்கொண்டால், மனம் லேசாகும்,” என, நடிகை வேதிகாகூறியுள்ளார்.

நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையும் வைத்து இயக்கமாட்டேன் – பிரபல இயக்குனர்

June 26, 2020
நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கிய படம் அறம். இதன் இரண்டாம் பாகம் உருவாகும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் நடிக்க நயன்தாராவுக்கு பதில், கீர்த்தி சுரேஷிடம் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியானது.இது குறித்து இயக்குனர் கூறுகையில், ”அறம் – 2 படத்தில் நடிக்க, கீர்த்தி சுரேஷிடம் எந்த பேச்சும் நடத்தவில்லை. நயன்தாராவை தவிர, வேறு எந்த நடிகையையும், வைத்து, அறம் – 2 படத்தை இயக்கமாட்டேன்,” என்றார்.

ஒவ்வொரு படத்திற்கும் ஆன்மா உண்டு – கோபி பிரசன்னா

June 26, 2020
பல படங்களுக்கு, ‘போஸ்டர்’ டிசைனராக பணியாற்றியவர் கோபி பிரசன்னா. கூறியதாவது:கடந்த, 1980 – -90களில், கைகளாலேயே, ‘டிசைன்’ செய்யும் பணி நடந்தது. சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் இவ்வாறே வடிவமாகின.பழைய படங்களுக்கு டிசைன் செய்யும் பணி, எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த, கமலின், ராஜபார்வை படத்திலிருந்து துவங்கியது. பாராட்டுகளை தொடர்ந்து, என் ஆர்வத்திற்கும்,கற்பனைக்கும் தடை போட முடியவில்லை. ஒவ்வொரு படத்திற்கும், ஒரு ஆன்மா உண்டு. அதை நான், விளம்பர வடிவமைப்பு மூலம் வெளிக்கொணர முயல்கிறேன்.

அதானியின் மின் கட்டண வசூலுக்கு கடும் கண்டனம் – கார்த்திகா

June 26, 2020
கோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கார்த்திகா; நடிகைராதாவின் மகள். மும்பையில்,அதானியின் அதிக மின் கட்டண வசூலுக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது: மும்பையில், ‘அதானி எலக்ட்ரி சிட்டி’ நிறுவனம், எந்த வகையான மோசடி நடத்துகிறது எனத் தெரியவில்லை. ஜூன் மாத மின் கட்டணம், கிட்டத்தட்ட, 1 லட்சம் ரூபாயை தொட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில், மீட்டர் கணக்கீடு எடுக்காத நிலையில், இந்த கட்டணம், அவர்களது மதிப்பீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல புகார்களை, மும்பைவாசிகள் […]

அஜித் தலைமையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி

June 26, 2020
சென்னையில் கொரோனா ஒழிப்பு பணிக்கு பறக்கும் கேமரா மூலம், கிருமி நாசினி தெளிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இது குறித்து, மருத்துவர் கார்த்திக் நாராயணன் கூறுகையில், ‘சிவப்பு மண்டலத்தில், கொரோனா ஒழிப்பு பணிக்கு, அஜித்தை ஆலோசகராக கொண்ட, ‘தக் ஷா’ குழுவினர் பறக்கும் கருவிகள் மூலம், கிருமி நாசினி தெளித்து, சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சென்னையில் கொரோனா ஒழிப்பு பணியில், அஜித் நிறைய பங்காற்றியுள்ளார்’ எனக் கூறியுள்ளார். அஜித் ரசிகர்கள், டுவிட்டரில், ‘அஜித் லீட் ட்ரோன் டூ பைட் கொரோனா’ […]

5வது இடத்திற்கு முன்னேறிய ரவுடி பேபி

June 25, 2020
இந்திய அளவில் யு-டியுபில் இடம் பெற்றுள்ள பாடல் வீடியோக்களில் ‘மாரி 2’ படப் பாடலான ‘ரவுடி பேபி’ பாடல் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி யூ-டியூபில் வெளியான இப்பாடல் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. தற்போது 87 கோடிக்கும் அதிகமான பார்வைகளை இந்தப் பாடல் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 லட்சம் பார்வைகள் இந்தப் பாடலுக்குக் கிடைத்து வருகிறது. இப்படியே போனால் இன்னும் ஐந்து மாதங்களில் இப்பாடல் […]

தத்துவ மழை பொழியும் அங்கிதா

June 25, 2020
பாலிவுட் மாடல் அழகி அங்கிதா தேவ், ஹிந்தி ஆல்பங்களில் மட்டுமே நடித்துள்ளார். இப்போதைக்கு, சூடான கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது ஒன்றையே வழக்கமாக கொண்டுள்ள இவர், சமீபத்தில், கையில் சிகரெட் உடன் உள்ள படத்தை பகிர்ந்து, ‘முதலில் உங்களை நேசியுங்கள். பின் இந்த உலகமே உங்களை நேசிக்கும்’ என, தத்துவ மழை பொழிந்துள்ளார்.

என் வாழ்க்கையை ரசிக்கிறேன் – ஐஸ்வர்யா தத்தா

June 25, 2020
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சினிமாவில் அறியப்பட்டார். தற்போது, அலேகா படத்தில், ஆரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் நடித்த, மிளிர் படத்தின், ‘பர்ஸ்ட் லுக்’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.இந்த கொரோனா காலத்தில், ‘போட்டோ ஷூட்’டில் கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா தத்தா கூறுகையில், ”என் வாழ்க்கையை, நான் எப்போதும் நேசிக்கிறேன். என் சொந்த உலகிற்கு நானே ராணி,” எனக் கூறியுள்ளார்.

நடிப்பு சரியிலைன்னா டென்ஷனாகிடுவான்!

June 25, 2020
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா கஜராஜ், தனது மகன் குறித்து பேசுகையில், `எப்படியோ பையன் படத்துல நடிச்ச பிறகு ‘முண்டாசுப்பட்டி’ மாதிரியான படங்கள்ல என்னுடைய ரோல் கவனிக்கப்பட்டு இன்னைக்கு தமிழ் சினிமா என்னையும் ஒரு நடிகனா ஏத்துக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். அப்பான்னாலும் நடிப்பு சரியிலைன்னா டென்ஷனாகிடுவான்’ என்கிறார்,

ஓ.டி.டி Vs தியேட்டர்….!

June 25, 2020
ஓ.டி.டி-யில் இதுவரை வெளியாகியிருக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் ரெஸ்பான்ஸும் இல்லை என்பதால் தியேட்டர் ஓனர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். அதேசமயம், ‘முதலுக்கு மோசமில்லை’ என்கிற அளவுக்கு தற்போது வருமானம் வந்துவிடுவதால், தமிழ்ப் படங்களை வாங்குவதற்கு ஓ.டி.டி நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகின்றன. ‘போகப்போக ஓ.டி.டி-யே வெல்லும் என்பதும் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தனுஷின் `தந்திரம்’…!

June 25, 2020
பெரிய நடிகர்களின் படங்களெல்லாம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் என்று கறாராக இருந்த சூழல் மெள்ள மாற ஆரம்பித்திருக்கிறது. முதல் ஆளாக தனுஷ் இந்த ஆட்டத்தை ஆரம்பித்து வைக்க விருக்கிறார். அவருடைய ‘ஜெகமே தந்திரம்’ ஜூலை இறுதியில் அமேஸானில் ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள். அப்படி ரிலீஸ் ஆனால், ‘ஓ.டி.டி-யில் முதலில் ரிலீஸ் ஆன கொஞ்சம்

சிம்பு செம பிஸி!

June 25, 2020
எல்லோரும் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்த காலத்தில், முழு ஓய்வில் இருந்த சிம்பு, எல்லோரும் ஊரடங்கில் அமைதியாக இருக்கும்போது செம பரபரப்பில் இருக்கிறார். வீட்டில் இருந்தபடியே கௌதம் மேனனின் குறும்படத்தில் நடித்த சிம்பு, அடுத்தடுத்து இயக்குநர்களிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் ‘மாநாடு’, ‘மஃப்டி’, விஜய்சந்தர் இயக்கத்தில் ஒரு படம், மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படம் என சிம்பு செம பிஸி!

முழு தயாரிப்பாளராகும் இணைத் தயாரிப்பாளர்!

June 25, 2020
‘மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார் அடுத்தடுத்து பல படங்கள் தயாரித்துவருகிறார். `இவர், நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர்’ என்கிறார்கள். விஜய்யின் கல்யாண மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அனைத் தையும் ஒப்பந்த அடிப்படையில் இவர்தான் நடத்திவருகிறாராம்.

டி.வி சீரியலில் யாஷிகா!

June 25, 2020
டி.வி சீரியலுக்கு வருகிறார் `பிக்பாஸ்’ புகழ் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நடிகை யாஷிகா ஆனந்த். பிரபல சீரியலில் வில்லியாக நடிக்கவிருக்கும் யாஷிகாவுக்கு ஒரு எபிசோடில் நடிக்க ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

ஊரடங்கு கலைத்துப் போட்ட வாழ்வு!

June 25, 2020
பிறவியிலேயே வளர்ச்சிகுறைபாட்டுக்கு ஆளான பரந்தாமன், திறமையால் பலரும் அறிந்த முகமாக இருக்கிறார். மனவளர்ச்சி குறைபாடுடைய தந்தை, விபத்தில் அடிபட்ட தாய், வளர்ச்சி குறைபாடுடைய சகோதரன் எனத் துயர் நிறைந்த குடும்பப் பின்னணி கொண்டவர். கொரோனா கால ஊரடங்கு பல எளியவர்களைப் போல பரந்தாமனின் வாழ்வையும் கலைத்துப் போட்டிருக்கிறது.

சமந்தாவுடன் சேர்ந்து யோகா செய்வது யார் தெரியுமா ?

June 23, 2020
நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் 48 நாள் யோகா செய்ய அழைப்பு விடுத்துள்ளார். சமந்தா மட்டுமல்லாது இன்னும் பல நடிகர்கள், தொடர்ச்சியாக யோகா செய்வது நம் உடல்நலத்தையும், நம் உடல் தோற்றத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். சமந்தா அவர் செய்யும் யோகா போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். கூடவே அவர் வளர்க்கும் குட்டி நாய் கூட உட்கார்ந்த நிலையில், கண்களை மூடிக் கொண்டு யோகா செய்வதையும் பாருங்கள்.

வாழ்த்து கூறியதில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ்

June 23, 2020
நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘மாஸ்டர்’ படப் பாடலான ‘குட்டி ஸ்டோரி’ பாடலை வயலின் மூலம் வாசித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் பாராட்டு கிடைத்தது. பல நடிகைகளும் கீர்த்தி சுரேஷின் வயலின் வாசிக்கும் திறமையை வாழ்த்தியிருந்தார்கள். இன்ஸ்டாகிராமில் மட்டும் அந்த வீடியோவை 13 லட்சம் பேர் பாத்திருக்கிறார்கள். டுவிட்டரில் 12 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

உச்சம் தொட்ட விஜய்க்கு வாழ்த்துக்கள் – வடிவேலு

June 23, 2020
நடிகர் விஜய், நேற்று தன், 46வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, திரைஉலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறினர்.நடிகர் வடிவேலு டுவிட்டரில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது:ராஜாவின் பார்வையிலே படம் முதல், சமீபத்தில் வந்த, மெர்சல் படம் வரை, உன்னுடன் பல படங்களில் நடித்துள்ளேன். உன்னுடைய வெற்றி, தோல்விகளை, உடன் நின்று பார்த்து வருகிறேன். இந்த சினிமா உள்ளவரை, உன் பெயர் ஒலிக்கும் அளவிற்கு உச்சம் தொட, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா. இவ்வாறு, […]

கொஞ்சம் சத்தமா பேசு, கவின் – பிரபல இயக்குநர்

June 23, 2020
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில், நடிகர் கவினும் ஒருவர். ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான இவர், தற்போது, லிப்ட் என்ற படத்தில், நடித்து வருகிறார். இவரது பிறந்த நாளை படக்குழுனருடன் பணியாற்றிய படங்களை, ‘டுவிட்டரில்’ பகிர்ந்து, வாழ்த்து கூறியுள்ளனர். டாக்டர் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் கூறுகையில், ”பிறந்த நாள் வாழ்த்து கவின். உன் அடுத்த படத்துக்காக காத்திருக்கிறேன். இன்றில் இருந்தாவது, மெதுவா பேசாம, கொஞ்சம் சத்தமா பேசு,” என, கூறியுள்ளார். இதற்கு கவின், ‘கஷ்டம் தாண்ணே… […]

திருமணம் எப்போது? ரீது வர்மா

June 23, 2020
நடிகை ரீது வர்மா தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சமூகவலைதளம் வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என தெளிவாக சொல்லிவிட்டேன். எனக்கு ஏற்றவரை எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் திருமணம். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும்”, என பதிலளித்துள்ளார்.

மகேஷ் பாபுவுடன் சண்டையிடும் அரவிந்த் சாமி

June 23, 2020
பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா எனும் படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தை இயக்குனர் பரசுராம் வடிவமைத்துள்ளாராம். இதில் அரவிந்த் சுவாமியை நடிக்க வைக்க அவரை தொடர்பு கொண்டு கதை சொல்ல இயக்குனர் பரசுராம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்சீரிஸில் கதாநாயகனாக அறிமுகமாகும் கவுதம் மேனன்

June 23, 2020
இயக்குனர் கவுதம் மேனன் நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கியமான போலீஸ் வேடத்தில் நடித்தார். ‘குயின்’ என்ற வெப்சீரிஸை இயக்கிய இவர், அடுத்து ஒரு வெப்சீரிஸில் நடிகராகவும் களமிறங்குகிறார். இதை ‘கிடாரி’ படத்தை இயக்கியவரும், ‘குயின்’ சீரிஸின் இயக்குனர்களில் ஒருவரான பிரசாத் முருகேசன் இயக்குகிறார். பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மதக்கம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் திருடன் – போலீஸ் கதையில் உருவாகிறது.

ரூட்டை மாற்றிய இந்துஜா

June 23, 2020
நடிகை இந்துஜா அதிரடியாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். இடுப்பு மடிப்பு தெரியும்படி சேலை அணிந்து, கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அதிர வைத்திருக்கிறார். இந்துஜாவா இது..! எனக் கேட்கும் அளவுக்கு இருக்கின்றன அந்த புகைப்படங்கள்.

விஜய் மூலம் விளம்பரம் தேடும் நந்திதா

June 23, 2020
அட்டக்கத்தி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நந்திதா. புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. நந்திதா கைவசம் தற்போது டானா, ஐபிசி 376, கபடதாரி உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே உள்ளன. இதில் ஐபிசி 376 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக விஜய் நடித்த தமிழன் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியுள்ளனர்.

ஏட்டிக்கு போட்டியாக விஜய் பிறந்த நாளில் டிரெண்டிங்கில் அஜித் முதலிடம்

June 23, 2020
மே 1 அஜித் பிறந்தநாள் வந்த போது விஜய் ரசிகர்களும் ஏட்டிக்குப் போட்டியாக விஜய் பற்றி சில ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர். அதற்குப் பதிலடியாக அஜித் ரசிகர்கள் நேற்று விஜய் பிறந்தநாளில் ஏட்டிக்குப் போட்டியாக ‘#NonpareilThalaAJITH’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர். இந்த ஹேஷ்டேக்கில் மட்டும் இதுவரையில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட டுவீட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன. விஜய் பிறந்தநாள் ஹேஷ்டேக்கான #HappyBirthdayVijay ஹேஷ்டேக்கிற்கு இன்று மட்டும் 6 லட்சம் டுவீட்டுகள் தான் உள்ளன.

பழைய திறமையை தூசி தட்டிப்பார்க்கும் கீர்த்தி சுரேஷ்

June 23, 2020
கீர்த்தி சுரேஷ் வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டவர் போலும். அதனால், இந்த கொரானோ ஊரடங்கில் மீண்டும் தன்னிடம் அந்தத் திறமை அப்படியே இருக்கிறதா என வாசித்துப் பார்த்துள்ளார். வயலினுடன் ஒரு போட்டோவைப் பதிவிட்டு, “இந்த சமயத்தில் வயலின் வாசிக்கும் என்னுடைய பழைய திறமையை தூசி தட்டிப் பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்ஆப் அலப்பறைகள் பண்ணும் ரைசா வில்சன்

June 23, 2020
சமூகவலைதளங்களில் யார் ஆண், யார் பெண் என தெரியாத அளவுக்கு பேஸ்ஆப் மூலம் அலப்பறைகளைக்கூட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த விளையாட்டில் பிரபலங்களும் தப்பவில்லை. அந்த வகையில் நடிகை ரைசா வில்சன், ரசிகர்கள் பேஸ்ஆப்பில் உருவாக்கிய தனது சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் லேசான தாடி மீசையுடன், வசீகரிக்கும் அழகான இளைஞராக ரைசா காட்சியளிக்கிறார்.

மிரள வைக்கும் பாத்திமா பாபு

June 23, 2020
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, தற்போது சினிமா மற்றும் ஒரு சீரியலிலும் நடிக்கிறார். தற்போது இளைஞர்களுக்கு சவால்விடும் வகையில் யோகா செய்து கலக்கி வருகிறார். இந்த 56 வயது ஓல்டு இஸ் கோல்ட் பியூட்டி. அவரது யோகா வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

ஹிந்தியில் சாதனை படைத்த நாய்கள் ஜாக்கிரதை

June 23, 2020
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான படம் நாய்கள் ஜாக்கிரதை. குழந்தைகளுக்கும், செல்ல நாய்களை வளர்ப்பவர்களுக்கும் இன்று வரை மனதுக்கு நெருக்கமான படமாகவே இருந்து வருகிறது. போலீஸ் அவுர் டைகர் என்ற பெயரில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. ஒரே வாரத்தில் 2 கோடி பேர் இப்படத்தைப் பார்த்துள்ளனர். டப்பிங் படங்களில் இது ஒரு சாதனை அளவாக கருதப்படுகிறது.

பழம்பெரும் நடிகை உஷாராணி காலமானார்

June 23, 2020
கேரளாவை சேர்ந்தவர் நடிகை உஷா ராணி. திருமலை தென்குமரி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு காலம் வெல்லும், முகமது பின் துக்ளக், ஜக்கம்மா, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 65 வயதான உஷா ராணி சென்னை ஆலப்பாக்கத்தில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று திடீர் உடல்நலக்குறை ஏற்பட்டது. உடடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

40 கி.மீ சைக்கில் ரைடு செய்த அருண் விஜய்

June 21, 2020
கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக வலைதளம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தற்போது அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 40 கிலோமீட்டர் சைக்கிள் ரைட் செய்துள்ளதை புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். சாலையில் செல்லாமல் வீட்டின் அருகே இந்த ஒர்க்அவுட்டை செய்துள்ள அவர் கொரோனா நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்திற்கும் கொரோனா தொற்று உறுதி

June 21, 2020
மறைந்த, ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது அவருடைய மனைவி நடிகை எம்.என்.ராஜத்துக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

சுஷாந்த் வீட்டிற்கு சென்று மத்திய அமைச்சர் அஞ்சலி

June 21, 2020
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாட்னாவில் உள்ள சுஷாந்த் சிங் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உருவ படத்துக்கு. மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இது பற்றிய படத்தை வெளியிடுள்ள அமைச்சர், ‘சுஷாந்த் திறமையானவர். திரையலகில் இன்னும் நிறைய சாதனைகள் செய்ய தகுதி உள்ளவர். அவரது இழப்பு வருத்தத்துக்குரியது. பாட்னா வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். அவரது தந்தை, குடும்பத் தாரிடம் எனது இரங்கலை தெரிவித்தேன் என அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு

June 21, 2020
தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என 4 மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இது இவர் நடிக்கும் 20வது படம். லாக்டவுனுக்கு முன்பு ஜார்ஜியாவில் படக் குழு படப்பிடிப்பு நடத்த சென்றது. கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே திரும்பிவந்தது. மனோஜ்பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை ராதா கிருஷ்ணா குமார் டைரக்டு செய்கிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்துக்கு ’ராதே ஷியாம்’ மற்றும் ‘ஓ டியர்’ என பெயரிடப்படவுள்ளதாக தகவல் பரவியது.

என்னை மட்டும் ஏன் அசிங்கப்படுத்துகின்றனர் ? பிரபல நடிகை

June 21, 2020
சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டவர் நடிகை ரியா சென். இவரது புகைப்படங்களால் ரசிகர்கள் கண்டபடி விமர்சித்தனர். இதுப்பற்றி, ”நான் குட்டை பாவடை அணிவதை சர்ச்சையாக்குகின்றனர். கவர்ச்சியா, முத்தக்காட்சியில் நடித்தால் துணிச்சல் பெண் என்கிறார்கள். முன்னணி நடிகைகள் இதுபோன்று உடை அணிந்தால் அவர்களை விமர்சிப்பது கிடையது. என்னை மட்டும் ஏன் இப்படி அசிங்கப்படுத்துகின்றனர். எனது படங்கள் வெளிவரும் சமயங்களில் எல்லாம் இதுபோன்று நடக்கிறது” என்கிறார் ரியா.

ரசிகரை பாராட்டிய நடிகர் கமல்!

June 20, 2020
தனது ரசிகர் ஒருவரின் டிக்டாக் வீடியோவைப் பார்த்த கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!” என்று கூறியுள்ளார்.

சுஷாந்த்தை தவிர்கவே லாபி நடந்திருக்கிறது!

June 20, 2020
சுஷாந்த் சிங்கின் தற்கொலை பாலிவுட்டில் காலங்காலமாக நடக்கும் ‘நெபடிச (Nepotism) அரசியலை’ (தங்கள் செல்வாக்கை வாரிசுகளுக்காகவும், உறவினர்களுக்காகவும் பயன்படுத்துவது) மீண்டும் பேசு பொருளாக்கியிருக்கிறது. `சுஷாந்த்தைப் படங்களில் நடிக்க வைக்காமல் இருக்கவே ஒரு லாபி நடந்திருக்கிறது’ என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.

வேதனையில் விஜய் சேதுபதி

June 20, 2020
கடவுள், மதம், நாட்டுநடப்பு பற்றியெல்லாம் எதார்த்தமாகப் பேசிவருவதால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து போன் செய்து தொந்தரவு தருகிறார்களாம். சோஷியல் மீடியாவில் தன்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புவதோடு, பர்சனலாகவும் நிறைய தொல்லைகள் தருகிறார்கள் என நண்பர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

கோலிவுட்டிலும் கொரோனா…?

June 20, 2020
கொரோனா தொற்று கோலிவுட்டிலும் பயங்கரமாகப் பரவுகிறதாம். முன்னணி இயக்குநர், இளம் இசையமைப்பாளர், நீண்டகாலமாக ஃபீல்டில் இருந்து, தற்போதுதான் கவனம் பெற்றுவரும் ஹீரோ எனப் பலரும் தற்போது குவாரன்டைனில் இருப்பதாகச் சொல்கிறார்கள். `ஊரடங்கு காலத்திலும், வீட்டில் நடக்கும் பார்ட்டிகளைக் குறைக்காததுதான் கொரோனா பரவலுக்குக் காரணம்’ என்கிறது கோலிவுட்.

மக்களுக்கு எப்பவும் வில்லனைத்தான் பிடிக்கும்…!

June 20, 2020
திரைப்படங்களில் வில்லன் கதாப்பத்திரம் குறித்து பேசிய இயக்குநர் ஷங்கர், `ஹீரோக்களுக்கு ஒரு சில ரூல்ஸ் இருக்கு. அதைத் தாண்டி அவன் ஒண்ணும் பண்ணமுடியாது. ஆனா, வில்லனுக்கு ரூல்ஸே கிடையாது என்னவேணாலும் பண்ணுவான். எல்லோருக்குமே ஷாக்கும் பயமும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் வில்லன் சுவாரஸ்யமுள்ளவனா இருப்பான். பேய் படம் பார்க்குறது பயம்தான். ஆனா, அதை விரும்பி பார்க்குறாங்கல்ல. அது மாதிரிதான்’ என்றார்.

இனி லீட் ரோல் தான் – கீர்த்தி சுரேஷ்

June 20, 2020
வழக்கமான ஹீரோயின் கேரக்டர்களில் இனி நடிப்பதில்லை’ என்று முடிவெடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய கதாபாத்திரம் லீட் ரோலாக இருக்க வேண்டும் அல்லது தன்னுடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனால், வழக்கமான ஹீரோயின் கதையோடு வருபவர்களையெல்லாம் கீர்த்தி வரவேற்பதில்லையாம்.

முதல்வருக்கு யோசனை கூறும் சேரன் !

June 20, 2020
தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து, நடிகரும், இயக்குனருமான சேரன் சென்னையில் தொற்று இல்லாதவர்களை, சொந்த ஊருக்கு செல்ல விருப்பப்படுபவர்களை, அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பி வைக்கலாம். இது, சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும், விரைவில் அவர்களை சரிப்படுத்தவும் உபயோகமாக இருக்கும். இது, என் தாழ்மையான கருத்து என அவர் கூறியுள்ளார்.

திரைப்படமாகிறது சுஷாந்த் மரணம்

June 20, 2020
பரப்பான விசயங்களை படமாக்குவதில் எப்போதுமே திரையுலகினருக்கு ஆர்வம் அதிகம். அந்தவகையில் சுஷாந்த் மரணமும் திரைப்படமாக இருக்கிறது. தற்கொலையா? கொலையா? : ஒரு நடிகன் மறைந்து விட்டான் என அப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாமிக் மௌலிக் என்பவர் இயக்குகிறார். சினிமா பின்புலமே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் நடிகர்களை திரையுலகம் எப்படி நடத்துகிறது, அவர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதைக்களம். பாலிவுட்டை மையப்படுத்தி […]

சமூக வலைதளத்தில் வைரலாகும் சாதனா விழிப்புணர்வு வீடியோ

June 20, 2020
தங்கமீன்கள், பேரன்பு படத்தில் நடித்த சாதனா, பிங்க் பேந்தர் தீம் மியூசிக்கை மையமாக வைத்து, விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோ மூலம், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

காதலியை கரம் பிடிக்கும் கும்கி அஸ்வின்

June 20, 2020
தயாரிப்பாளர் சாமிநாதனின் மகன் அஸ்வின். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான இவா் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கும்கி படத்தில் பெரிய கேரக்டரில் நடித்ததால் தன் பெயருக்கு முன்னால் கும்கியை சேர்த்துக் கொண்டார்.அஸ்வினும் அமெரிக்காவில் படித்த வித்யாஸ்ரீயும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்கள். தற்போது இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. வருகிற 24ந் தேதி அஸ்வின் வீட்டில் திருமணமும் […]

கொரோனாவால் மளிகை கடை திறந்த இயக்குநா்

June 20, 2020
மவுனமழை, ஒரு மழை நான்கு சாரல், பாரதபுரம், நானும் பேய்தான், படங்களை இயக்கியவர் பி.ஆனந்த் மளிகை கடை திறந்திருக்கிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வரும் இவா் 5 படங்களை இயக்கியிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மக்கள் படும் துன்பங்களை நேரில் பார்த்து, ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ள விசயத்தை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, முகலிவாக்கத்தில் ‘பாபு ஸ்டோர் ‘என்ற பெயரில் மளிகை கடை ஒன்றை தொடங்கி உள்ளேன் . இந்த கடை மூலம் […]

படத்தயாரிப்பில் பிசியான நடிகை சார்மி

June 20, 2020
நடிகை சார்மி, தற்போது படத்தயாரிப்பில் பிசியாக உள்ளார். விஜய்தேவரகொண்டா நடிக்கும், 10வது படம் இது. இப்படத்தின் கதை மற்றும் நடிகர்கள் குறித்து, பல வகையில் வதந்திகள் பரவின.இது குறித்து, சார்மி கூறுகையில், ”கதை உள்ளிட்ட எதுவும் மாற்றப்படவில்லை. கொரோனா நெருக்கடி தீர்ந்த பின், படப்பிடிப்பு துவங்கும். படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்,” எனவும் இப்படம், ஹிந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

தமிழ் இருக்கை துாதராக இமான்!

June 20, 2020
டொரொன்டோ பல்கலையில், தமிழ் இருக்கை துாதராக இசையமைப்பாளர் டி.இமானுக்கு கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.தமிழ், வாய் வழித்தொடர்பு என்பதை தாண்டி, மனித குலத்தின் வாழ்வியல், நாகரிகம் மற்றும் கலாசாரங்களை, தன் இலக்கியங்களில் உள்ளடக்கியதாகும். ‘மொழிகளின் தாய்’ என, தமிழ் புகழப்படுவது குறித்து, தமிழன் என்ற முறையில், நான் பெருமை கொள்கிறேன்.கனடாவின் முதல்தர பல்கலையான டொரொன்டோ, நம் தாய்மொழிக்கு இருக்கை அமைத்து அங்கீகரித்தது, பெருமைமிகு தருணம். எனக்கு தரப்பட்ட இந்த கவுரவம், தாய் மொழி மீது, நான் கொண்ட ஈடுபாட்டை இன்னும் […]

பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

June 19, 2020
பழம்பெரும் நடிகையான எம்.என்.ராஜமின் கணவரான பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். ஏ.எல்.ராகவனின் இறுதிச்சடங்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

3 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய ஆண்ட்ரியா

June 19, 2020
நடிகை ஆண்ட்ரியா மூன்று மாணவ, மாணவியருக்கு இன்று லேப்டாப்பை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். “உங்கள் வலது கை என்ன தருகிறது என்பதை இடது கைக்கு தெரியக் கூடாது என்ற நம்பிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். இன்ஸ்டா லைவ் வழியாக நன்கொடை அளித்த மக்களுக்காக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று மூன்று பேரின் வாழ்க்கை மாற்றப்பட்டுள்ளது. எனது சமையல் மற்றும் பாடும் அமர்வுகள் மூலம் சமூக சேவையை முன்னிலைப்படுத்துவேன்,” என தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை சரியாக பயன்படுத்திய யாஷிகா

June 19, 2020
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் யாஷிகா, இந்த காலகட்டத்தை மிக சரியாக பயன்படுத்தியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தனது எடையை குறைத்துள்ளதுடன், குட்டி தொப்பையையும் கரைத்துள்ளார். இதனை செல்பி எடுத்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் யாஷிகா.

வேண்டுகோள் வைக்கும் விஜய் ஆண்டனி

June 19, 2020
நடிகர் விஜய் ஆன்டனி தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘வணக்கம் நண்பர்களே! அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? தீவிரமான, ‘லாக் டவுன்’ துவங்குகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அனைவரும் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹிந்தியில் களமிறங்கும் ஆர்யா

June 19, 2020
ஆர்யா – சாயீஷா திருமணத்திற்கு பின் படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. இதையடுத்து, கன்னட திரையுலகில் இருந்து அழைப்பு வந்ததால், அங்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆர்யாவும், அடுத்ததாக ஹிந்தி திரையுலகிற்குள் செள்றுள்ளார். 3 தேவ் என்ற ஹிந்தி திரைப்படத்தில், ஆர்யாவுக்கு முக்கியமான வேடமாம். இந்த படம் வெற்றி பெற்றால், ஹிந்தி திரையுலகை ஒரு கை பார்த்து விடும் முடிவில் இருக்கிறார் ஆர்யா.

கன்னட ரீமேக்கில் ஆரியான் ஷியாம்

June 19, 2020
கன்னடத்தில் பரியேறும் பெருமாள் படம், ‘ரீமேக்’ ஆக உள்ளது. இதில், ஷியாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில், கிருஷ்ண சுவாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, ஆரியன் ஷியாம் மாலையிட்டு, மரியாதை செலுத்தினார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தி கங்கையில் கரைப்பு

June 19, 2020
பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த்சிங்கின் உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான பிஹார் மாநிலத்தின் பாட்னாவுக்கு அஸ்தி கொண்டுவரப்பட்டது. பாட்னாவில், திகாகாட் என்ற இடத்தின் வழியாக ஓடும் கங்கை நதியில் சுஷாந்தின் அஸ்தியை சுஷாந்தின் தந்தை, இரண்டு சகோதரிகள் ஆகியோர் வேத பண்டிதர்கள் முன்னிலையில் படகில் சென்று கரைத்தனர். இதே இடத்தில்தான் அவரது அம்மாவின் அஸ்தியும் கரைக்கப்பட்டது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

விரைவில் காதலனை திருமணம் செய்கிறார் நடிகை நிஹாரிகா

June 19, 2020
தமிழில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிற படத்தில் நடித்தவர் நடிகை நிஹாரிகா. இவரும் குண்டூரைச் சேர்ந்த சைதன்யா ஜொன்னல கட்டா என்பவரும் நீண்ட நாட்களாக பழகி வந்தனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. நிஹாரிகா நடிகர் நாகேந்திர பாபுவின் மகள். சிரஞ்சீவி, பவன் கல்யாணின் நெருங்கிய உறவினர் மகள்.

நெகிழவைத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

June 19, 2020
பேராவூரணி அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் மற்றும் அதனுள் இருந்த பொருள்கள் அனைத்தும் தீக்கிரையாகின. உடுத்துவதற்கு ஒரு உடைகூட இல்லாமல் போன துயரத்தில் தவித்து வந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நேசக்கரம் நீட்டியதுடன் தேவையான உதவிப் பொருள்களையும் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நெகிழ வைத்துள்ளனர்.

ரோஜா சீரியலில் கமிட் ஆன யாஷிகா!

June 19, 2020
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்த, `பிக் பாஸ்’ புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் சீரியல் பக்கம் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி இருக்கிறார். சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் சீரியலான `ரோஜா’வில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். `ஹீரோவுக்கு கேர்ள் ஃப்ரெண்டா வர்றாங்களா அல்லது வில்லியாங்கிறதெல்லாம் லாக்டௌன் முடிஞ்சு ஷூட்டிங் தொடங்கின பிறகுதான் தெரியவரும்’ என்கிறது யூனிட் வட்டாரம்.

திரைப்பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தன் காலமானார்!

June 19, 2020
அய்யப்பனும் கோஷியும் மலையாள திரைப்பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். 48 வயதான அவர் திருச்சூரில் உள்ள ஜூப்லி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று இரவு மரணமடைந்தார். அவரது மறைவுக்கு, மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் பிறந்த நாளில் பிகில் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

June 18, 2020
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வருகிறது. அதனை ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவுவதால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என விஜய் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற பிகில் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட வுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம்

June 18, 2020
மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வரும் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தனது வீட்டில் தனது திருமணம் நடக்க இருப்பதாகவும் பீட்டர் பால் என்பவர் தான் மணமகன் என்றும் வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் கொரோனா குமார்

June 18, 2020
கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளியான படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படம் 2013ல் வெளி வந்தது. அதில் விஜய் சேதுபதி, நந்திதா, சுவாதி ரெட்டி, அஸ்வின், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்தது. இந்நிலையில் இந்த படம் வந்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது அதன் ஸ்பின் ஆப் படமாக ‘கொரோனா குமார்’ என்ற புதிய படம் உருவாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

லாக் டவுனில் ஸ்லிம்மான யாஷிகா ஆனந்த்

June 18, 2020
லாக்டவுன் காலத்தை யாஷிகா ஆனந்த் உடல் தோற்றத்தை கச்சிதமாக குறைக்க பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். வயிறு இடுப்பு பகுதியில் போட்டிருந்த அதிகப்படியான தசைகளை அளந்து வைத்தார் போல் கச்சிதமாக குறைத்து இப்ப எப்படி இருக்கேன் என்று கேட்டு ஸ்லிம் தோற்ற படங்களை வெளியிட்டு கிக் ஏற்றியிருக்கிறார். இவ்வளவும் இந்த 3 மாத கொரோனா ஊரடங்கில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றம் என தெரிவித்திருக்கிறார்.

எமோஷனல் பதிவை பகிர்ந்து கொண்ட டிடி

June 18, 2020
டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில், 15 வருடங்களுக்கு முன்னர் மறைந்த தனது தந்தைக்கு அவர் எழுதிய கடிதத்தை டிடி பகிர்ந்துள்ளார். தனது அப்பாவை பற்றி பெருமையோடு குறிப்பிட்ட டிடி, அவருக்கு ஒரு சட்டை கூட வாங்கி கொடுக்கமுடியவில்லை எனும் வருத்தத்தை எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் சுப்புராஜ்

June 18, 2020
கொரோனா ஊரடங்கால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவருவதாக பரவிய வதந்தி பற்றி கார்த்திக் சுப்புராஜ் “தற்போதைக்கு தயாரிப்பாளரிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை. நிச்சயமாக தியேட்டர் திறக்கப்பட்ட பிறகு ரிலீஸ் செய்வோம்” என கார்த்திக் சுப்புராஜ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சுஷாந்த் அனுப்பிய கடைசி மெசெஜ்! பிரபல பத்திரிக்கையாளர் வெளியீடு

June 18, 2020
சுஷாந்த் தனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ். சார் நான் விரும்பிய அனைத்தும் நான் பெற்று விட்டேன். யாருடைய இருப்பு மற்றும் மறைவிற்காக எனது மன அமைதி மற்றும் புன்னகையுடன் நான் பேரம் பேச விரும்பவில்லை. இத்துடன் எல்லாம் நன்றாக மாறப்போகிறது. காலை வணக்கம்” என்று மெசேஜ் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.

சுஷாந்த்தைப் போன்று நானும் தற்கொலை செய்ய விரும்பவில்லை – பூனம் கவூர்

June 18, 2020
நடிகை பூனம் கவூருக்கு நரம்பு பிரச்னை உள்ளது. துபாயிலிருந்து வந்த அவரை தோழி பார்த்துக் கொண்டார். தனக்கு என்ன நடந்தது என்பது அவருக்கும் தெரியும். என்னை இந்த நிலைக்குள்ளாக்கிய இயக்குனரை மூன்று முறைக்கு மேல் சந்தித்து என்னை இந்த நிலையிலிருந்து விடுவிக்கும் படி கேட்டார். என் பெயர், புகழ், சந்தோஷம் எல்லாமே என்னிடமிருந்து காணாமல் போய்விட்டது. நான் நிம்மதியாக தூங்கி 3 வருடம் ஆகி விட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதுபோல் […]

விக்ரமுக்கு கதை சொன்ன தருணம்!

June 18, 2020
ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படம் வெளியாக 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. `விக்ரமுக்கு நீங்க `அந்நியன்’ கதையைச் சொன்ன தருணம் ஞாபகமிருக்கா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஷங்கர், `மூணு கேரக்டர்கள்ல எப்படி நடிக்கிறது, முடி, உடம்பு எல்லாம் ஒவ்வொரு கேரக்டருக்கும் எப்படி வித்தியாசமா பண்றதுனு நிறைய கேள்விகள் அவருக்கு தோணிக்கிட்டே இருந்தது. ஆனால், படம் எடுக்க எடுக்க அவருக்கு தெளிவாகிடுச்சு’ என்றார்.

தானும் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்டேன் – பிரகாஷ் ராஜ்

June 18, 2020
நடிகர் பிரகாஷ்ராஜ் சுஷாந்த் பற்றி கூறுகையில், என் குழந்தை சுஷாந்தைப் போல நானும் அதிகார வர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டேன். என் காயங்கள் என் சதையை விட ஆழமானவை. நான் தாங்கிக் கொண்டேன். என் குழந்தை சுஷாந்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மீண்டும் நாம் அவனை பெற முடியுமா? அதிலிருந்து மீண்டு எழுந்து நிற்கப் போகிறோமா? அல்லது கனவுகளை சாகடிக்கப் போகிறோமா?. என பதிவிட்டுள்ளார்.

மகேஷ்பாபுவிற்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

June 17, 2020
மகேஷ் பாபு சரிலேறு நீக்கவேறு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பரசுராம் இயக்கும் ‘சரக்கு வாரி பாட்டா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இந்நிலையில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்வளை வெளி வந்துள்ளன . கொரோனா ஊரடங்கு முடிவிற்கு பின் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர் .

தள்ளிப்போன மாஸ்டர்!

June 17, 2020
நடிகர் விஜய், காணத்தூர் வீட்டில் இருக்கிறார். மகன் ஜேசன் சஞ்சயும் கனடாவிலிருந்து சென்னை வந்துவிட்டார் என்கிறார்கள். வீட்டுக்குள் வெளியாட்கள் நுழையத் தடை. ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரும் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவை மட்டுமே லாக்டெளன் நேரத்தில் சந்தித்திருக்கிறார் விஜய். தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட ‘மாஸ்டர்’ ரிலீஸ் பொங்கலுக்குத் தள்ளிப் போயிருக்கிறாதாம்!

வீட்டுக்குள் முடங்கிய ரஜினி!

June 17, 2020
லாக்டெளனின் ஆரம்ப கட்டத்தில் சகஜமாக இருந்தார் ரஜினி. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என நெருங்கிய நண்பர்களை போயஸ் கார்டனுக்கு வரவைத்துச் சந்தித்தார். நோய்த் தொற்று தீவிரமானதும், வீட்டைவிட்டு வெளியேவருவது, வீட்டுக்குள் மற்றவர்களை அனுமதிப்பது என இரண்டையுமே முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார் ரஜினி.

சிவகார்த்திகேயன் படம் டிராப்பானது ஏன்?

June 17, 2020
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த படம் டிராப்பாகிவிட்டது’ என்கிறார்கள். ஊரடங்கு முடிந்ததும், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தைத் தொடங்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படம் முடியவே டைம் ஆகும் என்பதால், சிவகார்த்திகேயனும் வேறு படங்களை கமிட் செய்துவிட்டார். `இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்த லைகா, பின்வாங்கிவிட்டதால் கூட்டணி முறிந்தது’ என்கிறார்கள்.

பேய் டு தேவதையாகும் ஸ்ருதி ஹாசன்!

June 17, 2020
ஏற்கெனவே ‘பிசாசு’ எனும் பேய்ப் படத்தை இயக்கிய மிஷ்கின் அடுத்து ‘காவு’ எனும் பேய்ப் படத்தை இயக்குகிறார். `முதலில் பெண்ணைப் பேயாகக் காட்டி, பின்பு தேவதையாக மாற்றிய ‘பிசாசு’ ஸ்டைலில்தான் இந்தப் படமும் இருக்கும்’ என்கிறார்கள். இந்தப் படத்தில் பேய் டு தேவதை ட்ரான்ஸ்ஃபர்மேஷனில் நடிக்க விருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

எனக்கும் கல்யாணமா…? – கடுப்பான ஹன்சிகா!

June 17, 2020
‘தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்து, பின்னர் சிம்புவுடன் காதல், மோதல் என ஆகி, மீண்டும் மும்பையிலேயே செட்டில் ஆனவருக்குக் கல்யாணம்’ என யாரோ கொளுத்திப்போட, கடுப்பாகியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. ‘‘எனக்குத் திருமணம் எப்போது என நான்தான் முடிவு செய்ய வேண்டும். நான் தொடர்ந்து படங்கள், வெப்சீரிஸ் என நடிப்பில்தான் கவனம் செலுத்துகிறேன்’’ எனச் சொல்லியிருக்கிறார் ஹன்சிகா.

தயாரிப்பில் பிஸியான கமல்…!

June 17, 2020
தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு அடுத்து ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் என படங்கள் தயாரிப்பதில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பயங்கர பிஸி. ‘நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ், எப்படி பெரும் பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கிறது?’ என்ற கேள்விக்கு, ‘ஒரு பிசினஸ் டீம், ராஜ்கமல் நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறது’ என்கிறார்கள்.

விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?!

June 17, 2020
ஊரடங்கு முடிந்ததும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். `ஷூட்டிங் தொடங்க எப்படியும் அக்டோபர், நவம்பர் மாதமாகிவிடும்’ என்கிறார்கள். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்!.

`அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குநருக்கு மாரடைப்பு!

June 17, 2020
`அய்யப்பனும் கோஷியும்’ என்ற ஹிட் படத்தின் இயக்குநர் சச்சி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அவர் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுஷாந்துக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை!

June 17, 2020
சுஷாந்த் மனதளவில் வலிமை இல்லாதவர் என்ற கருத்தை நிராகரித்து பேசிய நடிகை கங்கனா, “ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் உதவித்தொகைப் பெற்ற ஒருவர் எவ்வாறு மனரீதியில் பலவீனமாக இருக்க முடியும்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவருக்கு பாலிவுட்டில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் தொடரில் ஈழ தமிழ்ப்பெண்

June 16, 2020
ஹாலிவுட்டின் பிரபல நடிகையும், எழுத்தாளருமான மிண்டி கலிங் இயக்கிய, ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ என்ற தொடர், ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் வெளியாகி, உலகம் முழுக்க, அதிக பார்வையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. இத்தொடரில் நடித்த, தமிழ் பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன், 18, கூறியதாவது: நான் கனடா நாட்டு தமிழ்பெண். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய, தமிழ் தம்பதியின் மகளாக நடித்தேன். படப்பிடிப்பை, ஒரு பள்ளியின் வகுப்பறையில் இருப்பது போல் தான், நான் உணர்ந்தேன். நான் வாழும், கனடாவில் உள்ள, […]

அன்பை மட்டும் வரமா தாருங்கள் – அருண் காமராஜ்

June 16, 2020
நடிகரும், இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் தன், 36வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ‘டுவிட்டரில்’ அவர் கூறுகையில், ‘அன்பு மட்டுமே வரம். அதை, வாரி வாரி தரும் உங்கள் அத்தனை நெஞ்சங்களுக்கும், வாழும் காலமனைத்தும் கடமைப்பட்டுள்ளேன். வாழ்த்துகிற ஒவ்வொரு உள்ளத்திற்கும், என்றும் அன்பானவனாகவே வாழ்வதே என் ஆனந்தம். நன்றிகள் கோடி அன்புள்ளங்களே’ என, தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

லாக் டவுனில் மொட்டை மாடியே நம்பும் பிரபலங்கள்

June 16, 2020
கொரோனா காலத்தில் அவரவர் வீட்டு மொட்டை மாடி தான், எல்லாமுமாக இருக்கிறது. நடிகையர் பலர், மொட்டை மாடியை, ‘போட்டோ ஷூட்’ தளமாக்கி விட்டனர்.கவுதம் மேனன் உள்ளிட்ட இயக்குனர்கள், மொட்டை மாடியை, படப்பிடிப்பு தளமாக்கி விட்டனர். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாருடன், பேச்சுலர் படத்தில் நடித்துள்ள திவ்யபாரதி, மொட்டை மாடியில் எடுத்த படங்களை, ‘டுவிட்டரில்’ பகிர்ந்து, ‘கண்கள் பேசுகிறதா?’ என, கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷங்கர் தயாரித்த ஈரம் 2 படத்தின் கதை தயார்

June 16, 2020
ஈரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டம் உள்ளதாக இயக்குநர் அறிவழகன் கூறியுள்ளார். இதற்கான கதையை தயார் செய்து விட்டதாகவும், இயக்குநர் ஷங்கர் தயாரிக்க தயாராகும்போது ஈரம் 2ம் பாகம் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுஷாந்தின் மரண வலியை நானும் அனுபவித்துள்ளேன் – மீரா மிதுன் உருக்கம்

June 16, 2020
நடிகை மீரா மிதுன், பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை பற்றிய உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்தாண்டு நானும் சுஷாந்த் இடத்தில் தான் இருந்தேன். எனவே அவரது வலியை என்னால் உணர முடிகிறது. அவர் ஏன் இந்த தற்கொலை முடிவை எடுத்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த சினிமா துறை கேவலமான அரசியலாலும், தன்னுடைய முன்னேற்றத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் கொடூரமான மக்களால் நிரம்பியிருக்கிறது. அதனால் மனதளவில் இங்கே சமாளித்து நீடித்திருப்பது மிகவும் […]

சுஷாந்த் சிங்கிற்கு யாரும் உதவவும் இல்லை, உறுதுணையாக நிற்கவும் இல்லை

June 15, 2020
பாலிவுட்டில் புகழ்பெற்ற ஸ்டைலிஸ்டும், சுஷாந்தின் தோழியுமான சப்னா பவானி, கஷ்டத்தில் இருந்த சுஷாந்துக்கு யாரும் உதவவில்லை என்ற பகீர் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”கடந்த சில ஆண்டுகளாக சுஷாந்த் அனுபவித்த கஷ்டங்களில் எந்த ரகசியமும் இல்லை. சினிமாவில் இருக்கும் யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்கவும் இல்லை, அவருக்கு உதவ கைகொடுக்கவும் இல்லை. உண்மையில் சினிமாத்துறை எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதற்கு இன்று வரும் டுவீட்களே சாட்சி. இங்கே யாரும் உங்களுக்கு நண்பன் இல்லை. ஆன்மா […]

கொரோனா பெயரில் புதிய படம் – தாமரைச் செல்வன்

June 15, 2020
கொரோனா தொற்று பற்றிய படத்தை, கொரோனா என்ற பெயரில் சினிமாவாக எடுக்கின்றனர். ‘இந்தியன் சினி மேக்கர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தை, கதை, திரைக்கதை எழுதி, தாமரைச்செல்வன் இயக்குகிறார். நடிகர் ராகவேந்திரா நாயகனாக நடிக்க, நடிகை தீபிகா நாயகியாக நடிக்கிறார். வில்லனாக விஜய் வினாயக் நடிக்கிறார்; மூவரும் புதுமுகங்களாவர். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், காதல் சுகுமார், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அன்று ராமன் போட்ட கோட்டை தாண்டியதால் சீதை கடத்தப்பட்டார். இன்று பிரதமர் மோடி போட்ட ஊரடங்கு எனும் கோட்டை பலர் […]

சுஷாந்த் சிங்கின் மரணச் செய்தியால் மயங்கி விழுந்த தந்தை

June 15, 2020
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று மதியம் 2 மணிக்கு தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுஷாந்த்சிங்கின் மரணச்செய்தியை போலீசார் பாட்னாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தபோது, மகனின் மரணச் செய்தி கேட்டு அவரது தந்தை கிருஷ்ணகுமார் உடனே மயங்கி விழுந்ததாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனாவை யாராவது பரப்பி விட்டிருப்பார்களோ ?

June 15, 2020
உலகம் முழுவதும் தீவிரமாய் பரவும் கொரோனா வைரஸை யாராவது பரப்பி விட்டிருப்பார்களோ என்று ரைசா சந்தேகத்தை கிளப்பி உள்ளார். இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில், நான் தற்போது மீண்டும் வேலையைத் தொடங்க விரும்புகிறேன். ஆனால் அது அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வைரஸ் இங்கு ஒரு காரணமாகத்தான் வந்திருக்கிறதா. யாரோ வேண்டுமென்றே அதை பரப்பினார்களா? அதைப்பற்றி நாம் அனைத்தும் கற்றுக் கொண்டோமா?, இதிலிருந்து நாம் மீண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ. என்று கேள்வி […]

வீட்டு தோட்ட பராமரிப்பில் சமந்தா

June 15, 2020
லாக்டவுனால் வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா வீட்டுத் தோட்டங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பாக வீட்டுக்குள் வளர்த்த கீரைகளைப் பற்றிப் பதிவிட்டிருந்தார். பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் பால்கனியின் அவருடைய செடிகளுக்கு நடுவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மும்பை நடிகைகளுக்கு மட்டும் அதிக வாய்ப்புகள் – பரபரப்பு தகவல்

June 15, 2020
தமிழில் நட்பதிகாரம் 79 படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தேஜஸ்வி மடிவாடா. அங்கு ‘மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் பார் சேல், ஸ்ரீரீமந்துடு’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கமிட்மென்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தேஜஸ்வி தெலுங்கு மீடியா ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி, டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதிப்பதால் தான் மும்பை நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

சி.ஐ.ஐ. மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவராக தேர்வு

June 15, 2020
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கவுரவ தலைவராக இருந்த தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், தற்போது சி.ஐ.ஐ., மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவராக தேர்வாகியுள்ளார். ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர் கூறுகையில், ”இந்த செய்தி இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இப்பதவியை எனக்கு அளித்தது மிகவும் பெருமையான ஒன்று. ”தற்போதைய சூழலில், நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள திரைத்துறையின் சவால்களை, இயன்ற வரை முழுமனதுடன் சமாளிப்பேன்,” என்றார். இவர், 45 படங்கள், 7,500, ‘டிவி’ தொடர்களை, […]

பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால்

June 15, 2020
ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகும் காட்டேரி படத்தின், ‘என் பேரு என்ன கேளு…’ என்ற முதல் பாடலை, நடிகை காஜல் அகர்வால் இன்று வெளியிடுகிறார். வைபவ், சோனம் பஜ்வா, ஆத்மிகா நடித்துள்ள இப்படத்தில், வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சுஷாந்த் சிங் மரணம் அதிர்ச்சி தருகிறது – பிரதமர் மோடி இரங்கல்

June 15, 2020
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34), மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ”சுஷாந்த் சிங் திறமையான நடிகர். சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். டிவியில் இருந்து சினிமாவில் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவரின் வளர்ச்சி பலருக்கு உந்துதலாக இருந்தது. நினைவில் நிற்க கூடிய கதாபாத்திரங்களை அவர் விட்டு சென்றுள்ளார். அவரின் மரணம் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆறுதல்கள். ஓம் சாந்தி” என […]

விக்ரம் – துருவ் இணையும் மதுரை கேங்ஸ்டர்

June 13, 2020
விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் சேர்ந்து நடிக்கும் கார்த்திக் சுப்புராஜின் படம், மதுரை கேங்ஸ்டர் ஒருவரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டதாம். படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், அப்பாவுக்கும் – மகனுக்குமான ஹீரோயின் தேடல் தீவிரமாக நடக்கிறது. விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

கமலின் புரொமோஷன் பிளான்!

June 13, 2020
தலைவன் இருக்கின்றான்’ படப்பிடிப்பே ஆரம்பிக்கவில்லை. ஆனால், படத்துக்கான புரொமோஷன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் கமல்ஹாசன். முதலில் விஜய்சேதுபதி, அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் என லைவ் உரையாடல்களை நிகழ்த்திவரும் கமல், அடுத்து வடிவேலுவுடன் இன்ஸ்டாகிராம் லைவில் கலந்துரையாட இருக்கிறாராம். ‘இப்போதைக்கு அரசியல் பேச்சுகள் வேண்டாம்’ என்கிறாராம் வடிவேலு.

ஸ்ருதி ஹாசன் தான் லீடிங் பாஸ்!

June 13, 2020
நடிகைகளுக்குள் சம்பளப் போட்டியைவிட, ‘இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டிருப்பது யார்?’ என்கிற போட்டிதான் உச்சத்தில் இருக்கிறது. இதில் எல்லா நடிகைகளையும்விட லீடிங்கில் போய்க்கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன் 1,40,00,000 ஃபாலோயர்களைத் தாண்டியிருக்கிறார். சமந்தா ஒரு கோடி ஃபாலோயர்ஸ் என்ற எண்ணிக்கையைத் தாண்டியிருக்கிறார்.

ஆன்லைன் வகுப்பு – சீறும் ஆர்.ஜே பாலாஜி!

June 13, 2020
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியிருப்பதற்கு கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. ‘சின்னக் குழந்தைகளுக்கும் ஆன்லைனில் 8மணி நேர வகுப்புகள் நடக்கின்றன. பெரியவர்களே நீண்ட நேரம் கம்ப்யூட்டரை பார்த்தால் கண் பார்வை பிரச்னை வரும்போது, குழந்தைகளுக்கு வராதா? அனைவரின் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்குமா, அப்படியிருந்தாலும், 2 குழந்தைகள் இருந்தால் என்ன செய்வது?’ என்கிறார் காட்டமாக.

படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை!

June 13, 2020
சீரியல் படப்பிடிப்புகள் ஆரம்பிக்க அனுமதி கிடைத்துவிட்டாலும் முக்கியமான சேனல்கள் படப்பிடிப்புகளைத் தொடங்கவில்லை. ‘ஸ்பாட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டால் 40 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தர வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருப்பதால், பல தயாரிப்பு நிறுவனங்கள் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தயக்கம் காட்டுகின்றனவாம்.

கடவுள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தவும்

June 13, 2020
இந்த நாளில், நீங்கள் விழித்து எழுந்திருக்கும் வாய்ப்பை, கடவுள் உங்களுக்கு தருகிறார். ‘அதை நீங்கள், சிறந்த நபராகவும், வாழ்க்கையை அனுபவிக்க ஒரு வாய்ப்பாகவும், மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும், நேசிக்கவும், நேசிக்கப்படுவதற்கான வாய்ப்பாகவும் எண்ணுங்கள். தவறுகளை சரி செய்யும் வாய்ப்பை தவற விடாதீர்கள்’ என, ‘டுவிட்டரில்’ பதிவிட்டு, சொல்லால் புல்லரிக்க வைத்துள்ளார் நடிகை சஞ்சனா சிங்.

வனிதாவின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்?

June 13, 2020
அறிமுக படமான, சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். தொடர்ந்து, படங்களில் நடித்தவர், படத்தயாரிப்பு, பிக்பாஸ் ஷோ, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தற்போது, ‘யுடியூப்’ சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் விஜய்க்கு ஆடை அலங்கார நிபுணராக பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவரது ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்?

சமூக இடைவெளியை அறிவுறுத்தும் சமந்தா

June 13, 2020
சக நடிகையரை பாராட்டுவதில், முன்னணியில் உள்ளவர் சமந்தா. சமீபத்தில் வெளியான, பெண்குயின் டீசரை பாராட்டியுள்ள அவர், தற்போது வீட்டிலேயே, கீரை தோட்டம் போட்டு, அதில் அறுவடையும் செய்துள்ளார். இதற்கான ஐடியாவை, அவரே ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அத்துடன் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

டுவிட்டரில் இணைந்தார் சதா

June 13, 2020
லாக்டவுனில் நடிகர் – நடிகையர் பலர், டுவிட்டர், முகநுால், இன்ஸ்டாகிராம் என, பல தளங்களில் தங்களை பற்றிய தகவல்களை, வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்தில், நடிகை சதாவும் இணைந்துள்ளார். டுவிட்டரில் தன்னை நடிகர், விலங்கு ஆர்வலர், பாதுகாவலர் என அடையாளப்படுத்தியுள்ள அவர், ஆரம்பத்திலேயே அதிரடி கவர்ச்சிப் படத்தை பதிவிட்டு, ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மீண்டும் காதலிக்க தயாரான அமலா பால்

June 13, 2020
நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். அவரது போஸ்ட் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு முழு நிலவு இரவில் அவள் (அமலா பால்) காதலில் விழுந்துவிட்டால். அந்த நிலா வெளிச்சத்தில் தான் தன் மீதே காதல் கொண்டதை அவள் உணர்ந்தால்”, என குறிப்பிட்டுள்ளார்.

கவர்ச்சி நடிகையருக்கே சவால் விடும் நடிகை

June 12, 2020
‘கவர்ச்சி நடிகையருக்கே சவால் விடுக்கும் வகையில், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான மகேஸ்வரி, இந்த கொரோனா காலத்தில் மாடல் அழகியாக மாறி உள்ளார். பலதரப்பட்ட கவர்ச்சிப் படங்களை, ‘டுவிட்டரில்’ பகிர்ந்து வரும் இவர், கூறியதாவது: குறிப்பிட்ட வயதுக்கு பின், உடை அணியும் விஷயத்தில், என்னைப் பின்பற்றுங்கள். எந்த ஒரு, ‘ஜட்ஜ்மென்ட்’டும் இல்லாமல், எனக்க பிடித்த விஷயங்களை என்னால் செய்ய முடிவதே, என் மகிழ்ச்சிக்கு காரணம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தள்ளிப்போன வெனிஸ் திரைப்படவிழா

June 12, 2020
உலகில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமானது வெனிஸ் திரைப்பட விழாவாகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடக்குமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இணையளத்தில் நடக்கலாம் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெனிஸ் திரைப்பட விழா திட்டமிட்டபடி செப்டம்பரில் நடைபெறும் என்று வெனிஸ் ஆளுநர் லூகா ஸாயா அறிவித்துள்ளார். விழா திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடைபெறவிருந்தாலும் அதில் குறைவான திரைப்படங்களே திரையிடப்படும் என்று ஸாயா தெரிவித்துள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் – விஜய்

June 12, 2020
வருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், அன்னதானம் என நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவார்கள். தற்போது கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

போட்டோ ஷுட் நடத்தும் தன்யா

June 12, 2020
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி, தான்யா, சில ஆண்டுகளுக்கு முன், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் படத்தில் நடித்தார். இதில், தான்யாவின் குடும்ப பாங்கான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் ஓரளவு ஓடினாலும், தான்யாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு, ‘போட்டோ ஷூட்’ ஆயுதத்தை கையில் எடுத்த தன்யா, தன்னுடைய விதம் விதமான புகைப்படங்களை, இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்து வாய்ப்பு தேடி வருகிறார்.

அடியே குட்டி தேவதை – திங்க் மியூசிக் வெளியீடு

June 12, 2020
ஏ.ஆர்.ரகுமானின், கே.எம்.எம்.சி., இசைக் கல்லுாரியில் பயின்ற இளம் இசையமைப்பாளரான எட்வின் லுாயிஸ், ‘அடியே குட்டி தேவதை’ என்ற தனிப்பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை, ‘திங்க் மியூசிக்’ வெளியிட்டுள்ளது. இவர், 18 வயதிற்குட்பட்ட பிரிவுகளின் கீழ், இசையில் பல விருதுகள் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ளார். எட்வின் கூறுகையில், ”தனிப்பாடலுக்கு, ‘திங்க் மியூசிக்’ உள்ளிட்டோர் தந்த ஆதரவு குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இவர்கள், இளம் திறமையாளர்களின் எதிர்காலம் குறித்து பெரிதும் அக்கறை காட்டுகின்றனர்,” என்றார்.

உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் – சிவக்குமார்

June 12, 2020
நடிகர் சிவகுமார் தான் வசித்த பழைய வீட்டின் முன் நின்று எடுத்த படத்தை பகிர்ந்து கூறுகையில், ”1958- – 1965 ஆண்டுகளில், மாதம், 15 ரூபாய் வாடகையில், ஏழு ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தேன். இங்கு வாழ்ந்த போது, டெல்லி முதல் குமரி வரை சுற்றி, ஓவியம் தீட்ட, அக்காலத்தில் எனக்கான மொத்த செலவு, 7,500 ரூபாய். குறைந்த தேவைகளுடன், உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் பொன்னானவை,” என்றார்.

அதிரடி, ஆக்சன் காமெடி படமாக உருவாகும் டாக்டர்

June 12, 2020
தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில், சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ஒன்று. அதிரடி ஆக் ஷன் மற்றும் காமெடி படமாக உருவாகும் இப்படம் குறித்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறுகையில், ”தியேட்டர் ரசிகர்கள் விரும்பும் நடிகர் சிவகார்த்தி கேயன். அவருக்கு ஏற்றமாதிரி கமர்ஷியலான படம் இது. ‘லாஜிக்’ மீறல்கள் இல்லாமல் உருவாக்கி வருகிறோம். ஒரு சம்பவத்தில் சிலர் சிக்கிக் கொள்ள, அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதே கதை,” என்றார். இப்படத்தில், நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்க, […]

சென்னையில் மூடப்படும் தியேட்டர்கள்

June 12, 2020
கொரோனாவால் முற்றிலும் முடங்கியுள்ள திரைத்துறையில், அதிரடி மாற்றங்கள் உருவாகி வருகின்றன. கொரோனா தாக்கத்தால், 70 ஆயிரம் தியேட்டர்கள் கொண்ட சீனாவில், ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில், செலவை சமாளிக்க முடியாத நிலையில், இதுவரை ஏற்பட்ட நஷ்டத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ள, சென்னையில் இரண்டு தனி தியேட்டர்களை மூட இருப்பதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன.

நியூமராலஜியாக இருக்குமோ? கஸ்தூரி

June 12, 2020
தமிழகத்தில் சில ஊர் பெயர்களை, தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை கஸ்துாரி, ‘டுவிட்டரில்’, ‘ஒரு வேளை நியூமராலஜியாக இருக்குமோ’ நான் இன்றும் மெட்ராஸ், பம்பாய் என்று தான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். இப்படி குழப்பி என்ன லாபம்? ரயில் நிலையம், முனையம் என எல்லாவற்றிலும், பெயர் மாற்ற, ஒப்பந்தம் எடுப்பவர்களுக்கும், தருகிறவர்களுக்கும் லாபம்’ எனக் கூறி உள்ளார்.

ரஹ்மானின் புதிய அவதாரம்

June 12, 2020
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 99 சாங்ஸ் என்ற படத்தை தயாரித்தார். அதனை தொடர்ந்து தற்போது பேட்ட வில்லனான நவாசுதீன் சித்திக் நடிக்கும் `No Lands man’ என்ற படத்திற்கு இணை தயாரிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளார். வாழ்த்துகள் ப்ரடியூஸர் சார்!

கறுப்பு வெள்ளை! என்னால் மூச்சுவிட முடியவில்லை

June 12, 2020
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்வதேச அளவில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, “காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்று தொடங்கும் பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

இடியாப்ப சிக்கலில் ராஜமவுலி

June 11, 2020
ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் இரண்டு ஹீரோயின்களால் ராஜமவுலி சிக்கலில் உள்ளார். லண்டனை சேர்ந்த ஒலிவியா, கொரோனா பயம் அல்லது வெளிநாட்டு போக்குவரத்து நிறுத்தம் என ஏதோ ஒன்றை காரணமாக சொல்லி இந்த வருடத்தில் தன்னால் இந்தியா வரமுடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இன்னொரு பக்கம் பாலிவுட்டை சேர்ந்த அலியா பட், அடுத்தடுத்து இந்திப்படங்களில் நடிப்பதற்காக கொடுத்த கால்ஷீட் வேறு தன்னை நெருங்கி கொண்டிருப்பதாக கூறி ராஜமவுலியை டென்சன் ஆக்கி உள்ளாராம்.

சினிமா மீடியேட்டர்களுக்கு மளிகை சாமான்கள் வழங்கி உதவி

June 11, 2020
தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்கு தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாலமாக இருந்து வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக இருப்பவர்கள் மீடியேட்டர்கள். இவர்கள் கமிஷன் அடிப்படையில் சம்பளம் பெறுகிறவர்கள். கடந்த 3 மாதமாக வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இவர்களுக்கு அவர்களது சங்கமான அம்மா மூவி அசோசியேசன் மூலம் அரசி, மளிகை சாமான்கள் வழங்கப்பட்டு வருகிறது.

திருநங்கையாக வாழ்வதில் பெருமிதம்

June 11, 2020
மம்முட்டி நடிப்பில் வெளியான பேரன்பு படத்தில் இன்னொரு நாயகி என்று சொல்லும் விதமாக நடித்திருந்தார் திருநங்கை அஞ்சலி அமீர். சினிமாவில் கதாநாயகியாக நடித்த முதல் திருநங்கை என்கிற பெயரைப் பெற்ற இவருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே வருகின்றன. இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். படித்து முடித்த பின் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்பது தான் இவரது லட்சியமாம். திருங்கையாக வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி […]

பேஸ்புக்கில் புதிய மைல்கல்லை எட்டிய அனுஷ்கா

June 11, 2020
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கை மட்டுமே அனுஷ்கா அதிகம் பயன்படுத்தி வருகிறார். அதில் அடிக்கடி அப்டேட்களையும் கொடுத்துக் கொண்டிருப்பார். தற்போது பேஸ்புக்கில் அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டி உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்காவிற்கு 32 லட்சம் பாலோயர்கள் மட்டுமே உள்ளனர். 2 கோடி பாலோயர்கள் வந்துள்ளதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அனுஷ்கா.

சோப் நுரை போல் உயிர் பிரிய வேண்டும் – மாது பாலாஜி

June 11, 2020
நாடக நடிகரும் வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனின், முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாடக நடிகர் மாது பாலாஜி பேசியதாவது: ‘எப்படிப்பட்ட மரணம் நிகழ்ந்தால் சந்தோஷப்படுவீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘குளிக்கும் போது, சோப் நுரை எப்படி கரைந்து போகிறதோ, அது மாதிரி, நாம் கரைந்து, உயிர் பிரிய வேண்டும். அப்படிப் பட்ட மரணம், அதிர்ச்சியை தந்தாலும், சோகத்தை தராது’ என, கிரேஸி மோகன் கூறியதாக, மாது பாலாஜி பேசினார்.

கண்டிப்பாக இவர் இல்லை – மறுத்த படக்குழு

June 11, 2020
மாஸ்டர் படத்தை அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள படத்தை, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக கூறப்பட்டது. இதை படக்குழு மறுத்துள்ளது. இதையடுத்து, விஜய் உடன் ஜோடி சேர முன்னணி மற்றும் இளம் நடிகையர் பலரும், காய் நகர்த்தி வருகின்றனர்.

பாரம்பரிய உடை இணைக்கு வேறில்லை

June 11, 2020
முள்ளும் மலரும், செந்துாரப் பூவே உள்ளிட்ட ‘டிவி’ தொடர்களில் நடிக்கும் தர்ஷா குப்தா, சமீபகாலமாக பாரம்பரிய மற்றும் கவர்ச்சி, ‘போட்டோ ஷூட்’ நடத்தி, அப்படங்களை ‘டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில் ”எத்தனை நவீன, ‘மேக் அப்’ யுத்திகள் வந்தாலும், பாரம்பரிய உடைக்கு இணை வேறில்லை,” எனக்கூறி, பாவாடை தாவணியில் எடுத்த படத்தை பகிர்ந்து உள்ளார்.

ஏழாவது படத் தயாரிப்பில் அசோக் செல்வன்

June 11, 2020
கெனன்யா பிலிம்ஸ்’ தங்களின் ஏழாவது படத் தயாரிப்பை, பூஜையுடன் எளிமையாக ஆரம்பித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்குகிறார். இவர், சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்தவர். அசோக் செல்வன், நிஹாரிகா நடிக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். அரசு அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

கொரோனா தொற்றால் ஆடிப்போய் விட்டோம் – ஜான்வி கபூர்

June 11, 2020
தந்தை தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் மூலம் ஜான்வியின் தமிழ் எண்ட்ரி இருக்கும் என பேசப்படுகிறது. ஜான்வி கபூர், பிலிம்பேர் இதழுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இந்த ஊரடங்களை மகிழ்ச்சியாக தான் கழித்து வந்தோம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நாங்கள் ஆடிப்போய்விட்டோம். கொரோனா எங்கள் குடும்பத்தை உலுக்கிவிட்டது என்றார்.

ராணா – மிஹீகா திருமணம் தள்ளி போனது

June 11, 2020
ராணா – மிஹீகா இருவரின் திருமணத்தை உறுதி செய்யும் நிகழ்வு பெற்றோர் முன்னிலையில் நடைபெற்றது. வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ஐதராபாத்தில் வைத்து அவர்களது திருமணம் நடக்கும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 8ம் தேதி திருமணத்தை நடத்துவதில் ராணா குடும்பத்தினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணத்தை தள்ளி வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதை தான் முக்கியம் – மாயபிம்பம்

June 10, 2020
கொரோனாவுக்கு முன் எப்படியோ… வரும் காலங்களில், கதை தான் சினிமாவுக்கு முக்கியம் என்பது உறுதியாகியுள்ளது. கே.ஜே.சுரேந்தரின் முதல் படைப்பை, ‘மாஸ்டர் பீஸ்’ நிறுவனம் வெளியிட முன்வந்துள்ளது. மாயபிம்பம் படத்தை எழுதி இயக்கி, தயாரித்துள்ள கே.ஜே.சுரேந்தர் கூறியதாவது: உணர்ச்சிபூர்வமான காதல் கதையில், நல்ல நட்பும், குடும்ப மதிப்புகளும் நிறைந்திருக்கும் படமாக, மாயபிம்பம் உருவாகியுள்ளது. வலு மிக்க பெண் கதாபாத்திரங்கள், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் என்றார்.

கவர்ச்சியில் ஆளை மயக்கும் ஆண்ட்ரியா

June 10, 2020
நடிகை ஆண்ட்ரியா கொரோனா கால ஊரடங்கிலும் பிஸியாக உள்ளார். இந்தக்காலக்கட்டத்தில் ஒரு குறும்படத்தில் நடித்தார். தொடர்ந்து தன்னை விதவிதமாக போட்டோ ஷுட் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். சமீபத்தில் பிரபல ஆங்கில மேகஸின் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஸ்கின் டைப்பிலான ஒரு உடையில் மிகவும் செக்ஸியாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வரலாற்று கதை சொல்லும் இயக்குநர் திருவின் மனைவி கனி

June 10, 2020
இயக்குனர் திருவின் மனைவியும், அகத்தியனின் மகளுமாகிய கனி, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’ என்ற நிகழ்ச்சி மூலம், தன் திரைப்பயணத்தை துவக்கியுள்ளார். ‘யு-டியூப்’ தளத்தில் வெளியாகியுள்ள இந்நிகழ்ச்சியில், கதை சொல்லல் முறையில் வரலாற்றை சொல்லியுள்ளார். இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து தயாரித்துள்ளார் இயக்குனர் திரு. நம் முன்னோர் எந்த ஒரு கதையை சொல்லும் போதும், ஒரு ஊர்ல ஒரு ராஜா… என்று தான் ஆரம்பிப்பர். அப்படி தான், இந்நிகழ்ச்சியின் தலைப்பும் அமைந்தது,” என்றார்.

நம் உயிரை காக்க, நாம் தான் பாதுகாக்க வேண்டும் – சூரி

June 10, 2020
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரி கூறுகையில் நாம் சந்திப்பதற்கு, இப்படி ஒரு காலகட்டம் உருவாகி இருக்கக் கூடாது. கடந்த மூன்று மாதங்களில், உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம், இந்த கொரோனா தான். ‘தேவையின்றி வெளியே வராதீர்கள்; உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். நம் உயிரை காக்க, நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடிப்போம். பயப்படாமல் இருங்கள்; உங்கள் வீட்டு பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள் என […]

ரசிகருக்கு கூலாக பதிலளித்த ஷாலு ஷம்மு

June 10, 2020
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், நாயகியின் தோழியாக நடித்த ஷாலு ஷம்முவுக்கு, எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபகாலமாக, போட்டோ ஷூட் மூலம் டுவிட்டரில் கவர்ச்சி படைப்புகளை வெளியிட்டு வரும் ஷாலு, நேற்று அரைகுறை உடையுடன் இவர் வெளியிட்ட புகைப்படம், ரசிகர்களிடையே அதிகம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஷாலுவோ, ‘நம்முடைய தேர்வுகள் தான், நம்மை உருவாக்குகின்றன’ என, கூலாக கூறியுள்ளார்.

விஜய் மேனேஜர், வெளியேற்றப்பட்டாரா ஜெகதீஷ்?

June 9, 2020
சோஷியல் மீடியா இன்சார்ஜாக இருந்து பிறகு, நடிகர் விஜய்யின் மேனேஜராக உயர்ந்த ஜெகதீஷை `மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப்பாளராக உயர்த்தி பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார் விஜய். ஆனால் தற்போது விஜய் டீமில் இருந்து ஜெகதீஷ் நீக்கப்பட்டு விட்டதாக பல செய்திகள் வருகின்றன. ஆனால் அவை உண்மையில்லை என மறுத்துள்ளது ஜெகதிஷ் தரப்பு.

ராஜமவுலி படத்தில் இணைந்த ஸ்ரேயா

June 9, 2020
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தற்போது ஸ்ரேயாவும் இணைகிறார். இதனை அவரே தெரிவித்திருக்கிறார்.

ஹிந்தி படவாய்ப்பை நிராகரித்த நயன்தாரா

June 9, 2020
நயன்தாரா ஹிந்தி பட ரீமேக் வாய்ப்பை நிராகரித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான படம் குயின். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பட வாய்ப்பை தான் நயன்தாரா நிராகரித்திருக்கிறார்.

சீனாவிற்கு செல்லும் அசுரன்

June 9, 2020
சீன மொழியில் பல தமிழ் படங்களை தழுவி படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை முறைப்படி உரிமம் வாங்கி ரீமேக் செய்கிறார்கள். தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த படம் அசுரன். கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, வெங்கடேஷ் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

நீங்க நடிக்கும் முதல் படத்தின் தயாரிப்பாளர் நான் தான்! சிவகார்த்திகேயன் விருப்பம்

June 9, 2020
இசையமைப்பாளர் அனிருத் சில ஆல்பங்களில் தோன்றி ஆடியிருக்கிறார். அவர் விரைவில் சினிமாவில் நடிக்கிறார் என்ற தகவல் அவ்வப்போது வந்து போகும். இந்த நிலையில் அனிருத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஹீரோ போன்று போஸ் கொடுத்து ஒரு படம் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்த சிவகார்த்த்திகேயன், “எப்போனாலும் சரி, என்னைக்குன்னாலும் சரி. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத் தயாரிப்பாளர் நான் தான். நன்றி” என்று கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களின் இதயம் கவன்ற நடிகை

June 9, 2020
உங்கள் மனதோடு பேசுங்கள். இதயத்திலிருந்து செயல்படுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ளுங்கள்’ எனக்கூறியுள்ள நடிகை சஞ்சனா சிங், ‘டுவிட்டரில்’ தொடர்ந்து கவர்ச்சிப் படங்களையும், உடற்பயிற்சி வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இன்னும், இரண்டாம் நிலை நாயகியரின் வரிசைக்கு கூட வராத இவர், இந்த கொரோனா காலத்தில், பல ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளார்.

உஷாரான நடிகை தான்!

June 9, 2020
மீசையை முறுக்கு, நரகாசூரன், காட்டேரி படங்களில் நடித்துள்ள ஆத்மிகா சமீபகாலமாக கவர்ச்சி ‘போட்டோ ஷூட்’ நடத்தி, அப்படங்களை ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் மற்றவர்கள் கருத்து பதிவிட முடியாத வகையில், ‘லாக்’ செய்து, படங்களை பதிவேற்றுகிறார். ‘தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கும் அம்மணி, படு உஷார் தான்…’ என, கோலிவுட்டில், ‘கமென்ட் செய்கின்றனர்.

மிரள வைத்த ஐஸ்வர்யா தத்தா

June 9, 2020
பிக்பாஸ் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வரும் படம் மிளிர். இப்படத்தின் முதல், ‘போஸ்டர்’ சமீபத்தில் வெளியானது. வித்தியாசமான, கெட் அப்பில் மிரள வைக்கும் வகையில், ஐஸ்வர்யா தத்தா இடம் பெற்றுள்ள போஸ்டர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஐஸ்வர்யா தத்தா தற்போது, கன்னீத்தீவு, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகில் பயங்கர கேம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த சோனு சூட்

June 9, 2020
தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடிப்பவர் சோனு சூட். கொரானோ ஊரடங்கு ஆரம்பமான காலத்திலிருந்து மும்பையில் தங்கியுள்ள பல ஆயிரம் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு தன் சொந்த செலவில் பேருந்துகள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்து வருகிறார். இவரது பணியை பாராட்டி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பாராட்டியதற்கு மரியாதை நிமித்தமாக சோனு சூட் சந்தித்துள்ளார்.

தியேட்டர் ரிலீசிற்கு பிறகே ஓடிடியில் விஜய் சேதுபதி படம்

June 9, 2020
பொன்மகள் வந்தாள், பென்குயின் படங்களை போல் க/பெ. ரணசிங்கமும் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் இயக்குனர் விருமாண்டி. தியேட்டரில் வெளியான பிறகு தான் படம் ஓடிடியிலும் வெளிவரும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். புரோடக்ஷன் பணிகள் நிறைவடைந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என விருமாண்டி தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு உதவிய வில்லன் நடிகர் – ராமதாஸ் பாராட்டு

June 7, 2020
கொரோனா ஊரடங்கால் மகராஷ்டிராவில் சிக்கிய தமிழர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவிய பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகருக்கு வில்லனாகும் வடிவேலு

June 7, 2020
தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர் வடிவேலு. ஆனால், அவரின் அரசியல் பிரச்சாரம் அவரின் திரை வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையானது. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தில் வடிவேலுவை வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ அப்டேட்!

June 7, 2020
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள `பெண்குயின்’ திரைப்படம் ஜூன் 19ம் தேதி தமிழ், தெலுங்கிலும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. ஜூன் 8-ம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என்ற அப்டேட்டை கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இனியும் கண்ணடிக்க சொன்னா..? – பிரியா வாரியர்

June 7, 2020
இப்பவும் எங்க போனாலும் கண் அடிச்சுக் காட்டச் சொல்லி கேட்டுக் கிட்டே இருக்காங்க. எனக்கு இது ரொம்ப போர் அடிச்சிருச்சு. அதனால யார் கேட்டாலும் இதைச் செய்றதை ஸ்டாப் பண்ணிட்டேன். என்கிட்ட நடிப்பை எதிர்பார்த்தா சரியா இருக்கும்னு நினைக்குறேன். என்னை நடிக்க விடுங்க ப்ளீஸ்..!னு பதில் சொல்றேன்’ என பகிர்ந்துள்ளார் நடிகை பிரியா வாரியர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீது அவதூறு பேச்சு – நடிகர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு

June 7, 2020
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை, அவதுாறாக பேசியது தொடர்பாக, நடிகர் சிவகுமார் மீது திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் திருமலையில் மறைமுகமாக பல காரியங்கள் நடந்து வருகின்றன. அதனால், பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டாம் என சிவகுமார் ஒரு நிகழ்வில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் தமிழ்மாயன் என்பவர் தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தார். அதனடிப்படையில் நடிகர் சிவகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆண் குழந்தைக்கு தந்தையானார் டொவினோ தாமஸ்

June 7, 2020
மலையாள சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர் டொவினோ தாமஸ். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி2 படத்தில் வில்லனாக நடித்திருப்பார். சமீபத்தில் இவரது மனைவி லிடியோ பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அழகான குழந்தையை பெற்றெடுத்தார் டொவினோ.

குறும்படம் தயாரிக்கும் ராதிகா ஆப்தே

June 7, 2020
ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்திலும் மேலும் சில தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. இவர் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கியதன் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். ‘தி ஸ்லீப்வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவய்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கான இசையை ராதிகாவின் கணவர் பெனடிக்ட் அமைத்துள்ளார். இதனுடைய டீசரை நேற்று ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழில் பேசும் கனிகா

June 7, 2020
அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் படம். இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் தான் கதாநாயகி என்றாலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கனிகா நடித்துள்ளார். இந்தப்படத்தில் கனிகா, தனக்கான டப்பிங்கை அதிலும் இலங்கை தமிழில் தானே பேசியுள்ளார்.

சூரரைப் போற்றால் உற்சாகமான சூர்யா

June 6, 2020
சூர்யாவின் சூரரைப் போற்று படம் நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீசாகும் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பு, விநியோகம் என மற்ற பணிகளையும் செய்து வரும் சூர்யாவுக்கு, சூரரைப் போற்று படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்காது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் சூரரைப் போற்று படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்திருப்பதால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிரந்தரமாக மூடப்படும் திரையரங்குகள்

June 6, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் ஆயிரக்கணக்கான திரை அரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. சீன திரையரங்குகளின் எதிர்காலம் குறித்து அறிய சீன திரைப்பட சங்கம் சீன திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தின. அதன் முடிவில் 40 சதவீத திரையரங்குகள் இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது கடினம் என தெரியவந்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட மாற்றங்களை வெளிப்படுத்தும் குறும்படம்

June 6, 2020
‘அம்பானி’ சங்கர், ‘போண்டா’ மணி இணைந்து நடித்த, ‘வாழ்க்கை கொரோனாவுக்கு முன்; கொரோனாவுக்கு பின்’ குறும்படம் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவால் பாதித்த குடும்பத்தினர், மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை படம் எடுத்துக் காட்டியது. அது மட்டுமின்றி தந்தை, மகன் பாசம், கொரோனாவால் ஏற்பட்ட மாற்றங்கள், விலைவாசி உயர்வு, கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு போன்ற அனைத்தையும் காட்சிப்படுத்தி, சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்துள்ளனர்.

சமூகத்தை விட ஆத்மாவை திருப்திபடுத்துங்கள் – அமலா பால்

June 6, 2020
தனக்கு சரியென பட்டதை தைரியமாக செய்பவர் நடிகை அமலாபால். இவர், டுவிட்டரில் ‘முதலில் சமூகத்தை விட உங்கள் ஆத்மாவை திருப்திப் படுத்துங்கள்; என கூறியுள்ளார். அத்துடன் இலைகளால் ஆன கிரீடத்தை அணிந்த படத்தையும், டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் பட்டைய கிளப்பும் பிரியா பவானி சங்கர்

June 6, 2020
சின்னத்திரையில் அறிமுகமாகி, தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர், ப்ரியா பவானி சங்கர். கொரோனாவுக்கு பின் துவங்கிய பட வேலைகளில், அதர்வா உடன் நடிக்கும், குருதி ஆட்டம் படத்தின், ‘டப்பிங்’கை, அவர் முடித்துள்ளார். இப்படத்தை, எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய, ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். இவர், எஸ்.ஜே.சூர்யா உடன், பொம்மை படத்திலும் நடித்து வருகிறார்.

விரைவில் சக்ரா டீசர்

June 6, 2020
விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் நடித்து வரும், சக்ரா படத்தின், ‘டீசர்’ விரைவில் வெளியாகிறது. ஊரடங்கு முடிந்ததும், இறுதிக்கட்டமாக, சிலநாள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை, விஷால் தயாரிக்க, இயக்குனர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய, எம்.எஸ்.ஆனந்தன் இயக்கிஉள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விக்ரம் – த்ருவ்… மதுரையின் கேங்ஸ்டர்களா?

June 6, 2020
கார்த்திக் சுப்பராஜ் விக்ரமுக்காக சொல்லியிருக்கும் கதை, முழுக்க முழுக்க மதுரை கேங்ஸ்டர் கதையாம். கார்த்திக் சுப்பராஜுக்கு இது பழக்கப்பட்ட ஏரியா. இந்தப் படத்தில் ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கை, சிறு வயதில் இருந்து ஆரம்பித்து அவன் எப்படி டான் ஆகிறான் என்பது வரைக்கும் இருக்குமாம். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், விக்ரமின் இளவயது போர்ஷனில் அவரின் மகன் த்ருவ் விக்ரமே நடிக்கவிருக்கிறாராம்.

விஜய் சேதுபதியின் `ரணசிங்கம்’ படத்தை வாங்கிவிட்டதா அமேஸான்?

June 6, 2020
விஜய் சேதுபதியின் ‘ரணசிங்கம்’ படத்துக்காக அமேஸான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது ஆனால், நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கான பேச்சுகள் இல்லை. 80 சதவிகிதம் படம் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகாது. தியேட்டர்களில்தான் முதலில் ரிலீஸாகும். தயாரிப்பாளரும் தியேட்டர் ரிலீஸ்தான் எனச் சொல்லியிருக்கிறார்’ என படத்தின் இயக்குநர் விருமாண்டி தெரிவித்துள்ளார்.

உங்கள் மௌனம் உங்களை பாதுகாக்காது! – தமன்னா

June 6, 2020
‘உங்கள் மெளனம் உங்களைப் பாதுகாக்காது. மனிதனோ, விலங்கோ ஒவ்வொரு வாழ்க்கையும் முக்கியமல்லவா? எந்தவொரு படைப்பையும் முடக்குவது உலகளாவிய சட்டத்துக்கு எதிரானது. நாம் கற்றுக்கொள்ள வேண்டும், மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும், அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும்” என நடிகை தமன்னா பதிவிட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவில் சிக்கிய மலையாள படக்குழு!

June 6, 2020
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டிஜிபோட்டி நாட்டுடன் கலாசார ஒப்பந்தம் செய்து கொண்டு மலையாளத் திரைப்படக் குழுவினர், ‘டிஜிபோட்டி’ என்ற பெயரில் மலையாளத் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இதற்கான படபிடிப்புக்கு சென்ற சுமார் 72 பேர் அடங்கிய படக்குழு 61 நாள்களாக அங்கேயே சிக்கியிருந்தனர். இன்று சிறப்பு விமானம் மூலம் கொச்சி வந்துள்ளனர்.

மாஸ்டர் படத்தை இப்போது வெளியிடக்கூடாது – கேயார் அறிக்கை

June 5, 2020
விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் தற்போது வெளியாகக்கூடாது என இயக்குநர், தயாரிப்பாளருமான கேயார் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்குக் காரணமாக அவர் குறிப்பிடுவது, விஜய் போன்ற பெரிய நடிகரின் படங்கள் வெளியானால் ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இது கொரோனா காலத்தில் ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாயம் செய்யப்போறேன்! நடிகர் செந்தில்

June 5, 2020
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த செந்தில், தற்போது சென்னை சாலிகிராமத்தில் வசித்துவருகிறார். சத்தமில்லாமல் 23 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்திருக்கிறார். சென்னையைத் தாக்கிய வர்தா புயலால், செந்திலின் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது, மீண்டும் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக இறங்கப்போவதாகச் சொல்கிறார்.

மூக்குத்தி அம்மனில் நயன்தாரா நடிப்பதால் என்ன பிரச்சனை

June 5, 2020
அம்மனா நயன்தாரா நடிக்கிறதுல என்னதான் பிரச்னை? அப்ப த்ரிஷா நடிச்சா ஏத்துப்பாங்களா? சினேகா, தமன்னா, அனுஷ்கா, மஞ்சுவாரியர்… எதுக்கு இந்த கேள்வினு புரியலை. மக்கள் நயன்தாராவை ஏத்துக்கிட்டதால்தான் 16 வருஷமா டாப் மோஸ்ட் ஸ்டாரா இருக்காங்க. அவங்க நடிச்சா மக்கள் நிச்சயம் ஏத்துப்பாங்க.” என நடிகர் ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் குறித்து ஷோபனா கூறிய ரகசியம்

June 5, 2020
மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் ஷோபனா நடிக்கவில்லை என்றாலும் கூட, இந்தப்படத்தில் ஷோபனா ஒரு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐஸ்வர்யா ராய் குறித்து ஷோபனாவிடம் கேட்கப்பட்டபோது, “ஐஸ்வர்யா ஒரு இசையமைப்பாளரை போல இசையின் நுணுக்கங்களை உள்வாங்கி கொள்கிறார். இது ஒரு டான்ஸ் மாஸ்டராக என்னை போன்றவர்களை ஊக்கப்படுத்துகிறது” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியின் வளர்ச்சியில் உங்கள் முயற்சிக்கு நன்றி – ரஜினிகாந்த்

June 5, 2020
சென்னையில் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் நிதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு இயக்குனர் நியமிக்கப்படாததால் இதன் பல செயல்பாடுகள் முடங்கிக் கிடந்தன. தற்போது புதிய இயக்குநராக சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு ரஜினி எழுதியுள்ள கடிதத்தில் “தமிழ் மொழியின் வளர்ச்சியில் உங்களின் முயற்சிக்கும், நடவடிக்கைக்கும் நன்றி, பாராட்டுகள். என்று தெரிவித்துள்ளார்.

ஓடிடியில் அதிக விலைக்கு போன தலைவி

June 5, 2020
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் நடிகையான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடித்து வருகிறார். இப்படத்தின் ஓடிடி உரிமை 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கங்கனாவே தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி என்பது பார்வையில் தான் உள்ளது – இந்துஜா

June 5, 2020
மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா தற்போது காக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக, அவர் கவர்ச்சி வேடங்களில் அதிகமாக நடித்து வருவதாக தகவல் பரவியது. அவரோ, ‘கவர்ச்சி, குடும்ப பெண் வேடம் போன்றவை எல்லாம், பார்வையில் தான் இருக்கிறது. நடிக்க வந்து விட்டால், நடிப்பு தொடர்பான அனைத்து திறமைகளையும் காட்ட வேண்டும். அதனால் தான், ‘போட்டோ ஷூட்’ போன்றவற்றில் ஈடுபாடு காட்டுகிறேன் என்றார்.

ரவிவர்மாவின் திரையுலக பயணம் 20 ஆண்டுகள் நிறைவு

June 5, 2020
இந்திய திரையுலகில், தனி முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தன் திரையுலக பயணத்தில், 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பன்முக திறமையாளரான இவர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என, சாதனை புரிந்துள்ளார். ரவிவர்மனுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும், வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

நவீன காதலை சொல்லும் தேவதாஸ் பிரதர்ஸ்

June 5, 2020
துருவ், ஷில்பா மஞ்சுநாத், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள, தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டிரெய்லரை, நடிகர் சிம்பு வெளியிட்டார். ஜானகிராமன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, மதியழகன் தயாரித்துஉள்ளார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

சம்பளத்தை விட கதையே முக்கியம்

June 5, 2020
பொன்மகள் வந்தாள் படத்தில் ஐந்து இயக்குனர்கள் இணைந்து நடித்திருந்தனர். இதற்கு முக்கிய காரணம், கதையா; சம்பளமா? என்ற கேள்விக்கு, பாக்யராஜ் கூறுகையில், ”எந்த ஒரு படமாக இருந்தாலும், கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். சம்பளம் எல்லாம் அதை தாண்டி தான். மீண்டும், இதுபோல் ஒரு கதை அமையும் போது, நிச்சயம் நாங்கள் இணைவோம்,” என்றார்.

ஆங்ரி பேர்ட் த்ரிஷா

June 4, 2020
கேரளாவில் கருவுற்ற யானை, வெடிவைத்த அன்னாசிப் பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது. யானைக்கு இரங்கல் தெரிவித்தும் இந்தச் செயலைக் கண்டித்தும் திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் த்ரிஷா, ”மனிதர்கள்தான் வைரஸ். #riphumanity” என ஆதங்கப்பட்டிருக்கிறார்.

விஷாலை ரொம்ப மிஸ் பண்றேன்

June 4, 2020
‘விஷால் பக்கம் மட்டும் தப்பில்ல. எங்களுக்குள்ள பிரச்னை ஒண்ணு நடந்துச்சு. அந்தப் பிரச்னையால அவன் கோபப்பட்டான். அதுக்கு என்னோட விளக்கத்தை நானும் கொடுத்தேன். அவ்வளவுதான். இதுக்கு மன்னிப்பெல்லாம் தேவையில்ல. விஷால் மேல எனக்குப் பரிசுத்தமான அன்பு இருக்கு. இப்போ அவனை ரொம்ப மிஸ் பண்றேன்’ என இயக்குநர் மிஸ்கின் பகிர்ந்துள்ளார்.

அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்

June 4, 2020
‘மூக்குத்தி அம்மன்’ படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி, `கதை கேட்கும்போதே நயன்தாராவுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கதை கேட்ட அன்னைக்கு நைட்டே நயன்தாரா கால் பண்ணி, ‘சாமி படம் பண்ணப்போறோம். சுத்தமா இருந்து எல்லாம் கரெக்ட்டா பண்ணணும். கட்டுப்பாடுகளைச் சரியா கடைப் பிடிக்கணும்’னு கண்டிஷன் போட்டாங்க. எங்களுக்கும் அதே மனநிலைதான்கிறதால் அந்த கண்டிஷன் பிடிச்சிருந்தது’ என்கிறார்.

பொன்மகள் படம் மூலம் செம லாபம் கட்டும் அமேசான்

June 4, 2020
பொன்மகள் வந்தாள்’ படத்துக்காக மட்டுமே அமேசான் ப்ரைமை சப்ஸ்கிரைப் செய்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சங்களைத் தாண்டியிருப்பதாக சொல்கிறார்கள். “அமேசான் சப்ஸ்கிரிப்ஷனுக்கான ஒரு மாத கட்டணம் 129 ரூபாய். குறைந்தது 5 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருந்தால், அதிலேயே அமேசானுக்கு 6 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்கும்” என்கிறார் சினிமாத்துறையின் மிக முக்கிய தயாரிப்பாளர்.

ப்ரித்விக்கு கொரோனா இல்லை

June 4, 2020
வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய நடிகர் ப்ரித்வி ராஜ், அரசு விதிமுறைகளின்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் வந்ததுமே அவருக்கு கொரோனா தோற்று சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. இந்த தகவலை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டுள்ள பிரித்விராஜ், மீதியுள்ள ஒன்றிரண்டு தனிமைப்படுத்தல் நாட்களையும் முறைப்படி பின்பற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.

மரண தண்டனை கொடுக்க வேண்டும் – தனுஷ் பட நாயகி

June 4, 2020
கர்ப்பிணியான யானை பசியால் அலைந்தபோது அன்னாசி பழத்துக்குள் பட்டாசை திணித்து வைத்து கொடுத்ததில், அதை அறியாமல் யானை உண்டபோது அதன் வாய் வெடித்தது.. பின்னர் சில மணி நேரங்களில் தண்ணீரில் நின்றபடி உயிரை விட்டது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு மரண தண்டனையை கொடுக்க வேண்டும் என கொந்தளித்துள்ளார் மலையாள நடிகையும் ரஜிஷா விஜயன். இவர் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

கூட்டு முயற்சியில் படத்தின் முதல் பார்வை

June 4, 2020
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய, ராம் மகேந்திரா இயக்கிய, ‘மனம்’ குறும்படம், பலரது வரவேற்பை பெற்றுள்ளது. இக்குழுவினர் தற்போது, ஹிந்தியில் ஒரு படத்தை உருவாக்க தயாராகி விட்டனர். ‘மாயன் சினிமாஸ் மற்றும் மானசரோவர் பிக்சர்ஸ்’ இணைந்து படத்தை தயாரிக்கின்றன. இயக்குனர் கூறுகையில், ”இப்படம் ஒரு கூட்டு முயற்சி. விரைவில் படத்தின் முதல் பார்வையோடு சந்திப்போம்,” என்றார்.

தொடர்ந்து செல்லுங்கள்! ரேஷ்மா பசுபுலெட்டி

June 4, 2020
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ- 2 உள்ளிட்ட படங்களிலும் ‘பிக்பாஸ்’ -3வது சீசனிலும் பங்கேற்றவர், நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி. வித்தியாசமாக கறுப்பு, வெள்ளையில் கவர்ச்சி, ‘போட்டோ ஷூட்’ நடத்தியுள்ளார். சேலை, ரவிக்கையில் எடுக்கப்பட்ட இவரது படங்கள், டுவிட்டரில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அவர் கூறுகையில், ‘தொடர்ந்து செல்லுங்கள். இது உங்களுக்கான நேரம். பிரகாசிக்க மறந்து விடாதீர்கள்’ என்றார்.

ஆன்லைனில் வெளியாகும் டைட்டானிக்

June 4, 2020
மெட்ராஸ், டார்லிங் – 2, அதே கண்கள் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான கலையரசன் நடித்துள்ள டைட்டானிக் படம் நேரடியாக, ‘ஆன்லைனில்’ வெளியாகிறது. இப்படத்தில், ஆஷ்னா சவேரி, கயல் ஆனந்தி, காளிவெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். இதற்கான பேச்சில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மனித நேயம் எங்கே? நித்தி அகர்வால்

June 4, 2020
கேரளாவின், மலப்புரத்தில் உணவு தேடி சென்ற கருவுற்ற யானைக்கு, வெடி பொருள் வைத்த அன்னாசி பழத்தை கொடுத்து சாகடித்துள்ளனர். இது குறித்து பூமி படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை நித்தி அகர்வால், டுவிட்டரில், ‘மனிதநேயம் எங்கே?’ என, கேள்வி எழுப்பிஉள்ளார். அதில் மனித குலத்தின் மொழி காதல் என, கூறுகின்றனர். ஆனால், சில பயங்கரமான மனிதர்கள், மனிதநேயம் தவறிவிட்டனர். இது எவ்வளவு கொடூரமானது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

ஊரடங்கை மையப்படுத்தி தயாராகும் ஆவணப்படம்

June 4, 2020
பிரபல விளம்பர மற்றும் ஆவணப்பட இயக்குனர் பரத்பாலா, கொரோனா கால ஊடரங்கை மையப்படுத்தி மீண்டும் எழுவோம் என்கிற ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இது கடந்த 2 மாதத்திற்கு மேலாக இந்தியா முழுவதும் நடந்த ஊரடங்கை படம் பிடித்து காட்டும் ஆவண ஆல்பம் ஆகும். 117 பேர் கொண்ட 15 குழுக்கள், இந்தியா முழுக்க 14 மாநிலங்களுக்கு சென்று ஊரடங்கை படம்பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் 4 நிமிடம் கொண்ட ஆவணப் படமாக தொகுக்கப்பட்டுள்ளது.

வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சி – மீரா சோப்ரா

June 3, 2020
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் மீரா சோப்ரா. ‘டுவிட்டரில்’ ரசிகர்களிடம் பேசும்போது, நம் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புவேன். இட்லி, சாம்பார் பிடித்த உணவு; அனைத்து வித சட்னியும் பிடிக்கும். என் இளமையின் ரகசியம் தினமும் உடற்பயிற்சி, சத்தான உணவு. என் வாழ்வை பற்றி கூற வேண்டுமானால், நிறைவு பெறாமல் உள்ளது; ஆனால் திருப்தியாக இருக்கிறது. என் கண்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.என்று அவர் பதிலளித்தார்.

அதிமுகவில் சேரப் போகிராறா மேகா ஆகாஷ்..?

June 3, 2020
எனை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாத்தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ், கொரோனா பாதுகாப்பு குறித்த விஷயங்களை டுவிட்டரில் அதிகம் பகிர்ந்துள்ளார்.குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் கொரோனா குறித்த பதிவுகளை, மறுபதிவு செய்துள்ளார். மேகா ஆகாஷின் நடவடிக்கையை பார்த்து, ‘அ.தி.மு.க.,வில் சேரப் போகிறாரோ…’ என, ரசிகர்கள், ‘கமென்ட்’ அடிக்கத் துவங்கிவிட்டனர்.

முகக்கவசத்துடன் மாஸ் காட்டிய நடிகை

June 3, 2020
லாக்டவுனில் விதவிதமான ‘போட்டோ ஷூட்’ நடத்தும் நடிகையருக்கு மத்தியில் வரும் காலத்திற்கு கவனத்தில் கொள்ளக்கூடிய முக கவசத்தை அணிந்து, போட்டோ எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஆஷாப்ரத்ளம். மரிஜுவானா படத்தில் நாயகியாக நடித்துள்ள இவர், படத்தின் பாடல் ஒன்றில் நாயகனுக்கு முத்தமழை பொழிந்து, ரசிகர்களை வியப்படைய வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கற்றுவரும் தெலுங்கு பட நடிகை

June 3, 2020
ஸ்ரீதர் கோவிந்தராஜ் இயக்கும் முதல்படம் பேப்பர்பாய். இது தெலுங்கு படம் ஒன்றின் கருவை மட்டும் வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளேன். தினமும் பேப்பர் போடும் பையனுக்கும், கோடீஸ்வர பெண்ணுக்கும் இடையேயான காதலும், அதனால் ஏற்படும் மாற்றங்களுமே கதை. இப்படத்தில் சொல்லப்படும் காதலுக்காகவே, படம் அனைவரையும் கவரும். சுவாதீஷ் ராஜா நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகை யாமினி பாஸ்கர் நாயகியாக நடித்துள்ளார். படத்திற்காக அவர், தமிழ் கற்று வருகிறார்.

ஓடிடியில் ரிலீசாக தயாராகும் டைட்டானிக்

June 3, 2020
மெட்ராஸ் படத்தில் அறிமுகமான கலையரசன் தற்போது நடித்து முடித்துள்ள படம் டைட்டானிக். ஜானகிராமன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கலையரசனுடன் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். திருகுமாரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்தப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகிறது.

பிஸியான பிரியா பவானி சங்கர்

June 3, 2020
தமிழில் அதிகப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, கமல்ஹாசனுடன் ‘இந்தியன் -2’, ராகவா லாரன்ஸுடன் ஒரு படம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கும் பிரியா, அடுத்து விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ‘அடங்கமறு’ இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

சூர்யா – ஜோதிகாவுக்கு நன்றி – ஆயுஷ்மான் குரானா

June 3, 2020
இந்திப் படவுலகில் இப்போது `சூப்பர் நடிகர்’ எனப் பெயர் எடுத்துவருபவர் ஆயுஷ்மான் குரானா. ‘அந்தாதுன்,’ ‘ஆர்ட்டிக்கிள் 15’ என இவரின் படங்கள் எல்லாம் ஹிட் ஆக, உச்சத்துக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே சூர்யா-ஜோதிகா இருவரும், ‘நாங்கள் ஆயுஷ்மான் குரானாவின் ரசிகர்கள்’ எனச் சொல்ல, செம உற்சாகமாகி ட்வீட்டில் நன்றி சொல்லியிருக்கிறார் ஆயுஷ்மான்.

விஜய்யின் மாஸ்டர் பிளான் வெளியீடு

June 3, 2020
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமே இன்னும் வெளிவராத நிலையில், விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் குறித்த செய்திகள் பரபரக்கின்றன. ‘மாஸ்டர்’க்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம்; அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம்; அதற்கடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் என விஜய் பக்காவாக பிளான் போட்டு வைத்திருப்பதாகச் சொல்கிறது கோடம்பாக்கம்.

மீண்டும் மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அரவிந்த்சாமி

June 3, 2020
‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் மீண்டும் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், இந்த இடைவெளியில் இன்னொரு படத்தை இயக்கும் மூடில் இருக்கிறாராம் இயக்குநர் மணிரத்னம். மிடில் ஏஜ் காதல் கதையான இந்தப் படத்தின் நாயகன் அரவிந்த்சாமி. படத்துக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

விக்னேஷ் சிவனின் படத்தில் சமந்தா டவுட்!

June 3, 2020
விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம், ‘நானும் ரௌடிதான்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் முடிந்துவிட்டன. அரசின் அனுமதி கிடைத்ததும் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிற சூழலில், இப்போது சமந்தா இந்தப் படத்தில் நடிப்பது டவுட்டாம். அதனால், வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நீது சந்திரா

June 2, 2020
ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, நீது சந்திரா உதவி தேவைப்படு பவர்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி வருகிறார். மும்பையில் உள்ள ஏழைகளுக்கு உணவு சமைக்க தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை அனுப்பி வைத்துள்ளார். அதே போல கேரளாவில் சிக்கித் தவிக்கும் பீகார் மாநிலத்தவருக்கு அவர்கள் செந்த ஊர் செல்ல போக்குவரத்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

இன்ஸ்டாகிராமில் மன அமைதியை இழந்த இளம் நடிகை

June 2, 2020
நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை சமூக வலைதளங்களில் காணவில்லை என நெட்டிசன்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமை மூடிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் மீண்டு அந்த கணக்கை திறந்து ஐ யம் பேக் என ஒருவீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவிடுவதால் தனது நிம்மதி, ஆரோக்கியத்தை இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

குயின், தலைவிக்கு எதிரான வழக்கு

June 2, 2020
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, குயின், தலைவி ஆகிய படங்கள் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடர் ஆகிய இந்த இரண்டிற்கும் தடைவிதிக்க வேண்டும். மேலும் இதன் திரைக்கதைகள் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்குக் குறையில்லாமல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

யார் என்று தெரியாமலே நடித்து முடித்தேன் – பியா பாஜ்பாய்

June 2, 2020
அஜித் பற்றி பேசிய நடிகை பியாபாஜ், ஏகன் படத்தில் நடிக்க கையெழுத்திட்டபோது, அஜித் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பதும், நான் எவ்வளவு பெரிய படத்தில் நடிக்கிறேன் என்பதும் எனக்கு தெரியாது. ஒரு பெரிய படத்தில் நடிக்கிறோம், அதில் நடித்து முடித்த பிறகு அஜித் யார், படம் எப்படிப்பட்டது என்பது தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்படுவோம் என்று எனக்கு அப்பொழுது தெரியாது.

தயாரிப்பாளர் தனஞ்செயனின் தாயார் காலமானார்

June 2, 2020
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தனஞ்செயன். இவரது தாயார் ஜெகதாம்பாள் இன்று(ஜுன் 1) காலை காலமானார். அவருக்கு வயது 89. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனஞ்செயன் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்”, என கூறியுள்ளார்.

பொங்கலுக்கு தயாராகும் ஆண்டவன்

June 2, 2020
ஆண்டவன் விருது படக்குழுவினர் தற்போது, ஆண்டவன் என்ற படத்தை உருவாக்குகின்றனர். வில்லியம் பிரதர்ஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில், கூட்டு தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. அறிமுக நாயகன், மகேஸ்வரன் நாயகனாக நடிக்கிறார்.செப்டம்பர் மாதம் முதல், ராமநாதபுரம், ராஜபாளையம், மூணாறு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளது படக்குழு. பொங்கல் பண்டிகையன்று படத்தை வெளியிட உள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் வில்லி திருக்கண்ணன்.

எஸ்.வீ.சேகரை கலாய்த்த நடிகை குஷ்பு

June 2, 2020
சின்னத்திரை படப்பிடிப்பை 60 பேருடன் துவக்க தமிழக அரசு சமீபத்தில் அனுமதித்துள்ளது. இதற்கு சிலர் கண்டனத்தை தெரிவித்த வேளையில், பலர் வரவேற்று, இதே போன்று சினிமா படப்பிடிப்புக்கும் அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்நிலையில், ‘டிவி படப்பிடிப்பில், 10 வயதுக்குள் மற்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றக்கூடாது என அரசு ஏதாவது அறிவிப்பு வெளியிட்டதா’ என, நடிகர் எஸ்.வி.சேகர் ‘டுவிட்டரில்’ கேள்வி எழுப்பியுள்ளார். இதை மேற்கோள் காட்டிய நடிகை குஷ்பு, ‘சார், இதில் எந்த வயதிலும் நீங்கள் […]

டிக் டாக்கில் டிரெண்டாகும் வாழைப்பழ காமெடி

June 2, 2020
சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த காமெடி நடிகர் செந்தில், தற்போது சின்னத்திரை தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த வாழைப்பழக் காமெடி வசனத்தை ‘டிக்டாக்’கில் இளம் பெண்ணுடன் சேர்ந்து செந்தில் நடித்துள்ளார். செந்தில், தாடியுடன் வித்தியாசமான, ‘கெட்அப்’பில் உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

சாக்லேட் தோசை கீர்த்தி சுரேஷ்

June 2, 2020
வழக்கமாகத் தன்னுடைய போட்டோஷூட், நாய்க்குட்டியுடன் இருப்பது ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிடும் கீர்த்தி சுரேஷ், இம்முறை கொஞ்சம் ஸ்பெஷல்! அவர் சாக்லேட் தோசை செய்வதை வீடியோவாக எடுத்து பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோவின் முடிவில் சாக்லேட் தோசை இருக்கும் தட்டில் ஸ்மைலிங் எமோஜியை சாக்லேட் சாஸில் வரைந்து கேமராவிடம் கீர்த்தி காட்டுவது அத்தனை அழகு.

தெருகூத்து கலைஞர்களின் நிலை கவலைக்கிடம்

June 2, 2020
கொரோனா வைரஸ் காரணமாக எல்லாத் தொழிலுமே முடங்கிக் கிடக்கிறது. இதில் தெருக்கூத்து கலைஞர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்களின் நிலை பற்றி தெருக்கூத்து கலைஞரும் ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட படங்களின் கலை இயக்குநருமான ராமலிங்கம் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இதுவும் ஒருவகை தீவிரவாதம் தான்! இலட்சுமி ராமகிருஷ்ணன்

June 1, 2020
பொன்மகள் வந்தாள் படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட பதிவிற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, “இந்துவா மற்றும் இந்து மதத்தை வைத்து என்னை தாக்கும் மக்களை நினைத்து வெட்கப்படுகிறேன். எதற்காக? பொன்மகள் வந்தாள் படம் நன்றாக இருக்கிறது என நான் சொன்னதற்காகவும், தாக்குதலுக்குள்ளாகும் ஒரு பெண்ணுக்கு ஆதரவளித்ததற்காகவும். இதுவும் ஒரு வகையான தீவிரவாதம் தான். இது நிச்சயம் நம் தேசத்தை அழித்துவிடும்” என கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

பொன்னியின் செல்வேன் படம் எடுத்தே தீர்வேன் – மணிரத்னம்

June 1, 2020
கொரோனா ஊடரங்கால் பொன்னியின் செல்வன் தடைபட்டிருக்கிறது. படத்தில் பிரமாண்ட போர் காட்சிகள் இனிமேல் தான் படமாக்கப்பட இருக்கிறது. நிறைய மக்கள் கூட்டத்துடன் தான் படப்பிடிப்பை நடத்த முடியும். இந்த காட்சிகளை எப்படி படமாக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதனை எப்படியோ செய்து முடிப்பேன். நான் ஒரு தொழில்முறை கலைஞன், அதற்கான சம்பளத்தை நான் வாங்குகிறேன். அதனால் அதை படமாக்கி காட்டுவேன். அது எப்படி படமாக்கி முடித்தேன் என்பதை படப்பிடிப்பை முடித்து விட்டுச் சொல்கிறேன் என்கிறார் மணிரத்னம்.

காட்மேன் வெப்சீரிஸ் நிறுத்தம் – ஜீ5 அறிவிப்பு

June 1, 2020
எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து ‘காட்மேன்’ வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்துவதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில், ”எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய கருத்துக்கள் வந்தன. அதன்காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

VTV 2 நிச்சயம் உருவாகும் – கௌதம் மேனன்

June 1, 2020
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயம் எடுக்க இருப்பதாக இயக்குனர் கவுதம்மேனன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெற்றிப் பெற்ற படத்தின் தொடர்ச்சியை எடுக்கும் போது, பல தடைகளை தயாரிப்பாளர் சந்திக்க வேண்டியிருக்கும். விண்ணைத்தாண்டி வருவாயா — 2 படத்திற்கான வடிவத்தை கொடுத்து வருகிறேன். நிச்சயம் படம் உருவாகும், என்றார்.

தமிழில் இயக்கும் மலையாள இயக்குநர்

June 1, 2020
மலையாளத்தில், பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் ஐந்தாண்டுகளுக்கு பின் ஒரு படத்தை இயக்க உள்ளார். இம்முறை தமிழில் அவர் படத்தை இயக்குகிறார். இதில் மம்முட்டி, அருண் விஜய் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளிக்கு வெளியாகும் மாஸ்டர்

June 1, 2020
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த, மாஸ்டர் படம், ஏப்ரல் மாதமே வெளியாக இருந்தது. ஆனால், கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தியேட்டர் திறக்கப்பட்டு படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு, தற்போது பதில் கிடைத்துள்ளது. மாஸ்டர் டிரெய்லர் ஜூன் 22லும், படம் தீபாவளிக்கும் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

பொறுமையின் ரகசியம் என்ன?

June 1, 2020
பிக்பாஸ் 2 வாயிலாக ரசிகர்களுக்கு அறிமுகமாகி, இன்று, சில படங்களில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா தத்தா. ஆரம்பத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து வந்த இவர், தற்போது, சேலையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். இதனிடையே அஜித்திடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன? என, ஒருவர் ஐஸ்வர்யாவிடம் கேட்க, அதற்கு ஐஸ்வர்யா தத்தா, ‘பொறுமையின் ரகசியம் என்ன என கேட்பேன்’ என்றார்.

கொரோனா காலத்தின் நிஜ பாதுகாவலனாக மாறிய சோனு சூட்

June 1, 2020
பிரபல நடிகர் சோனுசூட், தற்போது கொரோனா கால பணியின் காரணமாக நிஜ ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஓருங்கிணைப்பதற்காக ஒரு கால் செண்டர் துவக்கி உள்ளார். இதில் கொச்சியில் சிக்கி தவிக்கும் ஒடிசா மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு உதவுமாறு கேட்டிருந்தனர். இதை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் பேசிய சோனு சூட் தனி விமானம் ஏற்பாடு செய்து 167 தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்தார். அந்த விமான கட்டணத்தை தானே ஏற்றுக் கொண்டார்.

பிச்சைக்காரன் 2- விற்கு தயாராகிவிட்டேன்

June 1, 2020
பிச்சைக்காரம் படத்தோட 2ம் பாகத்தை எடுக்கலாம்னு தோணுச்சு அப்படியே நானே கதையை எழுதிட்டேன். திரைக்கதை மற்றும் வசனங்களை இன்னொருத்தர் எழுதி இருக்கார். வேற ஒரு இயக்குநர் இந்தப் படத்தை இயக்கப்போறார். அவங்கலாம் யார்னு சீக்கிரமே அறிவிக்கிறேன். என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

திரைப்படமாகும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு

June 1, 2020
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை திரைப்படமாகும் வரிசையில் தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகை குஷ்புவின் நெருங்கிய உறவினர் கொரோனாவால் பலி

May 31, 2020
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின் குஷ்பூ. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் வெகு நாட்கள் கழித்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார் என தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் குஷ்பூ.

கொரோனாவால் 14 நாட்கள் தனிமையில் பிந்துமாதவி

May 31, 2020
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவரும், பிரபல நடிகையுமான பிந்து மாதவி தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் உள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து சென்னை மாநகராட்சி அந்த அபார்ட்மெண்ட் முழுவதையும் சீல் வைத்து கேட்டை இழுத்து மூடி விட்டதாகவும் பிந்து மாதவி குறிப்பிட்டுள்ளார்.

காட்மேன் வெப்சீரிஸ் நிறுத்தப்படும்

May 31, 2020
காட்மேன் வெப்சீரிஸிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பிராமணர்களையும், ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டதால் வெப் சீரியல் தொடர் நிறுத்தப்படும் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியிடம், ஜி டிவி நிர்வாகத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரா உறுதியளித்துள்ளார்.

தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்

May 31, 2020
சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு, பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று இயக்குநர் பாரதிராஜா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமந்தாவைப் பற்றி அப்படி ஒரு கமென்ட்

May 31, 2020
சமந்தா, சமீபத்திய சர்ப்ரைஸாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு புராகரஸ் ரிப்போர்ட்டை பதிவிட்டிருக்கிறார். (நடிப்புல மட்டுமில்ல) “படிப்புலயும் சம்மு கில்லிதான். ஸ்கூலுக்கே சம்மு பெரிய சொத்து” என அந்த ரிப்போர்ட்டில் எழுதியிருக்கிறார், அந்த பல்லாவரம் டீச்சர். ஸ்கூலுக்கு மட்டுமா சொத்து, இந்த சமூகத்துக்கே அவங்க சொத்துதான் மேம்!

கருப்பு வெள்ளையில் ஏதோ இருக்கிறது – ராகுல் ப்ரீத்தி சிங்

May 30, 2020
ஆங்கில இதழ் ஒன்றுக்கு கோடை கால, போட்டோ ஷூட் எடுத்த நடிகை ராகுல் ப்ரீத் சிங், கறுப்பு வெள்ளையை மையமாக கொண்ட படங்கள் சில எடுத்து உள்ளார். அதில் மேலாடை இன்றி எடுத்த படத்தை, டுவிட்டரில் பகிர்ந்த அவர், வண்ணத்தில் அனைத்தும் இருந்தாலும், கறுப்பு, வெள்ளையில் ஏதோ நிறைய இருக்கிறது என, கூறியுள்ளார்.

புல்லரிக்க செய்யும் மாஸ்டர்

May 30, 2020
பேட்ட படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து, மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ”மாஸ்டர் படத்தின் டிரெய்லரை, இரண்டு முறை பார்த்தேன். நிச்சயம் புல்லரிக்க வைக்கும்,” என கூறியுள்ளார்.

முகமூடி மட்டுமே உங்களை காக்கும் – ஸ்ருதிரெட்டி

May 30, 2020
பாவாடை தாவணி என பாரம்பரியமாக வந்த தெலுங்கு நடிகை ஸ்ருதிரெட்டி, தற்போது புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்து கவர்ச்சி, ‘போட்டோ ஷூட்’டில் இறங்கியுள்ளார். கொரோனா பரவல் குறித்து அவர் கூறுகையில், ”இனி வரும் காலங்களில், முகமூடி மட்டுமே உங்களை காக்கும் என்றும், கொரோனா வைரஸ் பரவும் பாதையை முகமுடி தடுக்கும் என்பதால், அதை இனி வரும் காலங்களில் மறக்க வேண்டாம்,” எனக் கூறியுள்ளார்.

விஷ்ணுவர்தன் பெயரில் போலி கணக்குகள்

May 30, 2020
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் ‘எனக்கு முகநுால் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட, சமூக வலைதளத்தில் கணக்குகள் இல்லை’ என, அறிவித்துள்ளார். அவரது பெயரில் உலா வரும் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநுால் சமூக வலைதள கணக்குகள் அனைத்தும் போலி என அவர் கூறியுள்ளார். ”என் பெயரை தவறாக சிலர் பயன்படுத்துகின்றனர்; போலி கணக்குகளை பின்தொடர வேண்டாம்,” என, கூறியுள்ளார்.

ரித்விகா உற்சாகம்

May 30, 2020
வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படம், யாதும் ஊரே யாவரும் கேளிர். இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடிகை ரித்விகா இப்படத்திற்கான, டப்பிங்கை பேசி முடித்துள்ளார்.

உற்சாகத்தில் செல்வராகவன்

May 30, 2020
இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் திவீரமாக ஈடுபட்டு வருகிறார். இடையிடையே தனது மனநிலை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு நாள் வேலை செய்தாலே மனதுக்கு எங்கிருந்தோ பொங்கி எழும் உற்சாகம் வந்து விடுகின்றது. என் அனுபவம்”, என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு ஆண்குழந்தை

May 30, 2020
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.விஜய், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். கங்கனா ரனாவத் நடிப்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தை விஜய் இயக்கி வருகிறார். இந்நிலையில் விஜய் – ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று காலை 11 மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விஜய்யின் சகோதரர் நடிகர் உதயா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து விஜய்க்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பொன்மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் – சசிக்குமார்

May 30, 2020
அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தை பார்த்துவிட்டு திரைப்பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். நடிகர் சசிகுமார் பொன்மகள் வந்தாள் படத்தை பாராட்டி டிவீட் செய்துள்ளார். அதில், “பொன்மகளை பாருங்கள். உங்கள் பொன்மகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்”, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு முகக்கவசங்களை வழங்கிய விஷால்

May 29, 2020
நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கினார். தற்போது அண்ணாநகர் துணை ஆணையர் எஸ்.பி.முத்துசாமி IPS அவர்களிடத்தில் முகக்கவசம், கையுறைகள், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை வழங்கி இருக்கிறார்.

மக்களை தவிர்க்கும் இலியானா

May 29, 2020
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த இலியானா, நீருக்குள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மக்களை தவிர்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

கவர்ச்சி நடிகையின் மகனுக்கு அரிவாள் வெட்டு

May 29, 2020
தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார். நேற்று இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் விக்னேசை சரமாரியாக வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

May 29, 2020
ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று பற்றிக் கூறும்போது, மூன்று பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது என்றும், தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் ஆடியோ பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறினார்.

ஓடிடியை விட திரையரங்கு கொண்டாட்டமே சிறப்பானது – சூர்யா

May 29, 2020
பொன்மகள் வந்தாள் படம் ஓடிடியில் ரிலீஸ் குறித்து சூர்யா பேசும்போது, ‘திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது என்றார்.

இயற்கையின் குரலாக மாறப்போகிறேன் – பிரகாஷ்ராஜ்

May 29, 2020
நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு இயற்கை ஆர்வலர். ஊரடங்கு காலத்தைக்கூட தனது பண்ணை வீட்டில் தான் குடும்பத்துடன் செலவிட்டு கொண்டு வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு உபயோகமுள்ள பயணம். இயற்கையின் குரலாக மாறப்போகிறேன். மிகுவும் சிரமப்பட்டு தயாராக்கப்பட்ட இந்திய வன வாழ்க்கையின் ஆவணப்படம். அதற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வர்ணனை கொடுத்ததை மிகவும் சிறப்பாக உணர்கிறேன் என்றார்.

நஸ்ரியாவின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்

May 29, 2020
ஹீரோயின்கள் தங்களது சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளுவது வழக்கம். அப்படி, தற்போது குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார் நடிகை நஸ்ரியா. இந்தப் புகைப்படத்தோடு, ‘Always’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்களை காப்பாற்றுவோம் – ராய் லட்சுமி

May 29, 2020
கொரோனா பரவலால் ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி செல்லும் பரிதாபங்கள் பற்றிய செய்தி மனத்தை உலுக்குகிறது. இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

ஓடிடி ரிலீசிற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்

May 29, 2020
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தியேட்டரில் வெளியாகும் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. தற்போது ஓடிடி-யில் பொன்மகள் வந்தாள் படம் ரிலீசாகும் முன்பே திருட்டுத்தனமாக படத்தை லீக் செய்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. தியேட்டரில் ரிலீஸ் ஆன படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ், தற்போது ஓடிடி தளத்தையும் விட்டு வைக்காததால் திரைத்துறையினரை கலக்கமடைந்துள்ளனர்.

சிக்கலில் பொன்னியின் செல்வன்

May 29, 2020
கொரோனா ஊரடங்குக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புகளில் சமூக விலகலை கடைபிடிக்கவும் அதிகமானோரை படப்பிடிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அரசு கூறியிருப்பதால் கொரோனா முழுமையாக ஒழித்த பிறகே படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரியவருகிறது.

எதிர்க்கிறவங்களுக்கு கதையே புரியலை!

May 28, 2020
கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்துக்கு 10 சதவிகித விமர்சகர்கள் குறும்படத்தையே புரிஞ்சிக்காம வேணும்னே ரொம்பத் தாக்கி விமர்சனம் பண்ற மாதிரி தோணுது. இதோட கதை அவங்களுக்குப் புரியல. இதை பொயட்டிக்கா பார்க்காம வேறொரு மைண்ட் செட்ல பார்த்துட்டு தப்பா ப்ரொஜெக்ட் பண்றாங்கன்னு நினைக்குறேன்.’ என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனம் பகிர்ந்துள்ளார்.

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக.

May 28, 2020
ஒரு கலையின் ரசிகன் நினைத்தால் எதையும் மாற்ற முடியும் என்பதை அழுத்தமாய் நிரூபித்திருக்கிறது ஹாலிவுட். ஆம், மீண்டும் வெளியாகவிருக்கிறது `ஜஸ்டிஸ் லீக்.’ இந்த முறை உண்மையிலேயே ஜாக் ஸ்னைடர் இயக்கியதை வெளியிட விருக்கிறார்கள் என்பதுதான் ரசிகர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்.

கமலால் தான் கோலிவுட், பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது

May 28, 2020
தமிழ் சினிமாவுக்கு வரதுக்கும் இந்திப் பட வாய்ப்புகள் கிடைக்கிறதுக்கும் காரணமா இருந்தவர், கமல்ஹாசன் சார்தான். மலையாளத்துல நான் எடுத்த படத்துக்கு சர்வதேச விருது கிடச்சது அதை கமல் சார் பாராட்டி பிரஸ் மீட் வச்சார். அப்புறம்தான், என்னைப் பற்றித் தமிழ், இந்தி, தெலுங்கு சினிமாவுக்கு தெரிய வந்துச்சு’ என தன் சினிமா பற்றி பகிர்ந்துள்ளார் ஒளிபதிவாளர் ரவிவர்மன்.

தமிழ் கற்கும் நடிகை ராஷி கண்ணா

May 28, 2020
நடிகை ராஷி கண்ணா, தமிழ் ஆசிரியர் மூலம் தமிழ் கற்று வருகிறார். அது குறித்து இன்ஸ்டாகிராமில், “மீண்டும் பள்ளிக்கு, என்னுடைய தமிழ் பேசும் திறமையை மீண்டும் கற்று வருகிறேன், லீலா என்கிற அற்புதமான டீச்சருடன். இப்போது எனக்கு வகுப்பு உள்ளது, அடுத்து வீட்டுப்பாடம் மற்றும் வகுப்புத் தேர்வு. இந்த ஊரடங்கில் நீங்கள் என்ன ஆக்கபூர்வமான விஷயங்களைச் செய்து வருகிறீர்கள்,” என்று கேட்டுள்ளார் ராஷி கண்ணா.

உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள் – ராதிகா ஆப்தே

May 28, 2020
இது கடினமான நேரம். இந்த நேரத்தில் நம் உடல் நலம், மனதுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். ஊரடங்கை நினைத்து கவலை கொள்ளாமல், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்,’ என, நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

முகக்கவசம் அணியுங்கள் – அஞ்சலி

May 28, 2020
இரண்டு மாதத்திற்கு பின், முதல் முறையாக வெளியே வந்த நடிகை அஞ்சலி செல்லமாக வளர்க்கும் நாயுடன், காரில் பயணித்த படத்தை, டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முகக் கவசம் அணிந்தபடி உள்ள அஞ்சலி, ‘அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூர்மாசனம் கற்றுக்கொண்ட ஆஸ்னா சவேரி

May 28, 2020
நடிகை ஆஸ்னா சவேரிக்கு கூர்மாசனம் லாக்டவுன் கற்றுக் கொடுத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ”இந்த ஊரடங்கால் என்னைப் பற்றிய பல விஷயங்களை அறிந்து கொண்டேன். யோகா செய்ய ஆரம்பித்த போது, இறுக்கமான இடுப்பால், சில நுட்பமான வளைவுகளை என்னால் செய்ய முடியவில்லை.”இன்று கூர்மாசனம் செய்யும் அளவுக்கு முன்னேறுவேன் என, நினைக்கவில்லை. ஒவ்வொன்றிலும் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது,” என்றார்.

நீண்ட இடைவெளிக்கு பின் சைக்கிளிங்

May 28, 2020
கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிய நிலையில் நடிகர் ஆர்யா, நீண்ட இடைவேளைக்கு பின் ‘சைக்கிளிங்’ சென்றுள்ளார். இதை மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் படத்துடன் ஆர்யா பகிர்ந்துள்ளார். இதனுடன் மேலும் சில உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

சொந்த ஸ்டுடியோ உருவாக்கிய கங்கனா

May 28, 2020
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன் மணிகர்னிகா பட நிறுவனம் செயல்படுவதற்காக மும்பையின், பாலி ஹில் பகுதியில், 48 கோடி ரூபாய்க்கு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ”சொந்தமாக ஸ்டூடியோ உருவாக்க நினைத்தேன். ஆனால், ரங்கூன், சிம்ரன் போன்ற படங்கள் சரியாக போகாததால், என் முடிவை தள்ளி வைத்தேன். தற்போது, ‘மணிகர்னிகா’வுக்கு பின் திட்டம் நிறைவேறியது. இது ஒரு நல்ல முதலீடு,” எனக்கூறியுள்ளார்.

எது வேண்டுமனாலும் கேட்கலாம் – நந்திதா

May 28, 2020
என்னிடம் எதை வேண்டுமானாலும் கேளுங்கள். வாழ்க்கை, அன்பு, தோல்வி, பிரச்னை, சுயசார்பு, மனச்சோர்வு என எதுவாக இருந்தாலும், அதற்கான பதிலை வீடியோவாக பதிவிடுவேன். ஆனால் கேள்விகள் என்னைப்பற்றியது அல்ல; உங்களைப்பற்றியது,’ என, நடிகை நந்திதா ஸ்வேதா கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் கேள்விக் கணைகளை சமூக வலைதளத்தில் தொடுத்து வருகின்றனர்.

விபரீத முடிவெடுத்த 25 வயது டிவி நடிகை

May 28, 2020
ஊரடங்கால் வேலையின்றி பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். கிரைம் பாட்ரோல், மேரி துர்கா மற்றும் லால் இஷ்க் உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரெக்‌ஷா மேத்தா. ஊரடங்கால் வேலையில்லாத சூழலில் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

விராட் கோலி அனுஷ்காவை விவாகரத்து செய்யணும் – பாஜக பிரபலம்

May 27, 2020
பாஜகவை அவமதிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வெப் சீரிஸை தயாரித்த நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பிரமுகர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனுஷ்கா ஷர்மாவை கிரிக்கெட் வீரர் விராட் கோலி விவகாரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கிறாரா ரஹ்மான்..?

May 27, 2020
பிரபாஸ் நடித்து வரும் 20வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே இது பற்றிய தகவல் வெளிவந்து, பின் இல்லை என்றும் சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் தகவல் கசிந்துள்ளது. ரஹ்மான் இசையமைத்தால் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் படத்திற்கு இமேஜ் கூடும் என எதிர்பார்க்கிறார்கள்.

தேவரின் வாழ்க்கை படமாகிறது

May 27, 2020
‘முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையில் நடந்த சிறப்பான, சுவாரஸ்ய மான சம்பவங்களை, தேசிய தலைவர் என்ற பெயரில், சினிமாவாக எடுக்கிறார் ஜெ.எம்.பஷீர். இது குறித்து, அவர் கூறுகையில், ”தேவரின் வாழ்க்கையில் நடந்த, போற்றப்படும் சம்பவங்களை மட்டும் படமாக்குகிறோம். இதில், ராஜ்கிரண், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படம் பார்க்கும் போது உற்சாகமடைகிறேன் – சாக் ஷி அகர்வால்

May 27, 2020
நடிகை சாக் ஷி அகர்வால் சமீபத்தில் தன் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘கிஸ்’ என்ற வாசகத்தை கொண்ட ஜாக்கெட்டை அணிந்து, பதிவிட்ட படம் சர்ச்சையாகியுள்ளது. அவர் கூறுகையில், ”என் இன்ஸ்டாகிராம் குடும்பம் அழகாக இருக்கிறது. இதற்காக தற்பெருமை கொள்ளக்கூடாது. உங்கள் ஒவ்வொருவருக்கும், என் அன்பை வெளிப்படுத்துவேன். இந்த நாள் பெரியதாக இல்லை. ஆனால், உங்களுடைய செய்தி மற்றும் படங்களை பார்க்கும் போது, நான் உற்சாகமடைகிறேன்,” எனக், கூறியுள்ளார்.

சுறுசுறுப்பாகிய ஸ்ரீகாந்த்

May 27, 2020
கொரோனாவுக்கு இடையே, படங்களின் பிந்தைய பணிகள் துவங்கியுள்ளதால், 6 படங்களில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீகாந்த், சுறுசுறுப்பாகியுள்ளார். சமீபத்தில் காக்கி படத்தின், ‘டப்பிங்’ பணியை சமூக இடைவெளியோடு அவர் துவக்கியுள்ளார். செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், யோகிபாபு, இந்துஜா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஹேர் ஸ்டைலை மாற்றிய நடிகை

May 27, 2020
சுருள்முடி அழகியாக வலம் வந்த நடிகை ரித்திகா சிங், ஹேர் ஸ்டைலை மாற்றி, கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து, படங்களை வெளியிட்டுஉள்ளார்.இது, ‘டுவிட்டரில்’ வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்தவர்கள், ‘இனி ரித்திகாவை கவர்ச்சி வேடங்களிலும் எதிர்பார்க்கலாம்பா’ என, ‘கமென்ட்’ கொடுத்து வருகின்றனர்.

ஆன்லைன் ரிலீசிற்கு கொரோனா மட்டும் தான் காரணமா? ஜோதிகா விளக்கம்

May 27, 2020
ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம், கடும் எதிர்ப்பையும் மீறி, ‘ஆன்லைனில்’ வெளியாகிறது. படம் ஆன்லைனில் வெளியாகுவதற்கு கொரோனா மட்டும் தான் காரணமா?’ என, ஜோதிகாவிடம் கேட்டபோது, ”20 ஆண்டுகள் கழித்தும், என் படங்கள் பேசப்பட வேண்டும். அதை மனதில் வைத்தே, படங்களை நான் தேர்வு செய்கிறேன். ”கண்டிப்பாக, கொரோனாவால் மட்டுமே படம் ஆன்லைனில் வெளியாகிறது. கதையம்சம் கொண்ட படங்களுக்கு, ஆன்லைன் நல்ல தளமாக இருக்கும். குறிப்பாக, பெண்களை மையப்படுத்திய படங்களுக்கு, தியேட்டரில் கூட்டம் குறைவு தான்,” […]

நெருக்கமான காட்சிகளை தவிர்த்துவிடுவேன் – லாவண்யா

May 27, 2020
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் இனிவரும் நாட்களில் கதாநாயகர்களுடன் மிக நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகளை தவிர்த்து விடுவேன் என கூறியுள்ளார்.

உன்னால் தொடர்ந்து வாழமுடியும் – அருண் விஜய்

May 27, 2020
தொடர் முயற்சிகளின் காரணமாக வெற்றிப்படியில் ஏறி நிற்கும் நடிகர் அருண் விஜய் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில், “உலகமே நியாயமற்றதாக மாறும் போதும் உன்னால் தொடர்ந்து வாழ முடியும் என காட்டு”, என தெரிவித்துள்ளார்.

ராணா குறித்த பதிவை நீக்கிய த்ரிஷா

May 27, 2020
தங்களது முன்னாள் காதலியை தற்போதும் நண்பர்களாக வைத்திருப்பவர்கள் நார்சிஸ்ஸிஸ்டிக் சைக்கோபாத்ஸ்” என பதிவிட்டு ‘எனக்கு இது தெரியும்” என்றும் தலைப்பு வைத்திருந்தார். ஆனால், அதை பின்னர் நீக்கிவிட்டார். தன்னுடைய முன்னாள் நண்பரான ராணா டகுபட்டி பற்றித்தான் த்ரிஷா அப்படி பதிவிட்டிருந்தார் என்ற ஒரு சர்ச்சை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதனால்தான் த்ரிஷா அதை நீக்கிவிட்டார்.

ரசிகர்களை குஷிப்படுத்த மறவாத இலியானா

May 27, 2020
ஊரடங்கு சமயத்தில் தனது வீட்டில் இருந்தாலும் கூட தன் தோழிகளுடன் சேர்ந்து டின்னரில் கலந்துகொண்ட அனுபவத்தை பெற்றது போல் தொழில்நுட்ப உதவியால் அலங்கரித்து வைக்கப்பட்ட தன் வீட்டு மேஜையில் ரெட் ஒயின் மற்றும் டீ கோப்பை ஆகியவற்றை அடுக்கி வைத்து அந்த புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் நடிகை இலியானா. இனிவரும் நாட்களிலும் இலியானாவின் ரசிகர்களை குஷிப்படுத்தும் சேவை தொடரும் என எதிர்பார்க்கலாம்.

ரெடியானது பிச்சைக்காரன் 2 – விஜய் ஆண்டனி

May 27, 2020
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய நடிகராக வெற்றியை தந்த படம் பிச்சைக்காரன். கொரோனா ஊரடங்கில் ‘பிச்சைக்காரன் 2’க்கான கதையை இவரே எழுதி இருக்கிறார். சசி வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் இவர் இந்த பணியை கையில் எடுத்துள்ளார். மேலும் புதிய எடிட்டிங் தொழில்நுட்பமும் கற்று ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்க வாய்ப்பு உள்ளது.

சன்னி லியோனை முந்திய பிரியங்கா சோப்ரா

May 26, 2020
கொரோனா காலத்தில், இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகையரின் பட்டியலில், ப்ரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். இதில் கடந்த முறை முதலிடத்தில் இருந்த சன்னி லியோன், பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். கத்ரினா கைப், தீபிகா படுகோனே மற்றும் ஆலியா பட் ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். பிரியங்காவை, 39 லட்சத்திற்கும் மேலானோர், இணையத்தில் தேடியுள்ளனர்.

சசிக்குமாருடன் இணையும் ஆர்யா

May 26, 2020
பா.ரஞ்சித் இயக்கத்தில், சல்பேட்டா படத்தில் நடிக்க உள்ள ஆர்யா, சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு உருவாகிஉள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற, அய்யப்பனும் ஜோஷியும் படம், தமிழில் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில், பிருத்விராஜ், பிஜுமேனன் நடித்த பாத்திரத்தில், சசிகுமாரும், ஆர்யாவும் நடிக்க உள்ளனர். சசிகுமார் நடிப்பது உறுதியான நிலையில், ஆர்யாவுடன் பேச்சு நடந்து வருகிறது.

என்னை அழைக்க வில்லை – பூஜா குமார்

May 26, 2020
கமல் நடிப்பில் உருவாக உள்ள, தலைவன் இருக்கிறான் படத்தில் நான் நடிக்கவில்லை என, பூஜா குமார் கூறியுள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது, ‘அப்படத்தில் நடிக்க யாரும் தன்னை அழைக்கவில்லை’ என, பூஜாகுமார் கூறியுள்ளார். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

டிக் டாக்கிற்கு ஆதரவாக சம்யுக்தா

May 26, 2020
நடிகை கிரண், ‘டிக்டாக்’ செயலிக்கு ஆதரவு தெரிவித்து, வீடியோ வெளியிட்டார். அவரை போலவே, கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே டிக்டாக் செயலிக்கு வித்தியாசமாக ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”ஒரு தளத்தை தடை செய்வதால், அத்தளத்தில் உள்ள மக்களின் மனநிலையை மாற்றிவிட முடியாது. அத்தளம் இல்லையென்றால், வேறு ஒன்றில் பயணிப்பர். டிக்டாக்கிற்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு கவலையில்லை,” எனக் கூறியுள்ளார்.

ப்ரணிதாவின் ஆசை

May 26, 2020
சகுனி, மாசு என்கிற மாசிலாமணி படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா. ஊரடங்கில் ஏழை, எளியவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்தார். இவர் கூறுகையில், ”அப்பா – அம்மா டாக்டர் என்பதால் என்னையும் டாக்டராக்க நினைத்தனர். எனக்கு சினிமாவில் ஆர்வம். ஆரம்பத்தில் எதிர்த்தனர். பின் பட வாய்ப்பு வரவும், என் இஷ்டத்திற்கு விட்டுவிட்டனர். பல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு சினிமாவில் கிடைக்கும், அதனால் நடிகையானது பெருமையே. எனக்கு சரித்திரகாலத்து கதையில் அதற்கு ஏற்ற உடை, ஆபரணங்கள் அணிந்து நடிக்க […]

மீண்டும் ஓடிடி தளத்தில் கீர்த்தி சுரேஷின் படம்

May 26, 2020
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தெலுங்குப் படமான ‘மிஸ் இந்தியா’ படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். கொரானோ ஊரடங்கு காரணமா வெளியிட முடியாமல் இந்தப் படமும் சிக்கியுள்ளதால் தயாரிப்பாளர்கள் தவித்து வருகிறார்களாம். நல்ல விலை கிடைத்தால் விற்று விடுவார்கள் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

கூடி வாழ்வோம் – கமல்ஹாசன்

May 26, 2020
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் அன்பு அனைவருக்கும் கிடைத்து, மகிழ்வுடன் கூடி வாழும் ஒரு நாடாவோம். இந்தியர் என இணைவோம். அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

ஊர் சுற்றும் மஞ்சு வாரியர்

May 26, 2020
மஞ்சு வாரியர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம் காயாட்டம்.. இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் நாடு முழுதும் நடந்தே சுற்றித்திரியும் தேசாந்திரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கேற்றவாறு இந்தப்படத்தில் மஞ்சு வாரியருக்கும் விதவிதமான கெட்டப்புகள் இருக்கின்றனவாம். அதில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் மஞ்சு வாரியாரின் போஸ்டர் ஒன்றை ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

ரசிகர்களை ஏமாற்றிய கார்த்திக்

May 26, 2020
நடிகர் கார்த்தி சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘சுல்தான்’ படம் ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். அதனால், இப்படத்தின் முதல் பார்வையாது வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் எதையும் வெளியிட வேண்டாம் என முடிவெடுத்து விட்டார்களாம். இது கார்த்தி ரசிகர்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

இவளுக்கு பெரிய நயன்தாரானு நினைப்பு? – சித்ரா

May 26, 2020
ஆங்கரிங் வந்த புதுசுல, லைவ் வர்றப்ப… `இவளுக்கு மனசுல பெரிய நயன்தாரானு நினைப்பு’னு கமென்ட் அடிப்பாங்க. அதைப் பார்த்து எரிச்சலடைய கூடாது. எதிர்மறைக் கருத்துகளை கடந்து போக பழகிட்டா பிரச்சனை இல்லை. அவங்களுக்குப் பதில் சொல்லிட்டிருந்தா நம்ம நேரமும் எனர்ஜியும்தான் வேஸ்ட்!’ என் அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சின்னத்திரை நடிகை சித்ரா.

லாக் டவுன்ல வாழ்க்கை ரொம்பவே அழகா இருக்கு

May 26, 2020
ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். தோட்டப் பராமரிப்பு ரொம்ப பிடிக்கும். அப்புறம் ராத்திரியானாலே, அம்மா, அப்பா, நான், என் செல்லக்குட்டி மோமோ எல்லாரும் மொட்டை மாடிக்குப் போயிடுவோம். அப்பா விசில் மூலமா பாட்டு பாடறதுல எக்ஸ்பர்ட். உண்மையைச் சொல்லணும்னா, லாக் டெளன்ல வாழ்க்கை ரொம்பவே அழகா இருக்கு’ என கூறியுள்ளார் சின்னத்திரை நடிகை சரண்யா.

பெயர் மாற்றம் குறித்து ராஷ்மிகா

May 26, 2020
நடிகை ராஷ்மிகா தனது பெயருக்கு பதிலாக வேறு என்ன பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என ஒரு கேள்வியை வீசினார். உடனே ரசிகர்கள் ஆளாளுக்கு லில்லி, ரோஸி, கரிஷ்மிகா, ராதா என விதம் விதமான தங்களுக்கு பிடித்த பெயர்களாக கூற ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் ராஷ்மிகா என்கிற பெயரே தனித்துவமாக, உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என கூறி ராஷ்மிகாவின் மனதை குளிர்வித்தார்கள்..

ரம்ஜான் வாழ்த்து – ஹன்சிகா

May 25, 2020
நடிகை ஹன்சிகா ‘டுவிட்டர்’ மூலம் ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார். ‘இன்று ஈத் கொண்டாடும் அனைவருக்கும், ஈத் முபாரக்’ எனக் கூறியுள்ள அவர், ‘ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும், ஒரு புதிய விடியலின் வாக்குறுதியை கொண்டு வருகிறது. ‘நாளைய தினத்தை பிரகாசமாக எதிர்நோக்குவோம்’ என தன் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

பெப்ஸி தொலாளர்களுக்கு பாஜக சார்பில் மாஸ்க்

May 25, 2020
சின்னத்திரையை தொடர்ந்து, சினிமா படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. படப்பிடிப்பு தளங்களில் பணியாற்றும், ‘பெப்சி’ தொழிலாளர்களுக்காக, தமிழக பா.ஜ., சார்பில், 25 ஆயிரம் முக கவசங்கள் வழங்கப்பட்டன. பா.ஜ., தலைவர் முருகனிடமிருந்து முக கவசங்களை, பெப்சி தலைவர் செல்வமணி பெற்றுக் கொண்டார்.

ஆகஸ்ட் முதல் காத்து வாக்குல ரெண்டு காதல்

May 25, 2020
ஆகஸ்ட் முதல் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தயாரிப்பாளர் லலித்குமார் கூறியுள்ளார். நானும் ரவுடி தான் படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்க, விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடிக்கின்றனர். கூடுதலாக சமந்தாவும் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும், இரண்டு விதமான காதல் பற்றியதே இப்படம். சமீபத்தில் இப்படத்தில் இருந்து, சமந்தா விலகுவதாக தகவல் வெளியானது. படம் ஆரம்பித்தால் தான், எந்த மாதிரி கூட்டணி […]

அய்யப்பனும் ஜோஷியும் தமிழ் ரீமேக்கில் ஆர்யா, சசிக்குமார்

May 25, 2020
அய்யப்பனும் ஜோஷியும்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஒரு செல்வாக்கு மிக்க முன்னாள் ராணுவ வீரர். அய்யப்பன் நாயர் சாதாரண போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். இவர்கள் இடையேயான மோதல், ஈகோ, இருவரது வாழ்க்கையையும் என்னவாக்குகிறது என்பதுதான் படம். தமிழ் ரீமேக்கில் பிஜு மேனன் கேரக்டரில் சசிகுமார் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. பிருத்விராஜ் கேரக்டரில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இளவரசருக்காக காத்திருக்கிறேன் – ஷெரீன்

May 25, 2020
துள்ளுவதோ இளமை படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷெரீன். இவர் சமீபத்தில், ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமானார். கொரோனா முடிவுக்கு வந்ததும், வெள்ளித்திரையில் மீண்டும் வலம் வர ஆவலோடு காத்திருக்கிறார். இந்நிலையில், தனக்கு வரப்போகும் கணவன் குறித்து அவர் கூறுகையில், ”இப்போதைக்கு என் வாழ்க்கையில், கணவராக வரப்போகும் நபர் யாரும் இல்லை. என் வீட்டுக்கு வரப்போகும் இளவரசருக்காக காத்திருக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

கனவை நம்புங்கள்

May 25, 2020
காதல் கண் கட்டுதே படம் மூலம், தமிழுக்கு வந்தவர் நடிகை அதுல்யா ரவி. சமீபத்தில் வெளியான, அடுத்த சாட்டை படம் மூலம், திறமையான நடிகை என, பெயர் எடுத்தார். டுவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர், ”உங்கள் கனவை நம்புவதை எப்போதும் கைவிட வேண்டாம்,” எனக் கூறியுள்ளார்.

சதவீத சம்பளத்திற்கு நடிகர் இந்தர் குமார் ஆதரவு

May 25, 2020
குற்றம் 23, தடம், கொம்பு வைச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவரும், நடிகருமான இந்தர் குமார் சதவீத அடிப்படை என்ற புதிய முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சதவீத அடிப்படையில் சம்பளம் என்ற முறை என்பது இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்தாலும் நமது தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் துறையில் அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்றார்.

மஹிமாவின் டெடிபிரெட்

May 25, 2020
சமையலறை பக்கமே எட்டிப்பார்க்காத பல நடிகைகளை, கிட்சனே கதி என கிடக்க வைத்துவிட்டது கொரோனா ஊரடங்கு. அந்த வகையில் நடிகை மஹிமா நம்பியார் பன்னை வித்தியாசமாக டெடிபியர் பொம்மை போல பேக் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், அதற்கு டெடிபிரெட் என பெயர் சூட்டியுள்ளார்.

தீவிர உடற்பயிற்சியில் நடிகர், நடிகைகள்

May 25, 2020
ஊரடங்கு முடியும் தருவாயில், இதுவரை ஓய்வில் இருந்த நடிகர், நடிகையர் பலர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை அஞ்சலியும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் உடற்பயிற்சி செய்யும் அவரது அருகில் மெத்தை மீது நாய் ஒன்று ஒய்யாராமா படுத்துக் கொண்டு, அஞ்சலி செய்வது போலவே அதுவும் தலையை ஏற்றி இறக்கி உடற்பயிற்சி செய்கிறது.

அது பற்றி எனக்கு கவலையில்லை – சம்யுக்தா

May 25, 2020
சமூகவலைதளங்களில் ஒன்றான டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வழுத்து வருகிறது. இதுப்பற்றி கோமாளி, பப்பி படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே சமூகவலைளத்தில், ”ஒரு தளத்தை தடை செய்வதால் மக்களின் மன நிலையை மாற்ற முடியாது. அது இல்லையென்றால் இன்னொன்றை தேடி போவார்கள். டிக் டாக்கிற்கு என்ன நடந்தாலும் அது பற்றி எனக்கு கவலையில்லை” என பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் புதிய உடைகளைப் பரிசளிப்பார்

May 25, 2020
ரம்ஜான் நாளில் பலகார வகைகளை தயார் செய்து எல்லோருக்கும் பகிர்ந்தளித்து நாங்களும் சாப்பிடுவோம். அதன் பிறகு என் அம்மா வீட்டுக்கு செல்வேன். என் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்திப்பேன். அவர் ஆண்டுதோறும் புனித எங்களுக்குப் புத்தாடைகளைத் தருவார். அவற்றை அணிந்துகொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவோம்’ என பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் ரஹானா.

எதுவும் நம் கையில் இல்லை – ராஷ்மிகா

May 25, 2020
நடிகை ராஷ்மிகா, கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் பாதுகாப்பற்ற தன்மையை அதிகம் உணர்கிறேன். என வேலை, என் இதயம், என் தோற்றம், என் மன ஆரோக்கியம். இப்படி அனைத்தை பற்றியும் கவலைப்படுகிறேன். உண்மையாக யோசித்தால் இது எதுவும் நம் கையில் இல்லை. நம்மால் ஒரு விஷயம் தவறாக போனால், நம்மால் செய்ய முடிகிற விஷயத்தை செய்ய முடியாமல் போனால் அதற்காகத்தான் கவலைப்பட வேண்டும். அவற்றை கடந்து செல்ல பழகிக் கொள்வோம். என்கிறார்.

சிரிப்பு நாயகனுக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து

May 24, 2020
சென்னை கிங்ஸ் அணிவீரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரருமான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார். அதில், ஒருத்தர சிரிக்க வைக்கறது மிக பெரிய விஷயம் அத ரொம்ப சுலபமா செஞ்சு மக்கள் மனசுல சிரிப்பு நாயகனாக இடம் பிடிச்சு அசத்துறீங்க.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ@actorsathish நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் #Friendship படத்தில் உங்கள் சிரிப்பு மழையில் நினைய காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கமல் பாணியில் டுவிட் செய்த பா.ரஞ்சித்

May 24, 2020
கமல் பாணியில் புரியாத டுவிட் ஒன்றை இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டரில் நேற்று பதிவு செய்தார். இந்த டுவிட்டில் உள்ள ஆடுகள், புற்கள், அமிர்தம் ஆகியவை எதைக் குறிக்கின்றது என்பது புரியாமல் தவித்த நெட்டிசன்கள், அவரவர் இஷ்டத்திற்கு தங்களுடைய பாணியில் அந்த டுவிட்டிக்கு அர்த்தம் கற்பித்தனர். இதனால் பதட்டமடைந்த பா ரஞ்சித் பின்னர் தானே அந்த டுவிட்டிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி படம் வெற்றி பெற வாழ்த்து – வைரமுத்து

May 24, 2020
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதனை பார்த்த வைரமுத்து தனது பாணியில் கவிதை வடிவில் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தலைவன் இருக்கின்றான் படத்தில் நான் இல்லை – பூஜா குமார்

May 24, 2020
கமல்ஹாசன் நடிக்க உள்ள ’தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தில் பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக செய்திகள் வெளி வந்தது. ஆனால் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் இப்பொழுது வரை அந்த படத்தின் குழுவினர் யாரும் தன்னிடம் நடிக்க அழைப்பு விடுக்கவில்லை என்று பூஜாகுமார் கூறியுள்ளர்.

மாளவிகா மோகனிடம் விஜய் கூறியது என்ன ?

May 24, 2020
நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “எனது முதல் நாள் ஷூட்டிங்கில், தளபதி விஜய்யுடன் நடிப்பதற்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் அவர் என்னிடம் ரொம்ப நல்ல பண்ணுறீங்க, உங்க எனர்ஜி நல்ல இருக்கு என என்னை ஊக்குவித்தார்.

அது மட்டும் முடியாது – முருகதாஸ்

May 24, 2020
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் முருகதாஸ், திரிஷா நடித்து வரும் ராங்கி படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் ஆப் ரெடியாக தற்போது செகண்ட் ஆப் வேலைகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து பலரும் இந்த படத்தை OTTயில் கேட்க முருகதாஸ் முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம்.

கொரோனா விழிப்புணர்வு படம் தயாரிக்கும் சின்னத்திரை நடிகர்

May 24, 2020
சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர் கணேஷ் பாபு, கொரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட விழிப்புணர்வு விளம்பரங்களை இயக்குவதில் பெருமைப்படுகிறேன்.

திருப்பூர் விநியோகஸ்தரின் எளிதான தீர்வு வரவேற்கக்கூடியது

May 24, 2020
பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது. நடிகர்களுக்கு சதவீத அடிப்படை சம்பளம் என்பதால் தயாரிப்பாளர்கள் பல படங்களை எடுக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். நிறைய படங்கள் வெளிவரும். வாய்ப்புகள் அதிகம் ஆவதால் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்கலாம். இது நடிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து கலைஞர்களுக்கும் என்றால் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.

இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷ் புதிய சாதனை

May 24, 2020
நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகைகளிலேயே மளமளவென உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பிஸியாக உள்ளார். அவரது இன்ஸ்ட்ராம் பக்கத்தில் தற்போது அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

4 உடைகளுடன் அபுதாபியில் சிக்கிய பாலிவுட் நடிகை

May 23, 2020
நாகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை மவுனி ராய். விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் அபுதாபி சென்றிருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், உடனடியாக இந்தியா திரும்ப முடியவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக வெறும் நான்கு உடைகளுடன் அவர் அபுதாபியிலேயே சிக்கியுள்ளார்.

மாஸ்டர் படத்தோடு மோதும் சிவகார்த்திகேயனின் டாக்டர்

May 23, 2020
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும், டாக்டர் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை, தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட, ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். தற்போது, கொரோனாவால், விஜயின், மாஸ்டர் படம், தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், விஜயுடன், சிவகார்த்திகேயன் மோதுவாரா என்ற கேள்வி எழுந்தது.

கங்கனாவால் தலைவிக்கு ஏற்பட்ட சிக்கல்

May 23, 2020
மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலரும் படமாக்கி வருகின்றனர். அதில், விஜய் இயக்கும், தலைவி என்ற படத்தில், கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரபல பாலிவுட் புகைப்படக் கலைஞர் தபூ ரட்னானி யின், 25ம் ஆண்டு புகைப்படக்கலையை சிறப்பிக்கும் வகையில், அவரது கைவண்ணத்தில் உருவான பாலிவுட் நடிகையரின் புகைப்படங்கள், டுவிட்டரில் பகிரப்பட்டன. இதில், கங்கனா ரணாவத்தின் படம், தலைவி படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கவர்ச்சியில் அலாதி பிரியம் கொண்ட திஷா பதானி

May 23, 2020
தமிழில், சுந்தர் சி இயக்கத்தில், சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த, பாலிவுட் நடிகை திஷா பதானி, சமூக வலைதளத்தில் கவர்ச்சிப் படங்களை பதிவிடுவதில், அலாதி பிரியம் காட்டி வருகிறார். கடற்கரையில் நீச்சல் உடையில் அமர்ந்துள்ள படுகவர்ச்சியான படத்தை, நேற்று பகிர்ந்துள்ளார்.

திரெளபதியின் மனநிலையில் நான் – சீனுராமசாமி

May 23, 2020
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, இடம் பொருள் ஏவல் படம், ஆறு ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இந்நிலையில், சீனுராமசாமி கூறுகையில், உருவப்படும் சேலையை பற்றாமல், தன் இரண்டு கைகளையும் உயர்த்தி, கிருஷ்ணா… கிருஷ்ணா என பதறிய, திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எனக்கு, இந்த திரைப்படம் தான் ஆறுதல் என்றார்.

தனுஷுன் அதிர்ஷ்டம்

May 23, 2020
வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தில் நடித்த தனுஷ், தற்போது, புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம் படங்களின் இரண்டாம் பாகத்திலும், நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பளம் குறைப்பிற்கு பெரிய நடிகர்கள் மவுனம்! டாப்ஸி

May 23, 2020
கொரோனாவால் முடங்கியுள்ள திரைத்துறையை மீட்கும் வகையில், நடிகர் – நடிகையர் பலர், தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்து வருகின்றனர். இதுவரை, விஜய் ஆன்டனி, ஹரீஷ் கல்யாண், அருள்தாஸ், ஆர்த்தி, நாசர், மஹத், உதயா உள்ளிட்ட பலர், சம்பளத்தை குறைக்க, நடிகை டாப்சியும் தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்க, சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தார். ஆனால், இது குறித்து பெரிய நடிகர்களோ, நடிகையரோ, இதுவரை வாய் திறக்கவில்லை.

ஒப்பீடுதான் மிகப்பெரிய வியாதி – செல்வராகவன்

May 23, 2020
தற்போது நாட்டில் இருப்பதிலே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வது தான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம்!” இயக்குநர் செல்வராகவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

லாக்டவுனில் மிகப்பெரிய எண்டர்டெயினர் ஜெயம்ரவி

May 22, 2020
கொரோனா லாக்டவுனில் பல புதிய படங்களையும் முன்னணி நடிகர்களின் படங்களையும் தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர். அதில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களில், ஆதிபகவன் திரைப்படத்தை தவிர மற்ற திரைப்படங்கள் அனைத்தைதும் ஒளிபரப்பாகிவிட்டது. மேலும் இதனை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

பெயர் மாற்றத்தினால் வாழ்க்கை பிரகாசிக்கலாமா..?

May 22, 2020
பட்டதாரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி மேனன். அதன் பிறகு சொந்த மாநிலமான கேரளாவிற்கே திரும்பி சென்று விட்டார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதமர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த அடையாளத்துடன் மீண்டும் கோடம்பாக்கத்தில் தலைகாட்டத் துவங்கினார்.

மீண்டும் ஒரு ரவுண்டு வரத்துடிக்கும் இனியா

May 22, 2020
நடிகை இனியா, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன் கருத்துகள் முழுவதையும் மலையாளத்தில் பதிவிடுகிறார். வாழ்க்கை தந்த தமிழ் திரையுலகையும் அவர் மதிக்க தவறுவது இல்லை. தமிழ் ரசிகர்களுக்கு பண்டிகை வாழ்த்து, கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றை தமிழில் பேசி, ‘வீடியோ’க்களை பதிவிடுகிறார். தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறாராம் இனியா.

மேக் அப்பில் வெளுத்து வாங்கும் சாக் ஷிஅகர்வால்

May 22, 2020
‘பிக்பாஸ்’ பிரபலமான சாக் ஷி அகர்வால், ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக கழித்ததாக பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். தினமும், காலை மற்றும் மாலையில் வியர்க்க விறுவிறுக்க கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்; இதன்பின், சமையலையும் ஒரு கை பார்க்கிறார். ‘மேக் அப்’ கலையையும் விட்டு வைக்கவில்லை. தனக்குத் தானே விதம் விதமாக மேக் அப் போட்டு, அழகு பார்த்துக் கொள்கிறார். படப்பிடிப்புகள் துவங்கியதும், மேக் அப்பில் வெளுத்து வாங்கப் போகிறேன்,” என்றார் சாக் ஷி.

ஒடிசா மக்களுக்காக நடிகை ஹன்சிகா பிரார்த்தனை

May 22, 2020
அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம், கோல்கட்டா மற்றும் ஒடிசா மக்களுக்காக நடிகை ஹன்சிகா பிரார்த்தனை செய்துள்ளார், ‘இது கனவாக இருக்க வேண்டும்’ என, டுவிட்டரில் கூறியுள்ள அவர், ‘ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும், ஒரு புதிய விடியலின் வாக்குறுதியை கொண்டு வருகிறது. நாளை பிரகாசத்தை எதிர்நோக்குவோம்’ என தெரிவித்துள்ளார்.

மொபைல் ஆப் மூலம் க்ளைமேக்ஸ் ரிலீஸ்

May 22, 2020
சர்ச்சைக்கு பெயர் பெற்ற பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள க்ளைமாக்ஸ் படம் ஸ்ரேயாசெட் என்ற மொபைல் ஆப் மூலம், ஆன்லைனில், 29ம் தேதி வெளியாகிறது. மியா மல்கோவா நடித்துள்ள இப்படம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. டீசருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வெளியீடு குறித்து, ராம்கோபால் வர்மா கூறுகையில், “கொரோனாவை விட, ஆன்லைன் தளங்கள், தியேட்டர்களுக்கு ஆபத்தாக இருக்கும்,” என்றார்.

சினிமாவின் அடுத்த கட்டம் ஆன்லைன் – ஜோதிகா

May 22, 2020
பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ஜோதிகா நடித்துள்ள, பொன்மகள் வந்தாள் படம், 29ல், ஆன்லைனில் வெளியாகிறது. படத்தை பேட்ரிக் இயக்கியுள்ளார். படம் குறித்து ஜோதிகா பேசுகையில், ஒரு, சமூக அக்கறையுள்ள த்ரில்லர் படம். நடித்த படங்களிலேயே இப்படத்திற்கு தான், அதிக உழைப்பை கொடுத்துள்ளேன். நானே,’டப்பிங்’ பேசியுள்ளேன். ‘வெண்பா’ என்றவழக்கறிஞராக நடித்துள்ளேன். கொரோனாவால் தான் இப்படத்தை ஆன்லைனில் வெளியிடுகிறோம். சின்ன பட்ஜெட் படங்களுக்கு, ஆன்லைன் தளம் நல்ல வாய்ப்பாக இருக்கும். சினிமாவின் அடுத்தகட்டமாக ஆன்லைன் இருக்கும் என்றார்.

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் கை கோர்க்கும் செல்பி

May 22, 2020
ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜிவி.பிரகாஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லமா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் நடிக்கிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவும் செய்கிறார். படத்திற்கு செல்பி என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார். கல்லூரி மாணவன் ஒருவனுக்கு கல்லூரிக்கு வெளியே ஏற்படும் இன்னல்களை சொல்லும் விதமாக இப்படம் தயாராகிறது. ஜிவி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

த்ரிஷ்யம் 2 உறுதியானது

May 21, 2020
7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் ரூ.50 கோடி வசூலித்த முதல் படம். இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அந்த ஊருக்கு புதிதாக வரும் ஒரு இன்ஸ்பெக்டர் கைவிடப்பட்ட அந்த வழக்கை திரும்ப எடுத்து விசாரிப்பதாகவும் அதை மோகன்லால் எப்படி சமாளிக்கிறார் என்பதாகவும் கதை நகரும் என்கிறார்கள்.

சந்திரமுகி-2 வில் நானா..? ஜோதிகா கேள்வி

May 21, 2020
சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அந்த கேரக்டரில் யார் நடித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள். கொரோனாவும், அதைத் தொடர்ந்து வந்த ஊரடங்கும் நமக்கு சில பாடங்களை நடத்தியுள்ளது. அதை புரிந்து கொண்டு நம் வருங்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். என்கிறார் ஜோதிகா.

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெற்ற விஜய் படம்

May 21, 2020
கொரோன காரணமாக எந்த ஒரு முன்னணி தொலைக்காட்சிகளிலும் சீரியல்களை ஒளிபரப்பு செய்யமுடியவில்லை. அதனால் படங்களை மட்டுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். அதில் டாப் 3 இடங்களை பிடித்திருப்பது : 1. காஞ்சனா 3, 2. தர்பார், 3. கில்லி இந்த மூன்று படங்கள் தான் தற்போது TRP-யில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது.

தமிழில் வெளியான சர்ச்சைக்குரிய படங்கள்

May 21, 2020
தமிழ் திரையுலகில் படங்கள் எடுப்பதற்கென்று பல வகையான நுணுக்கங்கள் உண்டு. அதில் ஒன்று தான் 18+ படங்கள். அப்படி தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த 18+ சர்ச்சைகுரிய திரைப்படங்கள், 1. த்ரிஷா இல்லனா நயன்தாரா, 2. சிந்து சமவெளி, 3. மிருகம், 4. இருட்டு அறையில் முரட்டு குத்து, 5. ஹர ஹர மஹாதேவகி, 6. 90ML, 7. ஆடை

அஜித்திற்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்தேன் – கே.எஸ்.ரவிக்குமார்

May 21, 2020
அஜித் வரலாறு படத்தில் நடிக்க மிகவும் யோசித்து வந்ததாக கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளார். அதோடு தான் மிகவும் தைரியம் சொல்ல, அஜித் துணிந்து நடித்தார், அது தான் படத்தின் வெற்றிக்கு காரணம், அஜித் துணிந்து நடித்தார் என கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் புத்திசாலி – லாவண்யா திரிபாதி

May 21, 2020
பிரம்மன், மாயவன் படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி, தெலுங்கில் இரண்டு படமும், தமிழில் ஒரு படமும் நடித்து வருகிறார். சமீபத்தில் டுவிட்டரில் கூறியதாவது: எனக்கு பிடித்த சுற்றுலா தலம், உத்தரகண்டில் உள்ள நைனிடால். சசிகுமாரை பற்றி சொல்ல வேண்டுமானால், பலருக்கு உத்வேகத்தை தருபவர். கீர்த்தி சுரேஷ் புத்திசாலியான நடிகை. நடிப்புத்திறன் என்பது கதையை பொறுத்தது. கதாபாத்திரம் வலுவாக இல்லையென்றால் மக்கள் சினிமாவுக்குள் இணைய மாட்டார்கள் என்று கூறினார்.

டிக் டாக் உடன் வாழ்வோம் – கிரண்

May 21, 2020
உலகம் முழுக்க பலரும் டிக்டாக் செயலியை கண்டித்து வரும் வேளையில், நடிகை கிரண், டிக்டாக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ‘டிக்டாக்கை வெறுப்பவர்கள் மன்னிக்கவும். என் வேடிக்கைக்கு வேறு எதுவும் இல்லை. எனவே டிக்டாக் உடன் வாழ்வோம்’ எனக் கூறி உள்ளார்.

சமூக இடைவெளியுடன் கொரோனாவை விரட்டுவோம்

May 21, 2020
நடிகர் ஆரி அர்ஜுனாவின், ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை சார்பில் சேலம், தாரமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இது குறித்து ஆரி கூறியதாவது: இயற்கை, மொழி, கலை போன்ற சமூக சிந்தனையுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், இயற்கை பேரிடர் காலத்தில், மக்களுடன் மக்களாக தோள்கொடுத்து உதவி வருகிறோம். சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனாவை விரட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

நம் குடும்பத்தை பாதுகாப்போம் – அமைரா

May 21, 2020
அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலே இருப்போம்’ என நடிகை அமைரா தஸ்துார் தெரிவித்தார். கொரோனா மற்றும் ‘அம்பான்’ புயல் பாதிப்பில் இருந்து தப்பிக்க, அனைவரும் வீட்டிலேயே இருந்து, நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்போம். கொரோனா பாதிப்பில் குறைவாக இருந்தாலும், இதுவரை காணாத மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை, சந்தித்து கொண்டிருக்கிறோம் என்றார்.

இனிமேல் இப்படித்தான்! – ஹூமா குரேஷி

May 21, 2020
அஜீத் நடிக்கும் ’வலிமை’ படத்தில் நடித்து வருபவர் நடிகை ஹூமா குரேஷி. இவர் தனது சமூக வலைத்தளத்தில் தான் ஆட்டம் போடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இனிமேல் லாக்டவுன் இல்லை என்ற அறிவிப்பு வந்தால் என்னுடைய டான்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று அவர் கூறி ஒரு இந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தமிழில் அறிமுகமாகும் சாண்ட்ரா நாயர்

May 20, 2020
மலையாளத்தில் வெளியான மூணாம் பிரளயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாண்ட்ரா நாயர். அங்கு அறிமுகமான கையோடு தமிழுக்கு வருகிறார். பிரபல விளம்பர பட இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கும் சின்னஞ்சிறு கிளியே என்ற படத்தின் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.

அதில் ஒன்றும் தவறில்லையே! நடிகை ரேஷ்மா

May 20, 2020
நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி சமீபத்தில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னை ரசிகர்கள் முன், நிலை நிறுத்தினார். சமீபத்தில் ரசிகர் ஒருவர், ‘உங்களை பார்க்க ஆபாச நடிகையரை போல் உள்ளீர்களே…’ என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இவர் பதிலளிக்கையில், ”அந்த மாதிரி ஆபாச நடிகையரை போல், நான் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மற்றவர்களை மகிழ்விப்பதில் அது ஒன்றும் தவறில்லை,” எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் பலத்தில் சந்திரிகா ரவி

May 20, 2020
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர், நடிகை சந்திரிகா ரவி, அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில், தனியே வசித்து வருகிறார். இந்த கொரோனா காலத்தில், பெற்றோர் மற்றும் சகோதரியை பார்க்க முடியாமல், தனியே வசிப்பது கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனக்கு பலமாக இருப்பது ரசிகர்கள் மட்டுமே,” எனக் கூறியுள்ளார்.

நம் நாட்டில் என்னதான் நடக்கிறது ? வர்ஷா கேள்வி

May 20, 2020
விஜய் சேதுபதியுடன் 96 மற்றும் விஜய் உடன் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் தமிழில் தனக்கான நிரந்தரமான இடத்தை தேடி வரும் வேளையில் சமூக அக்கறையோடு, ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைவதும், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதுமாக உள்ளது. நம் நாட்டில் என்ன தான் நடக்கிறது?’ என, கேள்வி எழுப்பியுள்ளார்.

டுவிட்டரிலிருந்து விலகினார் கஸ்தூரி

May 20, 2020
‘டிவி’ விவாதத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த கரு.நாகராஜன், காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி மீது தொடுத்த, தனிமனித தாக்குதல் குறித்து கருத்து கூறியுள்ள நடிகை கஸ்துாரி, ‘நாகராஜன் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ‘என்னம்மா கேவலமா பேசுறியே…’ என்பதற்கும், நீ கேவலமான பெண் என்பதற்கும், அபாயகரமான வித்தியாசம் உள்ளது’ என, குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், டுவிட்டரில் கருத்து கண்ணம்மாவாக வலம் வந்த கஸ்துாரி, டுவிட்டரில் இருந்து விலகி முகநுாலில் மட்டுமே பயணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஹாரர் திரில்லர் படமாக உருவாகும் ‘மேதாவி’

May 18, 2020
பாடலாசிரியர் பா. விஜய் இயக்கும் புதிய படம் குறித்து வெளியாகியுள்ளது. ‘மேதாவி’ என்கிற தலைப்பு கொண்ட இப்படத்தில் ‘ஆக்சன் கிங்’ அர்ஜூன் –ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் ஹாரர் திரில்லராக படமாக உருவாகிறது.

பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் – குஷ்பு

May 18, 2020
கொரோனா கால ஊரடங்கு பல விஷயங்களை நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. குறிப்பாக பழைய வாழ்க்கைக்கு நாம் திரும்ப வேண்டும் என்கிறார் குஷ்பு. வாழ்க்கையின் மிகவும் கடினமான சூழலில் நாம் இப்போது இருக்கிறோம். இந்த கிருமி தொற்று மிகவும் புதியது. அடுத்தது நாம் என்ன செய்வது என்று நமக்கு தெரியவில்லை. வாழ்க்கை தற்போது இயங்க முடியாத ஒரு நிலைக்கு வந்துள்ளது. நாம் இருந்த பழைய வாழ்க்கை முறைக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

சர்ச்சை ஏற்படுத்திய வாசகங்கள்

May 18, 2020
திஷா பதானி என்பவர் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். அடிக்கடி உள்ளாடை மட்டுமே அணிந்த புகைப்படங்களை விளம்பரத்திற்காக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அவர் அணிந்துள்ள ஆடையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் ஆபாசமாக இருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

காதலை சொல்ல விடாமல் தடுக்கும் இயற்கை

May 18, 2020
தனுசு ராசி நேயர்களே படம் மூலம் இயக்குனர் ஆனவர், சஞ்சய் பாரதி. இவர் சந்தானபாரதியின் மகன் ஆவார். நாங்க படம் மூலம் நடிகரான, சஞ்சய்பாரதி, பின் உதவி இயக்குனராகி தற்போது, இயக்குனர் ஆகியுள்ளார். ‘காதலென்னும் பேரழிவு’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி, டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கவிதையில், ‘ஒரு முறை சொல்ல நினைத்தேன், சுனாமி ஏற்பட்டது. மறுமுறை சொல்ல நினைத்தேன், வர்தா புயல் என்னை துாக்கி எறிந்து விட்டது. இப்போது கொரோனா. இன்னும் என் காதலை சொல்லாமல் […]

உடற்பயிற்சி குறித்து அருண் விஜய் அட்வைஸ்

May 18, 2020
உடற்பயிற்சி செய்வதை மொபைலில் பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவது பேஷனாகி விட்டது. நடிகர் – நடிகையர் பலர், இதில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றனர். நடிகர் அருண் விஜய், இம்மாதிரி உடற்பயிற்சி செய்த போது, கீழே விழுந்த வீடியோவை, ‘டுவிட்டரில்’ பகிர்ந்துள்ளார். அதில், ‘உடற்பயிற்சி செய்யும் போது, அனைத்தையும் சரிபார்த்து விட்டு செய்யத் துவங்குங்கள். பயிற்சியாளர் இல்லாமல், உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

கணவர்மார்களின் இதயத்தில் இடம்பிடித்த சாந்தனு

May 18, 2020
செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்; செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் புருஷன்’ என்ற ஒரே, ‘டயலாக்’ மூலம் கணவன் மார்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார், நடிகர் சாந்தனு. ‘யு டியூப்’ சேனலை துவக்கியுள்ள சாந்தனு, மனைவியுடன் சேர்ந்து, ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்படம் ஒன்றை நடித்து, இயக்கி, ‘எடிட்’ செய்துள்ளார்.படத்தை மொபைல் போனிலேயே எடுத்துள்ளார். இதில், மனைவியர் படும் துயரங்களை மிகவும் யதார்த்தமாக எடுத்துரைத்துள்ளார் சாந்தனு.

மகிழ்ச்சியில் ஸ்ரீகாந்த்

May 18, 2020
மிருகா படத்தில் துவங்கி, மஹா, காக்கி என, ஒவ்வொரு படத்திலும் வெவ்வெறு விதமான பாத்திரங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக, நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ராய்லட்சுமியுடன் நடித்த, மிருகா படம், வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ஹன்சிகா உடன், மஹா படத்தில் நடித்துள்ளேன். விஜய் ஆன்டனியுடன், காக்கி மற்றும் உதயநிதியுடன் ஒரு படத்திலும் இணைந்துள்ளேன். ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்புகள் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்வமுடன் எதிர்பார்க்கும் சல்பேட்டா

May 18, 2020
நாயகிமாடல் அழகியாக இருந்து நடிகையாக உயர்ந்துள்ளவர் துஷாரா. போதை ஏறி புத்திமாறி படத்தை தொடர்ந்து, அன்புள்ள கில்லி படத்தில் நடித்துள்ளார். தற்போது, ஆர்யா ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கும், சல்பேட்டா படத்தில் நடிக்கிறார்.இந்நிலையில், இவர் நடித்த, கண்ணம்மா குறும்படம், 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, ஊரடங்கு முடிந்ததும், சல்பேட்டா படத்தின் படப்பிடிப்பை, துஷாரா ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளார்.

ரசிகர்களின் வருகையே அதிகரிக்குமா ஆடுபுலி ஆட்டம்

May 18, 2020
ஊரடங்கு காரணமாக தியேட்டர்களின் நிலைமை மோசமாகிக் கொண்டு போகிறது. வருகிற ஜூன் மாதம் திறக்க அனுமதிக்க வேண்டும்’ என, தியேட்டர் உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளனர். ‘உரிய சமூக இடைவெளியோடு பாதுகாப்பாக ரசிகர்கள் படம் பார்க்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்படும்’ என, தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தியேட்டர் திறக்கப்பட்டதும், ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க, விஜய் நடித்த, மாஸ்டர் படம் வெளியானால், பெரும் வாய்ப்பாக அமையும் என, திரையுலகினர் எதிர்பார்த்துள்ளனர்.

எதையும் புன்னகையால் சாதிக்க முடியும் – ஷாலு ஷம்மு

May 18, 2020
காஞ்சிவரம், மயிலு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த, ஷாலு ஷம்மு, சமூக வலைதளத்தில் கவர்ச்சிப் படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் கூறுகையில், ”எதையும் ஒரு சின்ன புன்னகையால் செய்ய முடியும் என்பதை, நாம் பலமுறை மறந்து விடுகிறோம்,” என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய பிரியா வாரியர்

May 17, 2020
சினிமாவில் அதிகம் நடிக்காவிட்டாலும் இன்ஸ்ட்ராகிராமில் பிசியாக இருந்தவர் நடிகை பிரியா வாரியர். 72 லட்சம் பேர் அவரை பின் தொடர்ந்தார்கள். தற்போது திடீரென இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறி விட்டார். காரணம் சினிமா வாய்ப்பு இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்துகிறாரராம்.

தாய்மொழி கற்று வரும் தமன்னா

May 17, 2020
நடிகை தமன்னா கொரானோ ஊரடங்கு காலத்தில் அவருடைய அம்மாவிடம் சிந்தி மொழி கற்று வருகிறார். அதோடு சிந்தி வகை சமையலையும் சேர்த்தே கற்றுக் கொள்கிறாராம். தாய்மொழியான சிந்தியை தமன்னா இப்போதுதான் கற்றுக் கொள்கிறார் என்றாலும், அவர் தமிழ், தெலுங்கு ஆகியவற்றை நன்றாகவே பேசுவார்.

தீபிகாவிற்கே சவால் விடும் சாயிஷா

May 17, 2020
ஹிந்தியில் தீபிகா படுகோனே நடித்த பாஜிராவ் மஸ்தானி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு தீபிகாவை போன்றே பிரமாதமாய் நடனமாடி உள்ளார். நடனத்தின் போது அவரின் ஒவ்வொரு நடன அசைவுகளும், முகபாவைனைகளும் தீபிகாவுக்கே டப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

மீண்டும் சூர்யா – கேவி ஆனந்த் கூட்டணி

May 17, 2020
அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான், காப்பான் ஆகிய 3 படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. தற்போது இந்த கூட்டணி 4வது முறையாக இணைய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.

குழந்தையுடன் சங்கவி

May 17, 2020
கடந்த 2016ம் ஆண்டு மென்பொறியாளர் வெங்கடேஷ் என்பவரை நடிகை சங்கவி திருமணம் செய்து கொண்டார். 42 வயதாகும் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அன்னையர் தினத்தையொட்டி குழந்தையுடன், தான் இருக்கும் புகைப்படத்தை சங்கவி வெளியிட்டுள்ளார்.

தலைவியில் இணைந்த மற்றுமொரு நடிகை

May 17, 2020
விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டு உள்ளது. இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் நடிக்கிறார் கங்கனா. இந்நிலையில் இப்படத்தில் மற்றுமொரு ஹிந்தி நடிகையான பாக்யஸ்ரீ என்பவரும் இணைந்துள்ளார். இந்த தகவலை கங்கனா தெரிவித்துள்ளார்.

சாக்ஷியின் டாட்டூவிற்கு என்ன அர்த்தம்

May 17, 2020
பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி வலது கை மணிக்கட்டுப் பகுதியில் ஒரு டாட்டூ குத்தியிருக்கிறார். அதை அவருடைய பல புகைப்படங்களில் பார்த்திருக்கலாம். அவருடைய இடதுகால் தொடைப் பகுதியில் குத்தியுள்ள டாட்டூவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பிரெஞ்சு மொழியில் ‘லா வீ எஸ்ட் பெல்லே’ என அந்த டாட்டூவில் இடம் பெற்றுள்ளது. அப்படியென்றால் ஆங்கிலத்தில் ‘லவ் இஸ் பியூட்டிபுல்’ என்று அர்த்தம்.

கொரோனா தாக்கத்தால் 60 வயது நடிகர்கள் வெளிவர தயக்கம்

May 17, 2020
ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என முக்கியத் திரையுலகங்களில் 60 வயதைக் கடந்தவர்கள் தான் அதிகப் படங்களில் நடித்து வருகிறார்கள். எனவே, படப்பிடிப்பு நடத்த அந்தந்த அரசுகள் அனுமதி கொடுத்தாலும் 60 வயதிற்கு மேற்பட்ட நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்புக்கு வருவார்களா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.

ஓடிடியில் வெளியாகும் நிசப்தம்

May 17, 2020
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 7 படங்கள், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நேற்று அனுஷ்கா, அஞ்சலி, மாதவன் மற்றும் பலர் நடித்துள்ள ‘நிசப்தம்’ படம் கூடி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் பரவியது.

ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிய சமந்தா

May 17, 2020
வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை கொரானோ ஊரடங்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் தாங்கள் பிரபலமாகுவதற்கு முன்பிருந்த வாழ்க்கையை தற்போது வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகை சமந்தா அவரது கணவர் நாகசைதன்யாவுடன் பைக்கில் வெளியில் சென்றதை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கிறார்.

ஹாலிவுட் இயக்குநரின் புதிய படத்தில் நித்யா மேனன்

May 16, 2020
ஹாலிவுட்டின் இளம் இயக்குநர் தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியல் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தில் நித்யா மேனனை கதநாயாகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள். பெண்களை மையமாக எடுக்கப்பட உள்ள இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சியில் வள்ளலாக மாறிய இலங்கை நடிகை

May 16, 2020
இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி தனது கவர்ச்சிப் புகைப்படங்களால் பிரபலமாகி வருகிறார். இவர், மாடலிங் துறையில் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். இவர் இந்தியப் படங்களில் அதிகம் நடித்திராத போதிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பியூமி ஹன்சமாலி பதிவிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்காகவே காத்திருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள். தேசிய அளவில் விருதுகளை வென்றுள்ள இவர் கவர்ச்சி காட்டுவதில் வள்ளல் என்கின்றனர்.

பிளாஸ்டிக் கவருக்குள் அகப்பட்ட பிந்து மாதவி

May 16, 2020
நடிகை பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பிளாஸ்டிக் கவருக்குள் அடைப்பட்டு கிடப்பது போல உள்ள அந்த புகைப்படங்களை வெளியிட்டு, லாக்டவுன் நேரத்தில், ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முயற்சி எடுப்போம் என்று குறிப்பிட்டு ப்ளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜோதிகாவைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்! ஓடிடிக்கு பெருகும் ஆதரவு

May 16, 2020
தமிழில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பெங்குவின் படத்தை நேரடியாக வரும் ஜூன் மாதம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இதை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் கதையா.. இது

May 16, 2020
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற பேச்சும் உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் படம் நிஜத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தேவையில்லாமல் கற்பனை செய்ய வேண்டாம் – லாஸ்லியா

May 16, 2020
பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா சில தினங்களுக்கு முன், கண்ணாடி முன் நின்ற படத்தை, டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள். கண்ணாடி முன் நின்று உங்கள் தவறை கண்டுபிடித்து திருத்திக் கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தார். இது கவினுக்கான பதிலா? என, பலரும் கேள்வி எழுப்பினர். தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நான் போடும் பதிவுகள், என்னை பற்றியது மட்டுமே. தேவையில்லாமல் வேறு எதையும் கற்பனை செய்ய வேண்டாம் என, லாஸ்லியா […]

அழகை ஆராயும் நேரமிது – கஸ்தூரி

May 16, 2020
ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும், கொரோனா எப்போது நம்மை விட்டு செல்லும் என, அனைவரும் எதிர்பார்த்துள்ள வேளையில், பொது விஷயங்களில் கருத்து கண்ணாயிரமாக செயல்படும் நடிகை கஸ்துாரி, தன், ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், இந்த ஊரடங்கில் ஒரு நல்ல விஷயம் வெளிவந்துள்ளது. நம் அழகை ஆராயும் நேரமிது’ எனக் கூறியுள்ளார்.

இலங்கை காமசூத்ராவாக மாடல் அழகி

May 16, 2020
இலங்கை நடிகையும், மாடல் அழகியுமான, பியூமி ஹன்சமாலி, ஆசிய அழகிப்போட்டி உட்பட பல பட்டங்களை வென்றவர். தற்போது, சமூக வலைதளங்களில் கவர்ச்சிப் படங்களை, வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், ‘இலங்கை காமசூத்ரா’ என்ற தலைப்பில், இவர் பதிவிட்ட படம், கோலிவுட்டின் புருவத்தை உயர்த்தியுள்ளது. ‘காமசூத்ரா பதிவுக்கு ஊக்கமாக இருந்தவர்கள், நடிகை ஷெர்லின் சோப்ரா மற்றும் காமசூத்ரா 3டி பட இயக்குனர் ரூபேஷ் பவுல்’ எனக், குறிப்பிட்டு உள்ளார்.

யாமிருக்க பயமே 2 உருவாக்கத்தில் மும்மரம்

May 16, 2020
கிருஷ்ணா, கருணாகரன், ரூபாமஞ்சரி, ஓவியா நடிப்பில் ஆறாண்டுகளுக்கு முன் வெளியாகி, வெற்றி பெற்ற படம், யாமிருக்க பயமே. பெரிய நடிகர்கள் இல்லையென்றாலும், கதை இருந்தால் போதும் என்பதை காட்டிய படங்களில், இப்படமும் ஒன்று. படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறுகையில், படத்தின் வெற்றி, ரசிகர்களின் விமர்சனத்தில் தான் இருக்கிறது என்பதை நிரூபித்த படம், யாமிருக்க பயமே. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் இறங்கியுள்ளோம், என்றார்.

சிம்புவின் மனைவிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி

May 16, 2020
சமூக வலைதளங்களில் சிம்பு பிரியாணி சமைக்கும் வீடியோவில் போது மனைவி குறித்து பேசியிருப்பார். இதனை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் சிம்புவைப் பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக நடிகை பிந்து மாதவி வெளியிட்டுள்ள பதிவில், “நல்ல எண்ணம் சிம்பு. உங்கள் மனைவியைப் பார்க்க நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் சரியான கொள்கை – பிந்து மாதவி

May 15, 2020
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரும் நடிகையுமான பிந்துமாதவி தனது சமூக வலைத்தளத்தில் சிம்பு பிரியாணி சமைக்கும் வீடியோவை பதிவு செய்து சிம்புவின் சரியான கொள்கை இதுதான் என்றும் நாங்கள் எல்லோரும் சிம்புவின் மனைவியை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம் என்றும் பதிவு செய்துள்ளார்.

ஜிவி பிரகாஜின் குழந்தை பெயர் என்ன ?

May 15, 2020
ஜிவி பிரகாஷ் – சைந்தவி திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் 19ஆம் தேதி ஜிவி பிரகாஷ்-சைந்தவி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். கோலிவுட் திரையுலகம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூக வலைப்பக்கத்தில் ஜிவி பிரகாஷின் குழந்தை பெயர் அன்வி என்று குறிப்பிட்டு ரகசியத்தை உடைத்துள்ளார்.

பாடல் மூலம் ரூ.30 லட்சம் கொரோனா நிதியுதவி – சின்மயி

May 15, 2020
பாடகி சின்மயி இணையதளம் மூலமாக ரசிகர்களுக்கு பிடித்த பாடல்களை பாடி நிதி திரட்டி வந்தார். இதுவரை 1700 பாடல்களை பாடி அதன் மூலம் 30 லட்சம் நிதி திரட்டி உள்ளார். அதனை 1100 குடும்பங்களுக்கு வழங்கி உள்ளார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிகிறது.

வலிமை படத்திற்கு முட்டுக்கட்டை போட்ட அஜித்

May 15, 2020
வலிமைப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை கொரோனா அச்சம் முடிந்த பின்னரே தொடங்க வேண்டும் என அஜித் தயாரிப்பாளருக்கு மெயில் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொன்மகள் வந்தால் ரிலீஸ் தேதி அறிவிப்பு

May 15, 2020
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியது. அதன்படி வருகிற மே 29ம் தேதி ஓடிடி தளங்களில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், டுவிட்டர் என்றாலே பயம் – அனுபமா பரமேஸ்வரன்

May 15, 2020
பிரேமம், கொடி ஆகிய படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், மலையாள படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ‘பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது.’நம்முடைய நல்ல புகைப்படத்தை கூட மாற்றி, ஆபாசமாக பதிவிட்டு விடுகின்றனர். இந்த விஷயத்தில் நான் ரொம்பவே பாதிக்கப்பட்டேன்’ என, கவலைப்படுகிறாராம் அனுபமா.

கவிதைகளின் நாயகியான ரெபா மோனிகா

May 15, 2020
ஜருகண்டி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகையான ரெபா மோனிகா ஜானுக்கு, ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது என்றால் ரொம்பவே இஷ்டமாம். இதனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கவிதைகளை எழுதி தள்ளுகிறார். தொடர்ச்சியான படப்பிடிப்புகளால் கவிதை எழுத முடியாமல் தவித்த அவருக்கு, கொரோனா ஊரடங்கு, பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த, 40 நாட்களில், ஏராளமான கவிதைகளை எழுதி தள்ளி விட்டாராம்.’ரெபா, விரைவில் கவிதை புத்தகம் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’ என்கிறது, மலையாள திரையுலகம்.

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான த்ரிஷா

May 15, 2020
திரை நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் ஊரடங்கு காலத்தில் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாட்டு பாடுவது, நடனமாடுவது என விதம் விதமாக பொழுதை கழித்து வருகின்றனர். த்ரிஷா, கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்தது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த குறும்படத்துக்கு கிடைத்த ஆதரவை பார்த்து, மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்துள்ளார், த்ரிஷா. ‘இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என, நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆதரவுக்கு நன்றி’ என, உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

மன அமைதியை சிறந்தது – அம்ரிதா

May 15, 2020
பிகில் படம் மூலம் பிரபலமானவர் நடிகை அம்ரிதா. தற்போது கவினுடன், ‘லிப்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகையாக மட்டுமின்றி, ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளார். சமீபத்தில் 26வது பிறந்த நாளை கொண்டாடிய இவர், ”நீங்கள் வலிமையாக இருக்கும் போது, உங்கள் மன அமைதியை, எதுவும் தொந்தரவு செய்ய முடியாது. சிறந்ததை மட்டுமே சிந்தித்து, சிறந்தவைக்காக மட்டுமே பணியாற்றுங்கள். சிறந்ததை மட்டுமே எதிர்பாருங்கள்,” என்றார்.

ஆதரவு தெரிவிக்கும் எமி

May 15, 2020
நடிகை எமி ஜாக்சன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கொரோனா காலத்தில், முன்வந்து நிற்கும் சுகாதார பணியாளர்களுக்கு, அனைத்து விதமான ஆதரவும் கிடைக்க வேண்டும். தொடர்ந்து நாம் பாதுகாப்பாக இருப்பதன் மூலம், சுகாதார பணியாளர்களுக்கு நம் ஆதரவை தெரிவிக்க முடியும்’ என, கூறியுள்ளார். அம்மாவாகி விட்ட எமி, தன் பணிகளை செவ்வனே நிறைவேற்றுவதை, தம் ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

பொங்கலுக்கு நாங்கள் வருவோம்

May 14, 2020
ஊரடங்கு முடிந்ததும், முன் போல், சினிமா தியேட்டர்கள் எப்படி இயங்கப் போகிறது என்பது, பலரது கேள்வியாக உள்ளது. ஊரடங்குக்கு சில நாட்களுக்கு முன் வெளியான படங்களுக்கு, முன்னுரிமை தர வேண்டிய நிலையில், ஏப்ரல் முதல், வெளியாக வேண்டிய படங்களுக்கு, அடுத்து முன்னுரிமை தர வேண்டும். இந்நிலையில், ‘பொங்கலுக்கு நாங்கள் வருவோம்’ என, சிறுத்தை சிவா இயக்க, ரஜினி, மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு நடித்த அண்ணாத்த படத்தின் தயாரிப்பாளர்கள் முந்தி வந்து அறிவித்து உள்ளனர்.

ஏமாற்றமே மிஞ்சியது – ஓவியா

May 14, 2020
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பின், சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவோம் என, எண்ணியிருந்த நடிகை ஓவியாவுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. முதலில் நட்புக்காக ஒப்புக் கொண்டு நடித்த படங்களும், கதை நாயகியாக நடித்த படங்களும், தோல்வியில் முடிய, தற்போது, படுகவர்ச்சியான படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

ரோஜாக்களைப் போல் எழுந்திருப்போம் – விவேக்

May 14, 2020
சில நாட்கள் இடைவெளிக்கு பின், மீண்டும், ‘டுவிட்டர்’ பக்கம் வந்த நடிகர் விவேக், ‘சுகாதார அறிவுறுத்தலை கடைப்பிடிப்பதும் ஒரு சிகிச்சையே’ எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இடிபாடுகளுக்கு இடையில் பூச்செடி வளர்வது போல் நாமும் மீண்டு வருவோம். குப்பைக்கு மத்தியில், ரோஜாக்களை போல் எழுந்திருப்போம். நம்பிக்கையே எங்கள் உரம். சுகாதார அறிவுறுத்தலை கடைப்பிடிப்பதும் ஒரு சிகிச்சையே’ என்றார்.

மொபைலே உலகமாகிறது – பார்வதி நாயர்

May 14, 2020
ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள நடிகையர், சமையல், உடற்பயிற்சி, மேக் அப், தியானம் என, பொழுதுபோக்கி வருகின்றனர். நடிகை பார்வதி நாயர், தன் மொபைலிலேயே போட்டோ ஷூட் எடுத்து, டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘உலகம் முழுதும் இயக்கம் இல்லாத போது, மொபைல் உலகமாகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர்கள் கோபத்திற்கு ஆளான யாஷிகா ஆனந்த்

May 14, 2020
ஒட்டுமொத்த சினிமாவே, ‘டிஜிட்டல்’ வழி ஒளிபரப்புக்கு எதிராக திரள, நடிகை யாஷிகா ஆனந்த், டிஜிட்டல் சினிமாவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாக, சமீபத்தில், டுவிட்டரில், ‘லெட்ஸ் ஓடிடி’ என்ற பெயரில், போட்டி வைத்தார். இதில் வெற்றி பெறுவோருக்கு, ‘நெட்பிளிக்ஸ், ஜீ5, ஆஹா’ போன்ற டிஜிட்டல் ஒளிபரப்புக்கான ஓராண்டு சந்தாவை, இலவசமாக வழங்கியுள்ளார். தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருந்தால் சரி என்கின்றனர்.

குஷ்பு ஒரு ஜோக்கர் – காயத்ரி ரகுராம்

May 14, 2020
பிரதமர் மோடி குறித்து குஷ்பு கிண்டலாக ஒரு கருத்தை பதிவிட்டார். இவரது கருத்துகளுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் பாஜகவில் அங்கம் வகிக்கும் நடிகை காயத்ரி ரகுராம் உடனடியாக குஷ்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. “குஷ்பு ஒரு ஜோக்கர்.. பிரதமர் ஏன் தமிழில் பேசவில்லை என கேட்கிறார்.. பிரதமர் பேசியது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல.. மொத்த இந்தியாவுக்கும் சேர்த்து தான்..” என கூறியுள்ளார்.

இரண்டு பாகமாக தயாராகும் இந்தியன் 2 ?

May 14, 2020
ஊரடங்கிற்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்னர் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து இந்தியன் 2 படத்தின் படத்தொகுப்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளின் நீளம் அதிகமாக இருப்பதாகவும், சுமார் 5 மணி நேரம் ஓடும் அளவிற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்தியன் 2 படத்தை இரண்டு பாகமாக ரிலீஸ் செய்ய படக்குழு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நம்பிக்கை இழக்க வேண்டும் – ஆண்ட்ரியா

May 14, 2020
கொரோனா பரவலை தடுக்க போலீசாரும் தங்கள் உயிரை பொருட்படுத்தாது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது 70க்கும் மேற்பட்ட போலீசார் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகை ஆண்ட்ரியா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். நாட்டுக்காகவும், எங்களுக்காகவும் கடினமாக உழைக்கும் உங்கள் (போலீஸ்) அனைவருக்கும் நன்றி. வைரஸை எதிர்த்து போராடுகிறீர்கள். நம்பிக்கை இழக்காதீர்கள், எல்லாம் சரியாகி நல்லப்படியாக மீண்டு வருவோம் என நம்புவோம். நீங்கள் தான் ரியல் ஹீரோ என தெரிவித்துள்ளார்.

பயத்தில் தற்கொலை செய்யும் கொடூரம் – ஸ்ருதி

May 14, 2020
கொரோனா ஊரடங்கில் நடிகை ஸ்ருதிஹாசன் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் பல கேள்விக்கு பதிலளித்தார். அதில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டுவதாக செய்திகள் படித்தேன். இது வருத்தம் அளிக்கிறது. சிலர் பயத்தில் தற்கொலை செய்யும் கொடூரமும் நடக்கிறது. இதை உடனே தடுக்க வேண்டும். நோய் பாதித்தவர்களிடம் பரிவு காட்ட வேண்டிய நேரம் இது என்றார்.

ரைசாவின் கொரோனா பீதி

May 14, 2020
கொரோனா தொடர்பான செய்திகளையே பார்த்துப் பார்த்து மக்கள் பீதியாகி உள்ளனர். மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் நடிகை ரைசா சமூகவலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உச்சஞ்தலை முதல் உள்ளங்கால் வரை முழுவதும் மறைத்தபடி உள்ளார். “தொடர்ந்து 2 மணி நேரம் செய்தி பார்த்தால் இப்படித்தான்” என அந்தப் பதிவில் ரைசா தெரிவித்துள்ளார்.

யாரும் அத்துமீற வேண்டாம் – பெப்சி

May 13, 2020
ஊரடங்கு தளர்வை முன்னிட்டு படத்திற்கான பிந்தைய பணிகளை ஆரம்பிக்கலாம் என அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, கமலின், இந்தியன் – 2, விஜய்யின், மாஸ்டர், நடிகரும், தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீரின் முதல் படமான, குற்றாலம், நயன்தாராவின், மூக்குத்தி அம்மன், சிவகார்த்திகேயனின், டாக்டர் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட படங்களின், ‘டப்பிங்’ மற்றும் எடிட்டிங் பணிகள் துவங்கி உள்ளன. அரசின் விதிமுறைகளை பின்பற்றி, உரிய சமூக இடைவெளியோடு நடைபெறும் இப்பணிகளில், யாரும் அத்துமீற வேண்டாம்’ என, ‘பெப்சி’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மீண்டும் தமிழில் வலம் வருவோம் – சுமன் ரங்கநாதன்

May 13, 2020
லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம், கபடதாரி. நாசர், ஜெயபிரகாஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்க, கன்னட நடிகை சுமன் ரங்கநாதன், முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.’சஸ்பென்ஸ் த்ரில்லர்’ வகையில் படம் உருவாகிறது. படத்தை, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். அஜித்தின், ஆரம்பம் படம் மூலம் தமிழுக்கு வந்த, சுமன் ரங்கநாதன், நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் தமிழில் ஒரு வலம் வருவோம் என்ற நம்பிக்கையில் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா சண்டைக் காட்சியை பதிவிட்ட அதா சர்மா

May 13, 2020
சமீபத்தில் தனது 28வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை அதா சர்மா, தன் அதிகாரபூர்வ யு டியூப் சேனலில் கொரோனா சண்டைக்காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். ரசிகர்களுக்காக வேடிக்கையான வீடியோக்களை பதிவிட்டு வரும் அதா சர்மா, தன்னை பின்தொடர வேண்டும் என, ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மீண்டும் திரைத்துறைக்கு வரத்துடிக்கும் கிரண்

May 13, 2020
முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை கிரண். திரைத்துறையை விட்டு விலகி, தற்போது மீண்டும் வரத்துடிக்கும் அவர், டுவிட்டரில் கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கடற்கரையோரம் உள்ள விடுதி அறையில் இருந்து, நீச்சல் உடையில் உள்ள படத்தை டுவிட்டரில் பகிர்ந்துஉள்ளார். ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்பதையும் சுட்டிக்காட்டி தொடர்ந்து கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

அனுமதியின்றி பெயரை உபயோகப்படுத்தியது தவறு – பாரதிராஜா

May 13, 2020
கொரோனாவிற்கு பிறகு இந்த வாரம் முதல் திரைத்துறை செயல்படத் துவங்கியுள்ளது. இதுகுறித்து பேச 42 பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தனர். அதில் பாரதிராஜா, தாணு உள்ளிட்டோர் இருந்தனர். தன்னிடம் அனுமதி கேட்காமல் தன் பெயரை சேர்த்தது சரியல்ல என பாரதிராஜா கூறியுள்ளார்.

தவறை ஒத்துக் கொள்ளுங்கள் – லாஸ்லியா

May 13, 2020
பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கண்ணாடி முன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “வாழ்க்கை நமக்கும் பாடம் கற்பிக்க முயற்சிக்கிறது. எனவே உங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு கண்ணாடி முன்பு நின்று பாருங்கள்”, என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன் கவினை தான் லாஸ்லியா மறைமுகமாக சொல்கிறார் என கமெண்ட் செய்துள்ளனர்.

சாகசப் பயணத்திற்கு தயாரான சமந்தா

May 13, 2020
ஊரடங்கு காரணமாக நடிகை சமந்தா, அவரது கணவர் நாகசைதன்யாவுடன் ஐதராபாத் வீட்டில் இருக்கிறார். அவர்களுடன் நாய்க்குட்டி ஒன்றும் இருக்கிறது. தற்போது சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கணவர் நாகசைதன்யா மற்றும் செல்ல நாயுடன் காரில் அமர்ந்திருக்கிறார். “ஒரு பிரமாண்ட சாகசப் பயணம் போகப் போகிறோம்”, என அந்த புகைப்படத்துக்கு கீழே அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

சம்மதம் சொல்லி விட்டாள் – ராணா

May 13, 2020
பாகுபலி புகழ் ராணா டகுபட்டி தன்னுடைய காதலியை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து ”அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்,” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அனுமோல்

May 13, 2020
மலையாள குணச்சித்திர நடிகை அனுமோல் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் ரசிகர்களுடன் லைவ் சாட்டிங்கில் உரையாடி வருகிறார். பேஸ்புக்கில் இவரை பின்தொடரும் சில நபர்கள், முகம் சுழிக்க வைக்கும் வகையிலான புகைப்படங்களை அவருக்கு அனுப்பி தொந்தரவு கொடுத்துள்ளனர். “இவர்களை பிளாக் செய்தே நான் களைப்படைந்து விட்டேன்.. இனியும் தொடர்ந்தால் சைபர் கிரைம் போலீஸிடம் புகார் செய்வதை தவிர வேறு வழியில்லை” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது என்ன நாள்..? குழப்பத்தில் த்ரிஷா

May 13, 2020
கொரோனா ஊரடங்கு ஆரம்பித்து 50 நாட்கள் கடந்துவிட்டது. வெளியே தலைக்காட்டாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் பலருக்கு இது என்ன கிழமை என்பதே தெரிவதில்லை. நடிகை திரிஷாவுக்கும் அந்த குழப்பம் வந்துவிட்டது. “இது என்ன நாள்?”, என ரசிகர்களிடம் கேட்டு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த நடிகை ஹன்சிகா, “ரொம்ப அழகு தான்”, என பதில் அளித்துள்ளார்.

கோலிவுட்டை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை – பிரபல இயக்குநர்

May 12, 2020
பொன்மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து சந்தானம், வைபவி சாண்டில்யா நடித்த சர்வர் சுந்தரம் படமும், இணையதளத்தில் நேரடியாக வெளியிட, பேச்சு நடந்தது. ஆனால், எதிர்பார்த்த தொகை கிடைக்காததால், அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது குறித்து, இயக்குனர் ஆனந்த் பால்கி, டுவிட்டரில் கூறுகையில், ”தமிழ் படங்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படுகிறதா என தெரியவில்லை. கோலிவுட் என்றால் என்னவென்று இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்

May 12, 2020
தமிழில், அகம் புறம் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடியவர் காஷ்மிரா ஷா. பாலிவுட், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், ‘நடிப்பதற்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்’ என, பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ”நடிப்பதற்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தனர். ஆனால், நான் உடன்படவில்லை. என் குழந்தைகள் வளர்ந்து, அம்மா நல்லவர் என, பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.

மனைவியுடன் சேர்ந்து யூடியுப் சேனல் ஆரம்பிக்கும் சாந்தனு

May 12, 2020
நடிகர் – நடிகையர் பலரும் ‘யு டியூப்’ சேனல் துவக்குவதில் ஆர்வம் காட்டு கின்றனர். நடிகரும் , பாக்யராஜ் மகனுமான சாந்தனு தன் மனைவி கீர்த்தி உடன் இணைந்து யு -டியூப் சேனல் துவக்கியுள்ளார். ‘வித் லவ் சாந்தனுகி’ என்ற சேனல் மூலம், புதுமையான தகவல்களை தரப்போவதாக தெரிவித்திருந்தார்.

கோடிகளால் தயாரிப்பாளரை ஓட வைத்த ஜோதிகா

May 12, 2020
நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்த வேண்டிய நடிகை, தயாரிப்பு குழுவையே பயந்து ஓட வைத்துள்ள சம்பவம் நடிகை ஜோதிகா விஷயத்தில் நடந்துள்ளது. ரஜினி, ஜோதிகா, பிரபு நடித்த, சந்திரமுகி படத்தை, வாசு இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வாசு இயக்க, ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இதில், ஜோதிகாவை நடிக்க வைக்க, படக்குழு முயற்சித்தது. ஆனால், ஜோதிகா கோடிகளில் சம்பளம் கேட்க படக்குழு வியர்த்து வெளியேறியது. தற்போது, வேறு ஒருவரை நடிக்க வைக்க ஆலோசித்து வருகிறது.

நடிகை சஞ்சனாவை எச்சரித்த நெட்டிசன்கள்

May 12, 2020
ஊரடங்கால் பல நடிகையர்கள் தங்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகின்றனர். நடிகை சஞ்சனா சிங், கழுத்தில் 20 லிட்டர் தண்ணீர் கேனை சுமந்தபடி, உடற்பயிற்சி செய்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்தார். இதுபோன்ற விபரீதமான உடற்பயிற்சிகளால், விபத்தை சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளதை உணர வேண்டும்’ என வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘இப்படி பண்றீங்களேம்மா…’ என, கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷை புகழ்ந்த படக்குழுவினர்

May 12, 2020
நயன்தாராவுக்கு ஒரு, அறம் படம் போல், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, க/பெ.ரணசிங்கம் படம் அமையும் என, படக்குழுவினர் புகழாரம் சூட்டியுள்ளனர். படத்திற்கு பின்னணி இசையமைக்கும் பணியை துவக்கியுள்ள இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறுகையில், ”தமிழ் சினிமாவில், இப்படம் முக்கியமான ஒன்றாக அமையும். இப்படத்திற்கு இசையமைப்பது பெருமையாக உள்ளது,” எனக் கூறியுள்ளார்.

சிப்பாய் போல் கடைபிடிக்க வேண்டும் – பார்த்திபன்

May 11, 2020
சென்னையில் அடுத்த, ஆறு நாட்களுக்கு கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்கும். கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில், மக்கள் சிப்பாய்கள் போல் செயல்பட வேண்டும்’ என, கொரோனாவுக்கான சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இதை மேற்கோள்காட்டிய நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், ”சிப்பாய் போல, ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் பேச்சை கடைப்பிடிக்க வேண்டும்; சீப்பாய் அல்ல,’ எனக்கூறியுள்ளார்.

ஒவ்வொருவரையும் நேசிக்கின்றேன் – ஐஸ்வர்யா மேனன்

May 11, 2020
ஒவ்வொருவரையும் நேசிக்கிறேன்நான் சிரித்தால் படத்தின் நாயகி ஐஸ்வர்யா மேனன், கடந்த, 8ல், தன், 25வது பிறந்த நாளை கொண்டாடினார். தனக்காக வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவரையும் நேசிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து, டுவிட்டரில் அவர் கூறுகையில், ‘ரசிகர்கள் காட்டிய அன்புக்கு மிகவும் நன்றி. என் பிறந்த நாளில், போஸ்டர்களையும் வீடியோக்களையும் உருவாக்க முயற்சித்த ஒவ்வொரு நபரையும், நான் மிகவும் நேசிக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

நீங்கள் வாகா எல்லைக்கே போகலாம் – அதிதி

May 11, 2020
ஊரடங்கு நேரத்தில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வரும் அதிதி ராவ், சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். காலை தலைக்கு மேலே உயர்த்தி, அவர் செய்த பயிற்சியை பார்த்த சிலர், ‘நீங்கள் வாகா எல்லைக்கே போகலாம்…’ என, ‘கமென்ட்’ அடித்துள்ளனர்.

காவலர்களின் பணி கடவுளுக்கு சமமானவை – வரலட்சுமி

May 11, 2020
ஊரடங்கு காலத்தில் இரவும் பகலுமாக எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரும் பார்க்கவில்லை என நினைக்காதீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய உயிரையும் பாதுகாக்காமல் எங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. உங்களுடைய சேவை கடவுளுக்குச் சமமானது என நடிகை வரலட்சுமி பாராட்டினார்.

காஷ்ட்யூம் டிசைனரான அம்ரிதா

May 10, 2020
நடிகை அம்ரிதாவின் புதிய அவதாரம் காஸ்ட்டியூம் டிசைனராகவும் மாறி இருக்கிறார். லிப்ட் படத்தில் அவருக்கான உடையை அவரே தேர்வு செய்திருக்கிறார். லிப்டில் மாட்டிக்கொள்ளும் ஒரு இளம் ஜோடியின் கதை தான் லிப்ட். படம் முழுக்க அம்ரிதாவுக்கு ஒரே உடைதான். அந்த உடையை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று தயாரிப்பு தரப்பு கூற நேராக கடைக்கு சென்றவர் ஒரு நாள் முழுக்க கடையில் செலவிட்டு தனக்கான உடையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

கத்திரி வெயிலை சமாளிக்க கனவு காணும் ரம்யா

May 10, 2020
சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா, தண்ணீரில் படுத்தபடி முகத்தில் மட்டும் தண்ணீர் படாமல் ஒரு போட்டோவை சமூக வலைளத்தில் பதிவிட்டு, ”கத்தரி வெயிலில் இருந்து எப்படி தப்பிப்பது என கனவு காண்கிறேன்” என பதிவிட்டுள்ளார் ரம்யா. இதை பார்த்த ரசிகர்கள் குளிக்கும்போது கூட இவ்வளவு மேக்-அப் தேவையா ரம்யா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

எல்லைக்கு செல்ல தகுதியானவர் அதிதி ராவ்

May 10, 2020
நடிகை அதிதி ராவ் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தபடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், தனது போட்டோக்களை சமூகவலை தளங்களில் வெளிட்டு வருகிறார். நேற்று களரி பயிற்சி மேற்கொள்ளும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் கைகளை தூக்கி கொண்டு நடந்த படி கால்களை மேலே தூக்கி கைகளில் படும் படி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் வாகா எல்லையில் பரேடு செல்ல முழு தகுதியும் உள்ளது என பதிவிட்டார்.

லூஸ் டாக் விடாதே ரைசா! ஹரீஸ் அறிவுரை

May 10, 2020
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரைசாவும், ஹரிஷ் கல்யாணும் நண்பர்கள் ஆனார்கள். சமீபத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ஹரிஷை திருமணம் செய்துகொள்ளப் போவதாக ரைசா விளையாட்டாக பதில் அளித்தார். ஆனால் அது பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரைசாவை செல்போனில் தொடர்புகொண்டு, இப்படியெல்லாம் லூஸ்டாக் விடாதே என ஹரிஷ் அறிவுரை வழங்கியதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஓவியாவா இது?

May 10, 2020
சரியான படங்களைத் தேர்வு செய்யாமல் தடுமாறி வரும் ஓவியாவின் சில கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வந்துள்ளன. அவர் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராமில் அப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அது அதிகாரப்பூர்வ கணக்கா என்று தெரியவில்லை. இருந்தாலும் அப்படத்தைப் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

எனக்கு சம்பளம் வேண்டாம் – நடிகர் அருள்தாஸ்

May 9, 2020
கொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா உலகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் அதிக சிரமத்தில் இருப்பதால் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்கள். தற்போது நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் 2020 ஆண்டில் என்னுடைய நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

திடீரென பாடகி அவதாரம் எடுத்த நடிகை ஜனனி

May 9, 2020
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நடிகை ஜனனி திடீரென பாடகி அவதாரம் எடுத்துள்ளார். “உன் நெருக்கம்…” என்று தொடங்கும் காதல் பாடல் ஒன்றை பாடி அதற்கு ஏற்றார்போல முகபாவம் காட்டி அதனை படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசை அமைத்துள்ளார்.

பேண்டஸி பேய் படத்தில் ராய் லட்சுமி

May 9, 2020
எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கும் சிண்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமி தான் ஆல் இன் ஆல். இது அவரை சுற்றி நடக்கும் பேண்டஸி பேய் படம். இதில் ராய் லட்சுமி அழகான சிண்ட்ரெல்லா அழகி, இசைக்குழு நடத்தும் பாடகி, வேலைக்கார பெண் துளசி என 3 கேரக்டர்களில் நடிக்கிறார். ராய் லட்சுமி ஜோடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெளிநாட்டு நடிகர் நடிக்கிறார்.

முன்பை விட இது எவ்வளவோ மேல்! மாளவிகா மோகனன்

May 9, 2020
சமீபத்தில் மாஸ்டர் படத்தின் விளம்பரம் தொடர்பான கார்ட்டூனில், கதாநாயகி மாளவிகா சமைப்பது போல் படம் ஒன்று இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படிப்பது போல் மாற்றப்பட்டு வன விலங்கை ரசிப்பது போல் மாற்றப்பட்டது. இதுகுறித்து, மாளவிகா மோகனன் கூறுகையில், ”முன்பை விட, இது எவ்வளவோ மேல். வன விலங்குகளை நான் மிகவும் நேசிக்கிறேன்,” என்றார்.

மதுரை திரும்பிய விவசாயிக்கு நடிகர் சசிக்குமார் உதவி

May 9, 2020
துபாய் வேலையை வேண்டாம் என உதறிவிட்டு மதுரைக்கு திரும்பிய விவசாயி கோபால கிருஷ்ணன், மீனாட்சிபுரத்தில் 3.5 ஏக்கரில் வாழைத் தோட்டம் போட்டுள்ளார். வாழைத்தார் வெட்டும் பருவம் வந்த போது, வெட்ட வழியின்றி தவித்துள்ளார். உதவிக்கரம் கேட்ட அவருக்கு, நடிகர் சசிகுமார் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவிஉள்ளார். பணத்தை கடனாக பெற்ற விவசாயி, அடுத்த அறுவடையில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவேன் என உறுதி அளித்துள்ளார்.

இந்தியன் 2 படம் வெளியாகுவது உறுதி

May 8, 2020
நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு, பிப்ரவரியில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில், மூவர் உயிரிழந்தனர். கமல், காஜல் அகர்வால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். ஊரடங்கால் அனைத்தும் முடங்கிய நிலையில், இந்தியன் 2 படம் கைவிடப்பட்டு விட்டது என தகவல் வெளியானது. இதுகுறித்து, பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா கூறுகையில், ‘படம் கைவிடப்படவில்லை. இதுவரை, 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்’ என்கிறது.

கவர்ச்சியில் சபதம் எடுக்கும் மீரா மிதுன்

May 8, 2020
‘பிக்பாஸ்’ புகழ் நடிகையும், மாடல் அழகியுமான மீராமிதுன், திடீரென ஒரு சபதம் எடுத்துள்ளார். தற்போது மும்பையில் வசிக்கும் இவர், கவர்ச்சியான பின்புறம் மற்றும் முகத்தை கொண்டு வரப்போவதாக கூறி, டுவிட்டரில் ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள், அவரை கண்டபடி வறுத்தெடுத்து வருகின்றனர்.

வைரமுத்து எழுதிய பாடலை பாடிய ரம்யா நம்பீசன்

May 8, 2020
ஆதிராஜன் எழுதி இயக்கியுள்ள படம் அருவா சண்ட. காதல், கபடி, கவுரவ கொலை இவற்றை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ராஜா, மாளவிகா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். தரண் இசையமைத்துள்ளார். இப்படத்தில், வைரமுத்து எழுதியுள்ள, ‘சிட்டு சிட்டு குருவி, வாலாட்டுதே…’ என்ற பாடலை, நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். இப்பாடல், ‘யூ டியூப்’ தளத்தில், நேற்று வெளியானது. இயக்குனர் கூறுகையில், ”50 நாட்களாக முடங்கியுள்ள திரையுலகத்தின் முடக்கத்தையும், தயக்கம் மற்றும் கொரோனா அச்சத்தையும் உடைக்கும் முதல் நிகழ்ச்சியாக, […]

கதை நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

May 8, 2020
சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திட்டம் இரண்டு படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கதை நாயகியாக இது மூன்றாவது படம். இயக்குனர், யுவர்ஸ் சேம் புல்லி என்ற குறும்படம் மூலம் கவனம் பெற்றவர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் ரகுநாதன் இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஊரடங்கு முடிந்ததும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது.

காபியுடன் சியர்ஸ் சொல்லும் ஸ்ரீரெட்டி

May 8, 2020
சென்னையில் ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்படாத நிலையில் சமீபத்தில் சென்னையில் தஞ்சம் புகுந்த தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ‘டுவிட்டரில் வீடியோ’ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘காபியுடன் சியர்ஸ் செய்யுங்கள். உங்களையே நேசியுங்கள். மற்றவர்களைப் பற்றி கவலை வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

கையும் களவுமாக மாட்டிக் கொண்ட த்ரிஷா

May 8, 2020
நடிகை திரிஷா விலங்குகள் நல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். அவர் தனது வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் செல்ல நாய்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நாய்கள் சூழ திரிஷா உடற்பயிற்சி செய்கிறார். அந்த புகைப்படத்தில், “உடற்பயிற்சி செய்யாமல் கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன்”, என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

முகமூடி அணிந்து மதுக்கடை சென்றாரா ரகுல் பிரீத்தி சிங்

May 7, 2020
கொரோனாவை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகை ரகுல் ப்ரீத்சிங், முகக்கவசம் அணிந்தபடி மும்பையில் கடைகளில் ஏதோ பொருட்களை வாங்கி சென்றுள்ளார். பாந்ரா பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கிவிட்டு அவர் திரும்பும்போது, சரியாக அடையாளம் கண்டுப்பிடித்து, வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி விட்டனர். வேறு வழியே இல்லாமல் அது தான் என ஒத்துக்கொண்ட ரகுல், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காரணம் கூறுவாரா சமந்தா

May 7, 2020
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும், ‘கேம் ஓவர்’ படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்த இரண்டு படங்களிலும் இருந்து சமந்தா விலகிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.ஒரு புது இயக்குனரின் இயக்கத்தில் சோனி பிக்சர்ஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டதால் தான் இரண்டு படங்களை ஒதுக்கினார் என புறம் சொல்கின்றனர். […]

தாய் பூமி குணமடைந்தது – அனுபமா

May 7, 2020
அதர்வா உடன் தள்ளிப்போகாதே படத்தில் நடித்துள்ள மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு குறித்து பேசுகையில், ”உலகம் எங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், குறைவான கார்கள், விமானங்கள் மட்டுமே இயங்கின. குறைந்த மாசுபாட்டால் நாம் கொரோனாவை கண்டு பீதியடையும் போது, தாய் பூமி குணமடைந்துள்ளது,” என்றார்.

ஸ்ருதியின் ஆசிர்வாதம்

May 7, 2020
கொரோனாவால் வீட்டில் முடங்கியுள்ள நடிகை ஸ்ருதி, முருகனின் வேல் படம் போட்ட சட்டை அணிந்து ஆசிர்வதிப்பது போல் ‘போஸ்’ கொடுத்து, ‘அனைவரும் ஜென் மக்களை போல் இருங்கள்’ என, பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட பலரும், ‘அப்பா நாத்திகவாதி. மகள் ஆத்திகவாதியாக இருக்கிறாரே!’ என, ‘கமென்ட்’ அடித்தனர். உண்மையில், அவர் கூறியது, ‘பசிக்கும் போது சாப்பிடுங்கள், உறங்கத் தோன்றும் போது உறங்கச் செல்லுங்கள்’ என்பதே ஆகும்.

இணையதள தொடர்களில் ஆர்வம் காட்டும் நடிகர், நடிகைகள்

May 7, 2020
கொரோனா பாதிப்பினால் நடிகர் – நடிகையர் சத்தமில்லாமல் நேரடியாக இணையதள தொடர்களில் நடிக்க துவங்கியுள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும், ‘வெப் சீரிஸ்’ தொடரை, அவரது உதவியாளர் சாருகேஷ் இயக்குகிறார். இதில், ஜெய், வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளனர். ஹாட் ஸ்டாரில், இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், பிரம்மன், மாயவன் படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி, வெப் தொடரில் நடிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தலை கீழாக நின்று யோசனை கூறும் சஞ்சனா சிங்

May 6, 2020
‘ரேணிகுண்டா, அஞ்சான், மீகாமன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சனா சிங், டுவிட்டரில், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து, ‘சாலையில் வேகத் தடை உள்ளது. வங்கியில் பணவரம்பு உள்ளது. தேர்வுக்கு கால அவகாசம் உள்ளது. ஆனால், சிந்தனைக்கு வரம்பு இல்லை. எனவே பெரிதாக சிந்தியுங்கள்; பெரிதாக அடையலாம்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து, ‘இப்படி தலைகீழா நிற்கும் யோசனையை, இவருக்கு யார் வழங்கியிருப்பர்’ என, ரசிகர்கள் யோசிக்கத் துவங்கியுள்ளனர்.

குடி குடிமைக்கு அடிமை தமிழக அரசு – கஸ்தூரி டுவிட்

May 6, 2020
‘டாஸ்மாக்’ திறக்கும் அரசின் அறிவிப்புக்கு முன், நடிகை கஸ்துாரி வெளியிட்ட, ‘டுவிட்டர்’ பதிவில், ‘டாஸ்மாக்கை திறப்பதில்லை என முடிவு எடுத்த, தமிழக அரசுக்கு நன்றி. நான் கூட கண்டிப்பாக டாஸ்மாக்கை திறப்பர் என்றே எண்ணினேன். ‘என் கணக்கு தவறாக போனதில், எனக்கு மகிழ்ச்சியே. டாஸ்மாக் திறப்பது குறித்து, அரசு அறிவிப்பு வெளியிட, கஸ்துாரி டுவிட்டரில், ‘அவசரப்பட்டு விட்டேனே… என் கணக்கு பொய்யாகி போச்சுனு சந்தோஷப்பட்டேன். ‘குடி’க்கு அடிமையான தமிழக அரசை பற்றிய என் கணக்கு சரியே’ எனக் […]

இட ஒதுக்கீடு சரியாக அமல் படுத்தப்பட்டதா..? மனிஷா யாதவ்

May 6, 2020
வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர், நடிகை மனிஷா யாதவ். இவரது சொந்த ஊர் பெங்களுரூ. சமீபத்தில், ஊரடங்கு முடிந்து, கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பெங்களுரூவில் உள்ள மதுக்கடையில், ஆண்களும், பெண்களும் தனி வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர். அப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த மனிஷா, ‘இதற்கு முன், பெண்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்பட்டதா என்பது தெரியாது. ஆனால், இங்கு சரியாக பயன்படுத்தியுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

வெப் சீரிஸ் தளத்திற்குள் நுழையும் ஜெய்

May 6, 2020
‘பிரேக்கிங் நியூஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடிக்கும் ஜெய் முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க, இவரிடம் உதவியாளராக இருந்த சாருகேஷ் இயக்குகிறார். இந்த தொடரில் நடிகை வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

அனுஷ்காவை பின்தொடரும் 30 லட்சம் பாலோவர்கள்

May 6, 2020
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. இவர் நடித்துள்ள சைலன்ஸ்(நிசப்தம்) படம் கொரோனா ஊரடங்கு முடிந்து தியேட்டர் திறக்கப்படும் போது திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராமில் பின் தொடருவோர் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. இதற்காக அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார் .

அம்மாவின் சேலை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை

May 5, 2020
வளர்ந்து வரும் மலையாள நடிகை ஐஸ்வரய லட்சுமி, தனது தாயின் சேலையை அணிந்துகொண்டு மூக்கில் மிகப்பெரிய வளையம் அணிந்து போஸ் கொடுத்தபடி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இளம் இயக்குனர் பஷில் ஜோசப், இந்த புகைப்படத்தை கண்டால் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உன்னை தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிடுவார் என கருத்து பதிவிட்டுள்ளார்.

மனிதர்கள் தான் உண்மையான வைரஸ்! – நடிகர் அஸ்வின் வேதனை

May 5, 2020
மங்காத்தா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அஸ்வின் காக்குமனு. தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள அவர் நிஜத்தில் மனிதர்கள் தான் உண்மையான வைரஸ் என தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

ஜோதிகாவிற்கு சப்போர்ட் பண்ணும் வரலட்சுமி

May 5, 2020
தஞ்சாவூர் கோவில் குறித்து ஜோதிகா சமீபத்தில் பேசிய பேச்சு பரபரப்புக்குள்ளானது. இதுதொடர்பாக, விவாதங்கள் பல நடந்து வந்த நிலையில், இது குறித்து, வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:ஒருவர் எதை கூறினாலும், அதை சரியாக புரிந்து கொள்ளாமல், பரபரப்புக்காக வேறு மாதிரி பரப்புவது அதிகரித்து விட்டது. ‘மதம் சார்ந்த இடத்தை நன்றாக பராமரிப்பது போல், பள்ளி, மருத்துவமனையையும் பராமரிக்க வேண்டும்’ என்று தான் ஜோதிகா பேசியுள்ளார். இதற்காக, அவருக்கு நான் நன்றி கூறுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

பூமியின் அனைத்து ரகசியங்களையும் அறியும் பியா பாஜ்பாய்

May 5, 2020
போதிய பட வாய்ப்பு இன்றி, கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்த நடிகை பியா பாஜ்பாய், கொரோனாவுக்கு பின், இயற்கையை அதிகம் நேசிக்க துவங்கி விட்டார். அவர் கூறுகையில், ”நீங்கள் கேட்கும் காற்று, மழை அனைத்துமே, எப்போதும் வீசும் அதே காற்று; எப்போதும் பெய்யும், அதே மழை தான். காற்றும், நீரும் பூமியின் அனைத்து ரகசியங்களையும் அறியும்,” என்றார்.

கொரோனா சிகிச்சைக்காக ராகவேந்திரா மண்டபம் தருவாரா, இல்லையா ?

May 5, 2020
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதை தொடர்ந்து, தனியார் திருமண மண்டபங்களை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. கோடம்பாக்கத்தில், நடிகர் ரஜினிக்கு சொந்தமான, ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இதை, மாநகராட்சி வசம் தர, ரஜினியின் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் பரவியது. ராகவேந்திர மண்டபத்தில், பராமரிப்பு பணி நடப்பதால், மூன்று மாதங்களுக்கு அனுமதி கிடையாது என, லதா கூறியதாகவும், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.இதை, ரஜினி தரப்பு மறுத்துள்ளது.

வேடிக்கையான பொழுதை காண்பிக்க த்ரிஷா ஆவல்

May 4, 2020
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் படங்களில் நடித்தவர் த்ரிஷா. இதன் இரண்டாம் பாகத்தில், த்ரிஷா நடிப்பார் என்ற திட்டம் பேச்சளவிலேயே இருந்தது. இந்நிலையில், ஊரடங்கை பயனுள்ள தாக்க முடிவு எடுத்த த்ரிஷா, கவுதம் மேனனிடம், மொபைலில் படம் பிடிப்பதை கற்றுள்ளார்.இது குறித்து த்ரிஷா டுவிட்டரில், ‘வேடிக்கையான காலை பொழுது. நான் படமாக்கியதை, உங்களுக்கு காண்பிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு முடிந்ததும், த்ரிஷா இயக்குனராகவும் மாறலாம்.

கடவுளின் திட்டம் தோல்வி அடையாது – அதுல்யா ரவி

May 4, 2020
ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள நடிகை அதுல்யா ரவி, இசை மற்றும் பூனை உள்ளிட்ட விலங்குகளுடன் பொழுதுபோக்கி வருகிறார்.அவர் கூறுகையில், ”கடவுள் என்ன திட்டமிட்டுள்ளார் எனத் தெரியாது. ஆனால், அவருடைய திட்டம் ஒரு போதும் தோல்வி அடையாது. அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்,” எனக் கூறியுள்ளார்.

டி.ஆர். பாணியில் காதலை தெரிவிக்கும் ஷெரீன்

May 4, 2020
கொரோனாவால் நடிகையர் பலரும், சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். இதில் நடிகை ஷெரீன், ‘காதலை வெளிப்படுத்துவது எப்படி?’ என, வீடியோ ஒன்றை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘அன்பே நீ ஒரு இட்லி; நான் தான் உன் சட்னி. நீ ஒரு பொங்கல்; உன் அப்பா எனக்கு அங்கிள். நீ ஒரு தயிர்; நீ தான் என் உயிர். நீ ஒரு ரசம்; என்னை விட்டு விட்டு போனால், உனக்கு வைப்பேன் விஷம். நீ […]

அம்மாவாக நடிக்கத் தயார் – பிரபல நடிகை

May 4, 2020
பிரபுதேவா நடித்த, ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நாயகியாக நடித்தவர், தெலுங்கு நடிகை ரேணு தேசாய்.பவன் கல்யாணுடன் காதல் திருமணம் செய்து, விவாகரத்து பெற்ற இவர், மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். இந்த முறை, இளம் நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்க தயார் என, அறிவித்துள்ளார்.

இது மட்டும் தான் ஒரிஜினல், மற்றவை போலி – நிவேதா பெத்துராஜ்

May 4, 2020
நடிகை நிவேதா பெத்துராஜ் பெயரில் டுவிட்டரில் நிறைய போலி கணக்குகள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து அவரின் கவனத்திற்கு வந்ததையடுத்து போலியான பெயரில் உள்ள டுவிட்டர் கணக்கை எல்லாம் முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில், @Nivetha_Tweets என்ற பெயரில் உள்ளது மட்டும் தான் என்னுடைய டுவிட்டர் கணக்கு. மற்றவை எல்லாம் போலியானது என்றார்.

மீண்டும் சேட்டிலைட் டிவி மற்றும் ஓடிடியில் ஹீரோ

May 3, 2020
சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஹீரோ’. இப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் போஸ்கோ பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இப்படத்தை சாட்டிலைட் டிவியிலும், ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து அமேசான் பிரைம் அதனுடைய தளத்திலிருந்து ‘ஹீரோ’ படத்தை நீக்கியது. இந்நிலையில் இப்படம் மீண்டும் அமேசான் பிரைம் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆச்சார்யாவிலிருந்து காஜல் அகர்வால் விலகவில்லை

May 3, 2020
சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் ஆச்சார்யா படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகவில்லை. மேலும், அந்த படத்தில் நடிப்பதற்காக காஜல் ஏற்கெனவே அட்வான்ஸ் வாங்கிவிட்டார். விலகல் என்று வரும் செய்திகள் தவறானவை என காஜல் அகர்வால் மேனேஜர் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

தனது கணவரை டாமினேட் செய்துவிட்டார் சாய் பல்லவி! சமந்தா

May 3, 2020
தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா ஜோடியாக லவ் ஸ்டோரி படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். படம் குறித்து சமந்தா கூறுகையில், ‘படத்தில் நாக சைதன்யாவை விட சாய் பல்லவி தான் டாமினேட் செய்கிறார், என்று இயக்குனரிடம் சமந்தா சொல்லியிருக்கிறாராம். அதைப் பெருமையாக சொன்னாரா இல்லை குறையாகச் சொன்னாரா என இயக்குனர் சேகர் கம்முலா குழம்பிவிட்டிருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு – ஷேர் செய்தால் ரூ.500

May 2, 2020
“சேர்ந்தே மீள்வோம்…” என்று தொடங்கும் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருப்பதோடு பாடியும் இருக்கிறார். இவருடன் ஸ்ருதி ஹாசன், சித் ஸ்ரீராம், நீதி மோகன், ஜாவே அலி, சாஷா திருபாதி, கதீஜா ரஹ்மான், அபய் ஜோத்புர்கர் உள்ளிட்ட பலரும் பாடி உள்ளனர். இந்தப் பாடலை எச்.டி.எப்.சி வங்கி தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஷேர் செய்தால் ஒரு ஷேருக்கு 500 ரூபாய் வீதம் பிரதமரின் கொரோனா நிதிக்கு சேர எச்.டி.எப்.சி ஏற்பாடு செய்துள்ளது.

அஜித் பிறந்த நாளை முன்னிட்டு டுவிட்டரில் புதிய சாதனை – 2 கோடி டுவிட்

May 2, 2020
அஜித் ரசிகர்கள் ‘#HBDDearestThalaAJITH’ என்ற ஹேஷ்டேக்கை மட்டுமே பிறந்தநாளுக்காக பயன்படுத்த முடிவெடுத்திருந்தனர். ‘#HBDDearestThalaAJITH’ என்ற ஹேஷ்டேக் மூலம் மட்டும் 90 லட்சம் டுவீட்டுகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 1 கோடியே 94 லட்சம் டுவீட்டுகள் 24 மணி நேரத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அதற்குப் பிறகும் பலரும் டுவீட்டுகளைப் பதிவிட்ட வகையில் 2 கோடியை அது தாண்டியுள்ளதாம். ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு அதிகபட்சமாகப் பதிவான டுவீட்டுகள் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

சபதம் எடுக்கும் நந்திதா

May 2, 2020
நடிகை நந்திதா ஸ்வேதா, சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, தன் பிறந்த நாள் சபதம் குறித்து ஏதும் கூறாத அவர் தற்போது, “பரபரப்பாக பேசப்படும் நடிகையாக வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும் என சபதம் எடுத்தேன்,” என தெரிவித்துள்ளார்.

வித்யா பிரதீப் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு

May 2, 2020
பசங்க 2, தடம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் வித்யா பிரதீப். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான இவர், டிவி தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் தனது பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு வைத்திருப்பதாக வித்யா பிரதீப் புகார் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் தான் ஆக்டிவாக இல்லை என்பதால் அதை பயன்படுத்தி அவர்கள் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக வித்யா கூறியுள்ளார்.

தவறான பதிவுகளுக்காக நான் விலகப் போவதில்லை – பிரசன்னா

May 2, 2020
துல்கர் சல்மான் நடித்த மலையாள படம் ஒன்றில், நாய்க்கு ‘பிரபாகரன்’ என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் துல்கரை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து நடிகர் பிரசன்னா துல்கருக்கு ஆறுதல் கூறினார். உடனே பிரசன்னாவையும் பலரும் வசைபாடினர். இதனால் அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர், “சிலரது தவறான பதிவுகளுக்காக, நான் டுவிட்டரில் இருந்து விலகப் போவதில்லை,” என, தெரிவித்து உள்ளார்.

கமல் புதிய திட்டம் – மொபைல் போன் வாயிலாக ஆலோசனை

May 1, 2020
திரைப்படங்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்ப, தயாரிப்பாளர்கள் பலர் தீர்மானித்துள்ளனர். இச்சூழலை பயன்படுத்தி, நேரடியாக இணையத்தில் வெளியாகும் படியாக, சிறிய பட்ஜெட் படங்களை, தன் ராஜ்கமல் பிலிம்ஸ் வாயிலாக தயாரிக்க, நடிகர் கமல்திட்டமிட்டுள்ளார்.இது குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம், மொபைல் போன் வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

பல மொழிப்படங்களை பார்க்கும் வெண்பா

May 1, 2020
காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி ஆகிய படங்களில் நடித்த வெண்பா, தற்போது பழைய படங்களை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களை பார்க்கிறேன்,” என்றார்.

இரண்டு நாட்கள் அனுமதி கோரும் துருவ நட்சத்திரம் படக்குழு

May 1, 2020
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் துருவநட்சத்திரம். படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில், படம் முடங்கி விட்டது. இந்நிலையில், இரு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தால் படம் நிறைவடைந்துவிடும் என்றும், அதற்காக, படக்குழு அரசிடம் சிறப்பு அனுமதி கோர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவது எங்களது உரிமை – தயாரிப்பாளர்கள்

May 1, 2020
திரைப்படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிட, தங்களுக்கு உரிமை உண்டு என தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “சிறு பட்ஜெட் படங்களை திரையிட மறுப்பதாகவும், உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் மீது தயாரிப்பாளர்கள் பலர் குற்றஞ்சாட்டினர்.“இனி அவர்கள் அப்படி பேசி, எங்களது உரிமையில் தலையிடக் கூடாது,” என தெரிவித்துள்ளார்.

இறுதிகட்ட பணிகளுக்காக அரசிடம் அனுமதி

May 1, 2020
தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் திரைப்பட பணிகளை தொடர அனுமதிக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்புகளுக்கு அனுமதி கேட்கவில்லை. சமூக இடைவெளியுடன் டப்பிங், எடிட்டிங் போன்ற இறுதிக்கட்டப் பணிகள்செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்,” என்றார்.

நடிகர் அஜித் 49வது பிறந்த நாள் கொண்டாட்டம்

May 1, 2020
நடிகர் அஜித், 49வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். வழக்கம் போல, தன் பிறந்தநாளை முன்னிட்டு, எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என, அவர் கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில், தன் பெயரை வைத்து நடத்தப்படும் கொண்டாட்டத்தையும் தவிர்க்குமாறு, அவர் கோரியிருந்தார். அவர் நடித்து வரும், ‘வலிமை’ படத்தின் விளம்பரத்தையும் தவிர்க்க சம்மதித்துள்ளார்.

கொரோனாவுடன் விபரீத விளையாடிய யாஷிகா

April 30, 2020
உலகமே இன்று கொரோனாவை பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தான் அதனுடன் சிறுவயதில் இருந்தே விளையாடி வந்ததாக யாஷிகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பச்சை நிறத்தில் கொரோனா போலவே இருக்கும் ஒரு விளையாட்டு பொம்மையை தான் அப்படி வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார் யாஷிகா.

அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த வலிமை

April 30, 2020
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், கொரானோவால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்ந்லையில் ‘வலிமை’ சம்பந்தமான எந்த ஒரு விளம்பரத்தையும் வெளியிடப் போவதில்லை என படக்குழுவினர் அறிவித்துவிட்டனர்.

பெண்களுக்கான உதவி எண்ணை அறிவித்த வரலட்சுமி

April 30, 2020
நடிகை வரலட்சுமி பெண்களுக்கான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஊரடங்கு காலத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக, புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ‘அவர்களுக்கான உதவி எண்: 1800 102 7282. இந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; மற்ற பெண்களுக்கும் கொடுங்கள்’ என, தெரிவித்துள்ளார்.

கொரோனா வீடியோவிற்கு சிறப்பு பரிசு – ஸ்ருஷ்டி டாங்கே

April 30, 2020
கட்டில் படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே நடித்து வருகிறார். படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்குகிறார். இப்படக்குழு, ஏற்கனவே கொரோனா விழிப்புணர்வு கவிதை போட்டியை அறிவித்தது. சிறுவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு நடன போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்து, ஸ்ருஷ்டி டாங்கே கூறும்போது, ”இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்கேற்ப நடனமாடி, வீடியோ அனுப்பும் சிறுவர்களில், மூவரை தேர்ந்தெடுத்து பரிசளிப்போம். விரைவில் முழு விபரத்தை வெளியிடுவோம்,” என்றார்.

புடவையில் ஓவியா

April 30, 2020
நடிகை ஓவியா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இது குறித்து, அவர் கூறுகையில், ”ஊரடங்கு காரணமாக, எளிமையாக கொண்டாடினேன். புடவை கட்ட வேண்டும் என்கிற என் நீண்ட நாள் ஆசை, இந்த பிறந்த நாளில் நிறைவேறியது,” என்றார்.

புதுக்கவிதையில் ரம்யா பாண்டியன்

April 29, 2020
நடிகை ரம்யா பாண்டியனுக்கு, புதுக்கவிதை படத்தில் இடம் பெற்ற, ‘வா… வா… வசந்தமே’ பாடல் மிகவும் பிடிக்குமாம். இவர், ”தற்போதைய கொரோனா பீதி காலத்தில், அந்த பாடலை கேட்கும்போது, நானே வசந்த காலத்தை, ‘வா… வா’ என, அழைப்பது போல் உள்ளது. இது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது,” என்றார்.

மாங்காய் தான் எனக்கு பிடிக்கும் – மீரா மிதுன்

April 29, 2020
மீரா மிதுன், தனக்கு பிடித்த காய்கறிகள், பழங்களை, சமூக வலைதளத்தில்பட்டியலிட்டு உள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எல்லா காய்கறிகளை விடவும், மாங்காய் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என, தெரிவித்து உள்ளார்.

கொரோனா தீ போன்றது – ஷோபி சவுத்ரி

April 29, 2020
நடிகை ஷோபி சவுத்ரி, கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘கொரோனா என்பது தீ போன்றது. அரைகுறையாக விடாமல், அதை முழுதுமாக அழிக்க வேண்டும். அதற்கு ஊரடங்கு ஒன்றே வழி’ என, தெரிவித்துள்ளார்.

யோகி பாபு இயக்கி நடிக்கும் புதிய படம்

April 29, 2020
நடிகர் யோகிபாபு முதன் முறையாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து, யோகிபாபு கூறும்போது, ”கதை, திரைக்கதை, வசனம் நான் தான். ஆனால் படத்தை நான் இயக்கவில்லை. இப்படத்தின் பூஜை, வரும் தை மாதம் நடக்கும்,” என்றார்.

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம்

April 29, 2020
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்பான் கான் (54) . பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.

அஜித் பிறந்தநாள் வேண்டாமே

April 27, 2020
நடிகர் அஜித் பிறந்த நாள் மே, 1ம் தேதி அன்று அவரது ரசிகர்கள், ஒரு வீடியோவை தயாரித்து, திரை பிரபலங்கள் மூலம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அந்த பிரபலங்களில் ஒருவர், நடிகர் ஆதவ் கண்ணதாசன். அவர், தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘அஜித் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்து, ‘கொரோனா நேரத்தில் அஜித் பிறந்த நாளுக்காக வீடியோ, போஸ்டர் போன்றவற்றை வெளியிட வேண்டாம்’ என, கேட்டுக் கொண்டனர். ஆகவே, அஜித் பிறந்த நாளை, பகட்டாக கொண்டாட வேண்டாம்’ என, பதிவிட்டுள்ளார்.

தமிழ் மொழி கற்றுவரும் ராஷிகண்ணா

April 27, 2020
தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை ராஷிகண்ணா, கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ் மொழியை கற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், “தமிழ் படங்களில் நடித்தாலும், ஓரளவு தான் பேசத் தெரிகிறது. நன்றாக பேசுவதற்காக, தமிழ் கற்று வருகிறேன்,” என்றார்.

இயற்கையின் மதிப்பை உணரும் சன்னி லியோன்

April 27, 2020
நாடு முழுவதும் கொரோனாவால் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இப்போது இயற்கையின் மீதான மதிப்பை உணர வைத்திருப்பதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஊரடங்கு முடிந்தவுடன், நான் ஒரு தோட்டம் அமைத்து பராமரிக்க போகிறேன் என்றார்.

எனக்கு எப்போதுமே வயது 16 தான்! கிரண்

April 27, 2020
சினிமா திரையுலகை விட்டு சில ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த நடிகை கிரண், மீண்டும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்கிறார். அவ்வப்போது தன் கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவரிடம் ரசிகர் ஒருவர், ‘உங்கள் வயது என்ன?’ எனக் கேட்க அதற்கு கிரண், ”எனக்கு எப்போதுமே 16 வயது தான்,” என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

நிர்வாணம் என்பதை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள் – நடிகை ஊர்வசி

April 27, 2020
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தன் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் பதிந்துள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஊர்வசி கூறும்போது, ”நிர்வாணம் என்பதே உண்மையான கலை. அதை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்,” என்றார்.

மன உறுதியோடு எதிர்கொண்ட ஸ்ரேயா

April 27, 2020
நடிகை ஸ்ரேயா, தனது கணவர் ஆண்ட்ரி, கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டால் பதறக்கூடாது. என் கணவருக்கு அத்தொற்று ஏற்பட்டபோது, மன உறுதியோடு எதிர்கொண்டார். சிகிச்சையை போலவே, மன உறுதியும் அவசியம்’ என பதிவிட்டுள்ளார்.

ரஜினியுடன் வாய்ப்பா… கையெடுத்து கும்பிட்டு ஓடிய பிரபல நடிகை

April 27, 2020
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பாயல் ராஜ்புட், ரசிகர்களுடன் உரையாற்றினார். அப்போது ரசிகர் ஒருவர், “ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீங்களா?” என கேட்டதற்கு, நேரடியாக பதில் கூறாமல், இரு கைக்கூப்பி கும்பிடுவது போன்ற எமோடிகானை பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள், “ஆளவிடுங்க சாமி” என்ற அர்த்தத்தில் தான் பாயல் பதிலளித்திருப்பதாக புரிந்து கொண்டுள்ளனர்.

என் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட கூடாது – அஜித் உத்தரவு

April 26, 2020
கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் கஷ்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் என் ரசிகர்கள் எனது பிறந்த நாளை கொண்டாட கூடாது என ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் உத்தரவிட்டுள்ளார்.

5 கோடி பார்வையாளர்களை கடந்த குட்டி ஸ்டோரி

April 26, 2020
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் வரும் குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் வெளியாகி 73 ஆன நிலையில் 50 மில்லியன் பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர். 1.6 மில்லியன் லைக்குகளையும், ஒரு லட்சத்து 13 ஆயிரம் டிஸ்-லைக்குகளையும் பெற்றுள்ளது.

பெண் காவலர்களுக்கு உங்கள் வீட்டின் கழிவறை கொடுத்து உதவுங்கள் – யோகி பாபு

April 26, 2020
காமெடி நடிகர் யோகி பாபு கொரோனா கால பணியில் தீவிரமாக இருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு என்19 பாதுகாப்பு மாஸ்குகளும், சக்தி பாணங்களும் வழங்கினார். கண்காணிப்பு பணியில் நின்றிருக்கும் காவலர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள். பெண் காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள். அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.

ராமராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ?

April 26, 2020
இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்து, டைரக்டராக உயர்ந்து பின்னர் ஹீரோவாக கலக்கியவர் ராமராஜன். இந்நிலையில் ராமராஜன் இயக்கத்தில் லிஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகின. “விஜய்சேதுபதியிடம் ராமராஜன் கதை சொன்னது உண்மைதான். ஆனால் நடித்து தருவதாக எந்த உத்தரவாதமும் தரவில்லை.

பில்லோ சேலஞ்சை ஏற்ற தமன்னா

April 26, 2020
ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகளுக்கு பொழுது போகவில்லை. அதனால் விதவிதமான சேலஞ்சுகளை உருவாக்கி டிரெண்ட் செய்கின்றனர். சில தினங்களுக்கு முன் பில்லோ சேலஞ்ச் வைரலானது. அதாவது உடலை தலையணை வைத்து மறைக்கும் சவால். இதை ஏற்கனவே சுரபி உள்ளிட்ட பல நடிகைகள் செய்தனர். இப்போது தமன்னாவும் செய்துள்ளார். தரையில் படுத்தப்படி தலையணையை வைத்து உடலை மறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

மாஸ்டர் தியேட்டர் ரிலீசிற்கு பிறகு தான் ஓடிடியில் வெளியாகும்

April 26, 2020
ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் மே முதல் வாரத்தில் வெளியாகிறது. அதற்குப் பிறகு சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’, விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ ஆகிய படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் என தகவல் பரவியது. ஆனால், ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் தான் முதலில் வெளியாகும். அதன்பிறகே ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினரிடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே பேச்சில் கேரியரை தொலைத்த ஜோதிகா

April 25, 2020
சக்தி மசாலாவின் Ambassodor ஆன ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசிய பேச்சை கேட்டு, இவரது ஒப்பந்தத்தை இந்த ஆண்டுடன் நிறுத்த வேண்டும் என்று அதன் உரிமையாளரிடம் மக்கள் வலியுறுத்துகிறார்கள், இதை அந்த நிறுவனரும் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்பாரை கிழித்து தொங்கவிட்ட விஸ்வாசம்

April 25, 2020
அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் , ரஜினி நடித்த தர்பார் திரைப்படமும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் 1,45,93,000 புள்ளிகளை மட்டுமே டி.ஆர்.பி. யில் தர்பார் பெற்றுள்ளது. ஆனால், ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட விஸ்வாசம் 1,81,43,000 தடப்பதிவுகளை பெற்றது. இது ரஜினி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஊரடங்கு காலத்திலும் அடங்காத ஸ்ரீரெட்டி

April 25, 2020
நடிகை ஸ்ரீரெட்டி. பாலியல் குற்றச்சாட்டுகள், படுக்கை அறை படங்கள் என நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறவர். கொரோனா காலத்தில் அவர் வெளியிட்டுள்ள படங்கள் அதிர வைப்பதாக உள்ளது. விலை உயர்ந்த மது பாட்டிலுடன் போஸ் கொடுத்திருக்கிறார். மது அருந்திக் கொண்டே டி.வி.பார்க்கும் படத்தை வெளியிட்டுள்ளார். கூடவே கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். “என்னைப் பற்றி யாரும் தீர்மானிக்க வேண்டாம். எனக்கு எது தேவையோ அதை செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

டாக்டர்கள் நினைத்தால் நம் நிலைமை என்னவாகும்? காயத்ரி கேள்வி

April 25, 2020
காயத்ரி தனது டுவிட்டரில் கோபத்துடன் எழுதியிருப்பதாவது :நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். நமக்காக டாக்டர் சைமன், டாக்டர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக்கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவு செய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள் என்றார்.

தன் விருப்பத்தை தெரிவித்த மாளவிகா மோகனன்

April 25, 2020
நடிகை மாளவிகா மோகனன் தன் விருப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து, அவர் கூறும்போது, ”சிறு வயதில் இருந்தே, பைக் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பது என் ஆசை. ஊரடங்கு முடிந்தவுடன், இதற்கான முயற்சியில் இறங்க உள்ளேன்,” என்றார்.

நடிப்பு பயிற்சி எடுக்கிறேன் – சோனம் பஜ்வா

April 25, 2020
நடிகை சோனம் பஜ்வா, ஊரடங்கு காரணமாக வீட்டில் பழைய படங்களை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் கூறும்போது, ”ஹிந்தி மற்றும் தமிழ் கறுப்பு, வெள்ளை படங்களை பார்த்து, நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறேன், என்றார்.

ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம் – பேரரசு

April 24, 2020
இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது “பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் “என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது என இயக்குநர் பேரரசு டுவிட் செய்துள்ளார்.

விஜய் ரஜினி ரசிகர்களிடையே மோதல்! ஒருவர் பலி ,ஒருவர் கைது

April 24, 2020
மரக்காணத்தில் யார் அதிக நிதி கொடுத்தார்கள் என்று விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் விஜய் ரசிகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ரஜினி ரசிகர் ஒருவரை போலீசார் கைது செய்தார்.

நானும் காதலிப்பேன் – அஞ்சலி

April 24, 2020
நடிகை அஞ்சலி காதல் குறித்த தன் எண்ணங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிந்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “காதல் ஒரு உன்னதமான உணர்வு. இந்த உணர்வு இல்லாத உயிர்கள் உலகில் எதுவும் இல்லை. என் மனம் கவர்ந்த ஆணை சந்தித்தால், நிச்சயம் நானும் காதலிக்கவே செய்வேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இது உண்மையல்ல – மஞ்சுவாரியர்

April 24, 2020
ஜோபின் டி சாக்கோ இயக்கும் தி பிரைஸ்ட் என்ற மலையாள படத்தில் முதன் முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் நடிகை மஞ்சு வாரியர். இந்நிலையில், படத்தில் இருந்து மஞ்சு விலகியதாக ஒரு தகவல் பரவியது. இது குறித்து அவர் கூறும்போது, “இது உண்மையல்ல. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில், ஏன் இப்படி தவறான தகவல் பரவுகிறது எனபுரியவில்லை,” என்றார்.

டாக்டர்களுக்கு சல்யூட் அடித்த சிவகார்த்திகேயன்

April 24, 2020
நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்களின் உயிர், குடும்பத்தை பற்றி யோசிக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த போராடும் மனித கடவுள்கள் டாக்டர்களுக்கு பெரிய நன்றி மற்றும் சல்யூட். நாம் அவர்களுடன் இருக்கிறோம் என சொல்கிற நேரம் இது. நம் அன்பும், மரியாதையும் அவர்களை போய் சேரட்டும். உலகின் தலை சிறந்த சொல் செயல். செஞ்சுகாட்டுவோம். வீ லவ் டாக்டர்ஸ் என்றார் சிவகார்த்திகேயன்.

ஜிப்ரிஷ் சேலஞ்சை ஏற்கும் ரைசா வில்சன்

April 24, 2020
கொரோனாவால் உலகமே இன்று பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஏற்கும் சவால்களுக்கு தயாராகி வருகின்றனர். முழுமையான அர்த்தம் பெறாத வாக்கியம் ஒன்று கொடுப்படும். அதை பத்து நொடிகளில் யூகித்து சரியான பதில் அளிக்க வேண்டும். சமூக வலைதளமே உலகம் என மூழ்கிக்கடக்கும் ரைசா வில்சன், பாவனா பாலகிருஷ்ணன், கனிஹா உள்ளிட்ட பலர் இந்த ஜிப்ரிஷ் சவாலை செய்து காட்டியுள்ளனர்.

இரண்டாவது திருமணம் பற்றி சூசகமாக தெரிவிக்கும் அமலாபால்

April 24, 2020
நடிகை அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் தான் உங்களுடைய இரட்டைச் சுடர், பாதுகாவலர், ஆத்ம துணை, அன்பானவர், நம்பிக்கையின் புதிய சக்தி, சுதந்திர மத்திரம், நபிகள், புத்தர், ஆன்மிக வழிகாட்டி, தெய்வீக இணை, ஹீரோ மற்றும் ஹீலர் என்பதை அறியும்போது எவ்வளவு மயக்கம் அளிக்கிறது” எனும் சிறுகதை எழுத்தாளர் ரூன் லஸுலியின் வரிகளை பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள், அமலா பால் தனது காதலர் பற்றியும், இரண்டாம் திருமணத்தை பற்றியும் தான் சூசகமாக பதிவிட்டுள்ளார் என […]

இரண்டாவது இன்னிங்சில் ஸ்கோர் பண்ணும் ப்ரியா மணி

April 24, 2020
திருமணத்திற்கு பிறகு நடிகை பிரியாமணியின் இரண்டாவது இன்னிங்ஸ் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தெலுங்கில் அசுரன் ரீமேக்கில் உருவாகும் ‘நரப்பா’வில் வெங்கடேஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியாமணி. அதேசமயம் பீரியட் படமாக உருவாகி வரும் ‘விராட பருவம் 1992’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். கன்னடம் மற்றும் தமிழ் என இருமொழிப்படமாக உருவாகியுள்ள ‘டாக்டர் 56’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வளர்ப்பு பிராணிகளுக்காக நிதி திரட்டும் வரலட்சுமி

April 24, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊடரங்கு தற்போது அமுலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்புக்காக நிதி திரட்டி வருகிறது. தனிநபர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை வரலட்சுமி வளர்ப்பு பிராணிகளை பராமரிக்க நிதி திரட்டி வருகிறார். அவர் நடத்தி வரும் சக்தி பவுண்டேஷன் சார்பில் இதனை செய்கிறார். இதற்காக சக்தி பவுண்டேஷன் வங்கி கணக்கு விபரங்களை வெளியிட்டு நிதி உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மலர் தூவிய ரோஜாவிற்கு பலரும் கண்டனம்

April 24, 2020
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநிலம் நகரி தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய, தன் தொகுதிக்கு சென்றார். வழி நெடுக ஆதரவாளர்கள், அவர் மீது ரோஜா பூ துாவினர். இதற்கு ‘ஊரடங்கின் அடையாளமா இது…’ என, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏறி இறங்குகள், அழகாகிவிடுவீர்கள் – நிக்கி கல்ராணி

April 24, 2020
வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வரும் நடிகை நிக்கி கல்ராணி ஓர் எளிமையான வழியை கூறுகிறார். “வீட்டின் மாடிப்படிகளில், ஏறி இறங்குங்கள்… நேரம் போகும் என்பதோடு, உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் இருக்கும்,” என்றார்.

ஐஸ்வர்யா ராஜேஸின் ஆர்வம்

April 24, 2020
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காமிக்ஸ் புத்தகங்கள் படித்து வருவதாக தெரவித்துள்ளார். அந்த ஆர்வத்தில் மீண்டும் சிறு வயதிற்கே சென்றது போல் பரவசம் ஏற்படுகிறது என்றார்.

மீண்டும் சமூக வலைதளங்களில் சமந்தா

April 22, 2020
சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா, கடந்த ஒரு மாத காலமாக ஆளவே காணாம். அவர் கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் வரவில்லை, கணவருடன் நேரத்தை செலவிடவே அவர் வரவில்லை என பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று திடீரென இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எனது நீண்ட தூக்கத்திலிருந்து திரும்ப வந்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களை கதி கலங்க வைக்கும் ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி

April 22, 2020
நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். நேற்றும் அதேப்போன்று புகைப்படத்தை பதிவிட்ட ராதிகா, ‘இந்த ஊரடங்கை நேசிக்கிறேன்,’ எனப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மீண்டும் வருகிறேன் – ஜெனிலியா

April 22, 2020
பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் நடிகை ஜெனிலியா. அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை ஜெனிலியாவுக்கு அமித், தீரஜ் என இரண்டு மகன்கள் உள்ளனர். எனக்கு நடிக்கும் ஆசையும், ஆர்வமும் எப்போதும் குறைந்ததில்லை. கணவருக்காக சில காலம், பிள்ளைகளுக்காக சில காலம் செலவிட வேண்டி இருந்தது. விரைவில் மீண்டும் வருகிறேன். கொஞ்சம் காத்திருங்கள் என ஜெனிலியா கூறியிருக்கிறார்.

என்றும் விராத் கோலிதான்! வர்ஷா பொல்லம்மா

April 22, 2020
நடிகை வர்ஷா பொல்லம்மா தனக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்பதை, தன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்த பதிவில், ”பள்ளிப் பருவத்தில் இருந்து இன்று வரை தனக்கு மிகவும் பிடித்த மனிதர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்,” என, குறிப்பிட்டுள்ளார்.

ஒரேகான் கடற்கரையில் ரிச்சாகங்கோபத்பாய்

April 22, 2020
தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்த நடிகை ரிச்சா கங்கோபத்யாய். திருமணத்துக்கு பின் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமீபத்தில் தான் சென்று வந்த இடம் குறித்து, இணையத்தில் பதிவிட்டுள்ள அவர், ”நானும் என் கணவர் ஜோவும், பிரபலமான ஒரேகான் கடற்கரை பகுதிக்கு சென்று வந்தோம்,” என, பதிவிட்டுள்ளார்.

சமாதானமும் சாந்தமும் நிலவ வெள்ளை ஆடை – இலியானா

April 22, 2020
நடிகை இலியானா வெள்ளை நிற கவர்ச்சி ஆடையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, ”வெள்ளை என்பது சமாதானத்தை குறிக்கும் நிறம். உலகில் சாந்தமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதற்காகவே இந்த வெள்ளை ஆடை,” என்றார்.

ஆன்லைன் கோர்ஸ் படித்து வரும் நித்தி அகர்வால்

April 21, 2020
பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நித்தி அகர்வால். படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. கொரோனா ஊரடங்கால் பலரும் சமூக வலைதளத்திலேயே நேரத்தை செலவிட, நித்தியோ பயனுள்ளதாக ஆக்கி கொண்டுள்ளார். நியூயார்க் அகாடமி ஒன்றில் நடிப்பு, இயக்கம் தொடர்பான ஆன்லைன் கோர்ஸில் சேர்ந்துள்ளார். ஏற்கனவே இங்கு இரண்டு கோர்ஸ் படித்துள்ள இவர், மூன்றாவாது இப்போது கதை மற்றும் இயக்கம் தொடர்பான படிப்பை கற்று வருகிறார்.

கிராமத்து பெண்ணான ராஷ்மிகா மந்தனா

April 21, 2020
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் — ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம், புஷ்பா. இது குறித்து, ராஷ்மிகா கூறும்போது, ”இப்படத்தில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். ஆகவே, கிராமத்து படங்களைப் பார்த்து, அதில் நாயகியர் நடிப்பை கவனித்து, பயிற்சி எடுத்து வருகிறேன்,” என்றார்.

வருத்தம் தெரிவித்த த்ரிஷா

April 21, 2020
வீட்டில் நடனமாடும் வீடியோவை, தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு உள்ளார், த்ரிஷா. மேலும், ‘கேமரா முன் ஆட முடியாமல் இருப்பது வருத்தமாகத் தான் இருக்கிறது’ என, பதிவிட்டு உள்ளார்.

நீர்ப்பறவையான இஷா குப்தா

April 21, 2020
பாலிவுட் நடிகை இஷா குப்தா ஊரடங்கு காலத்தில், தற்போது நீச்சல் குளத்திலேயே பொழுதைப் போக்குவதாக தெரிவித்து உள்ளார். நீச்சல் குளத்தில் நிற்கும் படத்தை வெளியிட்டுள்ள அவர், ‘நீர்ப்பறவை’ என, கவிநயமாக, ‘கேப்சன்’ கொடுத்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை

April 21, 2020
கடந்த 2013ம் ஆண்டு சைந்தவியை, ஜிவி பிரகாஷ் திருமணம் முடித்தார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சைந்தவி நேற்று(ஏப்.,19) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஜிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தந்தையான ஜிவி.,க்கும், சைந்தவிக்கு திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அம்மா உணவகத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் உதவி

April 21, 2020
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பெரும்பாலான உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துளளார். இதற்கான காசோலையை நேற்று சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகை தமன்னாவின் செயலால் பெப்சி தொழிலாளர்கள் அதிருப்தி

April 21, 2020
ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. ஆனால் நடிகை தமன்னா தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். தமிழ் சினிமா தொழிலாளர்கள் சங்கத்துக்கு நிதி அளிக்கவில்லை. இது ‘பெப்சி’ தொழிற்சங்கத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்று நடிகை காஜல் அகர்வாலும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் ரத்ததானம்

April 21, 2020
கொரோனா ஊரடங்கால் மற்ற நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் ரத்ததானம் செய்துள்ளார்.

அண்ணாத்த படத்தில் நான் வில்லனா..? விளக்கமளித்தார் கோபிசந்த்

April 20, 2020
சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி சிவா, இயக்குனராக அறிமுகமான படம் கோபிசந்த் நாயகனாக நடித்த ‘சௌரியம்’. அதன்பிறகு சிறுத்தை, அஜித் நடித்த படங்களை இயக்கினார் சிவா. கோபிசந்த வில்லனாக நடிப்பது குறித்து கூறுகையில். எனக்காக ஒரு படத்தை இயக்கித் தருவதாகச் சொன்னார் சிவா. தமிழில் அவர் பிஸியாக இருப்பதால் நான்தான் அதன் பிறகு நடிக்க மறுத்துவிட்டேன். மற்றபடி ‘அண்ணாத்த’ படத்தில் வில்லனாக நடியுங்கள் என்றெல்லாம் அவர் கேட்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

குழப்பத்தில் இருந்த தமன்னா

April 20, 2020
நடிகை தமன்னா தான் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இதுபோன்றதொரு அருமையான வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. எனவே இந்த நேரத்தை பயனுள்ள விஷயங்களில் செலவிடு என மனசு சொல்கிறது. எனவே நன்றாக தூங்கி ஓய்வெடு எனவும் தோன்றுகிறது. இப்படி தான் எனது ஊரடங்கு வாழ்க்கை இருக்கிறது”, என தான் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார் தமன்னா.

சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ?

April 20, 2020
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, 2012ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம், மற்றும் ‘தெகிடி, மாயவன்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களுக்கான கதையும் தயாராகி கடைசி கட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. விரைவில் இந்த மூன்று படங்களின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்களாம்.

மோகன்தாஸ் குறித்து விஷ்ணுவிஷால் விளக்கம்

April 20, 2020
முரளி கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிக்கும், மோகன்தாஸ் படத்தின், ‘டீசர்’ சமீபத்தில் வெளியானது. அதில், அதீத வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், இப்படத்துக்கு, மோகன்தாஸ் என, மஹாத்மா காந்தியின் இயற்பெயரை வைத்தது தவறு என்றும், சர்ச்சை கிளம்பியுள்ளது.இது குறித்து, முரளி கார்த்திக் கூறும்போது, ”மஹாத்மாவை, நாம் காந்தி என்று தான் அறிவோம். மோகன்தாஸ் என்பது பொதுவான பெயர். ஆகவே, காந்தியை நாங்கள் குறிப்பிட்டதாக நினைப்பது தவறு,” என்றார்.

பைக்கில் லாங் டிரைவ் சென்ற அஜித் குமார்

April 20, 2020
வலிமை படத்தின் படப்பிடிப்பில் பைக் சேசிங் காட்சிக்காக சூப்பர் பைக் ஒன்று வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த பைக் அஜித்துக்கு மிகவும் பிடித்துபோய்விட்டதால் படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் அனைவரும் விமானத்தில் சென்னை புறப்பட, அஜித் தனது விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, ஐதராபாத்தில் இருந்து பைக்கிலேயே சென்னை திரும்பி இருக்கிறார். 650 கிலோ மீட்டர் பயணத்தில் பெட்ரோல் போடுவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே வண்டியை நிறுத்தினாராம் அஜித். இந்த தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகர் பிரையன் டென்னஹி மரணமடைந்தார்! ரசிகர்கள் சோகம்

April 18, 2020
ராம்போ பர்ஸ்ட் ப்ளட், டாம்மி பாய், டூ கேட்ச் எ கில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரையன் டென்னஹி. 81 வயதான அவர் வயது மூப்பு காரணமாக நியூ ஹேவன் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். 1982 ஆம் ஆண்டு சில்வஸ்டர் ஸ்டோலன் நடிப்பில் வெளியான ‘ராம்போ: பர்ஸ்ட் ப்ளட்’ படம் திருப்புமுனையாக அமைந்தது.

கோப்ராவிற்காக தொடர்ந்து 18 மணிநேரம் சண்டை போட்ட விக்ரம்

April 18, 2020
நடிகர் விக்ரம் தற்போது நடித்து வருகிற படம் கோப்ரா. இதனை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது. விக்ரம் பிறந்த நாள் இதை முன்னிட்டு கோப்ரா படத்தில் விக்ரம் நடித்த சண்டைக்காட்சி குறித்து இயக்குநர் தெரிவித்தார். அதில் 18 மணிநேரமாக ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கினோம். ரொம்பவே ரிஸ்க் எடுத்து அதில் விக்ரம் நடித்தார்.

பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் கொரோனா வைரஸினால் பலி

April 18, 2020
உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் ஈடி. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆலன் டாவ்யூ. 77 வயதான ஆலனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோன தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்னை பலன் இன்றி இறந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் சினிமா கலைஞர்களுக்கு இலவசமாக உணவளித்து வரும் நடிகர் விக்னேஷ்

April 18, 2020
சென்னை ஈக்காட்டு தாங்கலில் ஆர்.ஆர் பிரியாணி என்ற ஓட்டலையும் நடிகர் விக்னேஷ் நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் சென்னையில் மாட்டிக் கொண்ட வெளியூரைச் சேர்ந்த உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், துணை நடிகர்கள் உணவு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்கள். இவர்களுக்கு உணவளிக்க முன்வந்துள்ளார். தனது ஓட்டலில் இரவு 7 மணிமுதல், 9 மணி வரை சினிமா கலைஞர்கள் தங்களின் அடையாள அட்டையை காட்டிவிட்டு இலவசமாக உணவருந்தி செல்லலாம் என வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

தினமும் 150 பேருக்கு உணவளித்து வரும் ராகினி திவேதி

April 18, 2020
பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி. தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார். பெங்களூரில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் தினமும் 150 பேருக்கு தன் கையால் சமையல் செய்து அந்த பகுதியில் கொரோனா வைரசுடன் போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவமனை தேடிச் சென்று வழங்கி வருகிறார்.

சினிமா, சாப்பாடு, பிட்னஸ் தான் எனக்கு பிடிக்கும் – ரகுல் ப்ரீத்தி சிங்

April 18, 2020
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஐதராபாத்தில் மூன்று பிட்னஸ் சென்டர்களை ஆரம்பித்துவிட்டார். அதை இன்னும் மற்ற ஊர்களுக்கும் விரிவுபடுத்த உள்ளாராம். அடுத்து, ஐதராபாத்தில் விரைவில் ஒரு ரெஸ்டாரென்ட் ஆரம்பிக்கப் போகிறாராம். சினிமா, சாப்பாடு, பிட்னஸ் ஆகியவைதான் தனக்குப் பிடித்தவை என்கிறார் ரகுல்.

மீண்டும் சர்ச்சையில் மீரா மிதுன்

April 18, 2020
நடிகை மீரா மிதுன் 2016ல், ‘பெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா’ போட்டியில் அழகிப் பட்டம் வென்றார். ஆனால் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அவர் பங்கேற்றதாக புகார் எழவே, அழகி பட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் தன் வலைதள பக்கத்தில் தன்னை ‘மிஸ் சவுத் இந்தியா’ எனக் குறிப்பிட்டுள்ளார். ‘திரும்பப் பெறப்பட்ட பட்டத்தை எப்படி மீரா மிதுன் பயன்படுத்தலாம்?’ என சிலர் சர்ச்சை கிளப்பி உள்ளனர்.

எதையும் வித்தியாசமாக செய்வது என் பழக்கம் – தமன்னா

April 18, 2020
வாளி ஒன்றில் பழங்களை நிரப்பி, அதைத் துாக்கி தமன்னா உடற்பயிற்சி செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து தமன்னா கூறும்போது, ”எதையும் வித்தியாசமாக செய்வது என் வழக்கம்,” என்றார்.

ஹீரோவானார் அன்பு

April 17, 2020
கைதி, மாஸ்டர் உட்பட ஓரிரு படங்களில் வில்லனாக நடித்து வரும் நடிகர் அன்பு, ஹீரோவாக அறிமுகமாகும் படம் அந்தகாரம். இயக்குனர் அட்லி தயாரிக்கும் படத்தில் சைக்கோ கொலையாளியிடமிருந்து மனைவியை காப்பாற்றும் கணவராக நடிக்கிறார்.

கொரோனா அச்சத்தில் அமெரிக்காவில் பரிதவிக்கும் சம்விருதா குடும்பம்

April 17, 2020
பிரபல மலையாள நடிகை சம்விருதா சுனில் கொரோனா வைரஸ் அச்சத்தில் அமெரிக்காவில் குடும்பத்தினருடன் பரிதவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கு நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு ஒரு மாதத்திற்கு மேலாக தவிப்புடன் வாழ்ந்து வருகிறோம். நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.

இடையழகை காட்டி மயக்கும் மாளவிகா மோகனன்

April 17, 2020
சமூக வலைத்தளங்களில் செம பிஸியாக இருப்பவர் ‘மாஸ்டர்’ பட நாயகி மாளவிகா மோகனன். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் தளங்களில் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களைப் பதிவிட்டு தன் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார். தற்போது இடுப்பு தெரியும் படி ஒரு போட்டோவை பதிவிட்டு ‘Saree is a Mood’ என அதற்கு கமென்ட் பதிவிட்டுள்ளார். இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் கொடுத்து வருகின்றனர்.

இதுதான் சரியான நேரம்! ப்ரியா பவானி சங்கர்

April 17, 2020
நடிகை பிரியா பவானி சங்கர் வீட்டில் வீடியோ கேம் விளையாடி வருவதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ”வீடியோ கேம் விளையாட இதுவரை நேரம் கிடைக்கவில்லை. தற்போது, ஊரடங்கை பயன்படுத்தி, ஜாலியாக வீடியோ கேம் விளையாடுகிறேன்,” என்றார்.

தாய்மார்களுக்கு நடிகை எமி ஜாக்சன் அறிவுரை

April 17, 2020
நடிகை ஏமி ஜாக்சனுக்கு சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. தற்போது, தன் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ள எமி, ‘பெரும்பாலான பெண்கள், குழந்தை பெற்ற பின், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை; அது தவறு. தாய்மார்கள் அனைவரும் என்னைப்போல உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என அறிவுரை கூறியுள்ளார்.

படுக்கையில் படுத்தபடி அனுஷ்கா

April 17, 2020
நடிகை அனுஷ்கா படுக்கையில் படுத்தபடி போஸ் கொடுத்த தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அனைவரும் இப்படி வீட்டிலேயே இருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹரிஸ்-ஐ திருமணம் செய்து கொள்வேன்! ரைசா

April 16, 2020
பிக்பாஸ் புகழ் ரைசா ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளிக்கக் கூடியவர். அந்தவகையில் ரசிகர் ஒருவர், ‘ஹரீஷ் அண்ணாவும் நீங்களும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ரைசா, “ஆமாம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். ஆனால் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். அவருக்கு இது சர்ப்பிரைஸ்” என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

ஊரடங்கு காலத்திலும் இசைப் பணியை தொடரும் ஜு.வி.பிரகாஷ்

April 16, 2020
கொரோனா தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவிட்டுள்ள இந்த நேரத்திலும், தனது இசையமைப்பு வேலைகளை, ஜி.வி.பிரகாஷ் தொடர்கிறார். இது குறித்து, அவர் கூறும்போது, ”வெற்றிமாறன் இயக்கும், வாடிவாசல் படத்தின் இசை பணிகளை, வீட்டில் இருந்தே செய்து வருகிறேன், என்றார்.

என் புகைப்படத்தை வெளியிடாதீர்! கமல் வேண்டுகோள்

April 16, 2020
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் மூலம் தமிழநாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறார். பல இடங்களில் கமல்ஹாசனின் படம் பொறித்த பைகளில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் நீங்கள் வழங்கும் உணவுப் பொருட்களின் மேல் கட்சி சின்னத்தையோ அல்லது என் படத்தையோ ஒட்ட வேண்டாம் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் கேட்டுக் கொண்டார்.

தாமதமான நீதியும் அநீதியே!

April 16, 2020
ஜோதிகா, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் பொன் மகள் வந்தாள். இப்படத்தின் முதல் காட்சி, ஏற்கனவே வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இரண்டாவது பார்வை போஸ்டர், தற்போது வெளியாகி உள்ளது. நாட்டையே உலுக்கிய முக்கியமான வழக்கு ஒன்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது என, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்குகிறார்.

ஊரடங்கு காலத்திலும் புதிய படத்திற்கு பூஜை

April 16, 2020
கொரோனா பரவல் காரணமாக 2ம்கட்ட நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாஸ்மின் படத்தை தயாரித்து, இயக்கிய ஜெகன் சாய், ஊரடங்கு காலத்திலும், புதிய படத்துக்கு பூஜை போட்டிருக்கிறார். இது குறித்து, அவர் கூறும்போது, ”தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். ஊரடங்கு காலம் என்பதால், மிக எளிமையாக பூஜை நடத்தினேன்,” என்றார்.

முக்கியத்துவமான படங்களில் ரம்யா பாண்டியன்

April 16, 2020
ஜோக்கர் படம் வாயிலாக பிரபலமடைந்த நடிகை ரம்யா பாண்டியன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வந்தார். இந்நிலையில் 2டி நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும், திருக்குமரன் என்டர்பிரைசஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்து, ரம்யா கூறும்போது, ”இரண்டுமே, நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள்,” என்றார்.

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் உதவி – ராகவா லாரன்ஸ்

April 15, 2020
நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில். நம் வீட்டு குப்பைகளை முகம் சுழிக்காமல் தினமும் எடுத்துச் செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு நான் உதவி செய்ய விரும்புகிறேன். அதன்படி நீங்கள் எனக்கு கொடுக்கும் சம்பளத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயை தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுங்கள்” என தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனிடம் தெரிவித்ததாக கூறினார்.

ரசிகர்களுக்கு பதில் அளிக்கப் போகிறார் மணிரத்னம்

April 15, 2020
பெரும்பாலும் இயக்குனர் மணிரத்னம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை விட்டு ஒதுங்கியே இருப்பார். ஆனால் தற்போது, சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் போகிறார். இது குறித்து அவரது மனைவியும் நடிகையுமான சுஹாசினி, ”ரசிகர்கள் தங்கள் கேள்வியை 25 வினாடிகளுக்குள் வரும்படியாக வீடியோ எடுத்து, 90946 77777 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

உலக மக்களுக்காக வேண்டிக் கொள்ளும் ராய் லட்சுமி

April 15, 2020
நடிகை ராய் லட்சுமி தன் வலைதள பக்கத்தில், விநாயக கடவுளை வணங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர், ”சில நாட்களுக்கு முன், சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வணங்கினேன். உலகில் உள்ள அனைவரும், நலமுடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன்,” என்றார்.

வீட்டிலேயே விளையாடலாம் ஸ்ருதி ஹாசன்

April 15, 2020
நடிகை ஸ்ருதி ஹாசன் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், ‘ஹூலா ஹூப்’ விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது இடுப்பில் வளையத்தை வைத்து சுற்றும் விளையாட்டு. இது குறித்து ஸ்ருதி கூறும்போது, ”இதை, அனைவரும் வீட்டிலேயே விளையாடலாம்,” என்றார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் யோகி பாபு

April 15, 2020
கொரோனா ஊரடங்கு காலத்திலும், புதுப்பட பேச்சுகள் அடிபடுகின்றன. சந்தானம் நடித்த, டகால்ட்டி படத்தை தயாரித்த, ’18 ரீல்ஸ்’ நிறுவனர் எஸ்.பி.சவுத்ரி. இவர், யோகிபாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை யோகிபாபுவே எழுதுகிறார். வட சென்னையைச் சேர்ந்த ஏழை இளைஞன், எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற்று தொழிலதிபர் ஆகிறான் என்பது தான் கதையாம்.

விருப்பத்தை வெளிப்படுத்திய சாய் பல்லவி

April 15, 2020
நடிகை சாய் பல்லவி தனது விருப்பம் ஒன்றை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”குளக்கரையில் அமர்ந்து தண்ணீரில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை,” என, ஏக்கத்துடன் தெரிவித்தார்.

தனது நிர்வாண புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை மீரா மிதுன்

April 14, 2020
சமீபத்தில் தனது நிர்வாணப் புகைப்படத்தை தானே வெளியிட்டு அதைப்பற்றி பேசியுள்ளார் நடிகை மீரா மிதுன். அதில், “எனக்கிருக்கும் தைரியம் வேறு நடிகைகள் யாருக்கும் இல்லை. இது போன்று அவர்களுக்கு நடைபெறும் போது, பயந்து போய் அமைதியாக இருந்து விடுகின்றனர். ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன். என்னைப் பார்த்து மேலும் பல பெண்கள் இது போன்ற விவகாரத்தில் வெளியே வர வேண்டும். அதற்காகத்தான் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டேன்” என மீரா தெரிவித்தார்.

நான் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன் – ஸ்ரத்தா ஸ்ரீநாத்

April 14, 2020
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு தினமும் கொரோனா கனவு வந்து படாய் படுத்துகிறதாம். இதுகுறித்து கூறுகையில், “தினமும் இரவு நான் வீட்டைவிட்டு வெளியே செல்வது போல் கனவு வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்திற்கு செல்கிறேன். ஆனால் இது கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பா அல்லது பின்னரா என்பது பற்றி நிச்சயமாக என்னால் சொல்ல முடியவில்லை. நான் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன். பாதுகாப்பின்மையால் பயம் கொள்கிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சத்தில் மகனை எண்ணி நடிகர் விஜய்

April 14, 2020
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள திரைப்பட கல்லூரியில் பிலிம் மேக்கிங் படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் அவர் நாடு திரும்ப முடியாத சூழல். இதனால் மகனை எண்ணி மிகுந்த கவலையில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.

மதுக்கடைகள் திறக்க வேண்டும் – ராம் கோபால் வர்மா வேண்டுகோள்

April 14, 2020
மதுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், மது கிடைக்காததால் ஏற்படும் பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளார். மேலும், மதுக்கடைகளை திறக்கும்படி, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஆபாச படம் பற்றி சொல்லாதது நான் செய்த தவறு! அனுபமா பரமேஷ்வரன்

April 14, 2020
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனின் சமூக வலைதள பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டு அதில், ‘மார்பிங்’ செய்யப்பட்ட ஆபாச படங்கள் வெளியாகின. இதையடுத்து, அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இது குறித்து அனுபமா கூறும்போது, “சில ஆண்டுகளுக்கு முன்பே இப்படி நடந்தது. அப்போதே புகார் அளிக்காதது தான், நான் செய்த தவறு,” என்றார்.

எப்படி வெளியானது? ஆலியா பட்

April 14, 2020
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர்., மற்றும் ஆலியா பட் நடிக்கும் தெலுங்கு படம் ஆர்.ஆர்.ஆர்., இது தமிழில், ரத்தம் ரணம் என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தில் இருந்து ஆலியாபட் விலகியதாக தகவல் வெளியானதை அவர் மறுத்தார். இந்நிலையில் ராஜமவுலி, ”ஆலியா பட் விலகல் என, எப்படி தவறான தகவல் வெளியானது என்பது தெரியவில்லை. இப்படத்தில், நாயகர்களுக்கு நிகரான அதிரடி வேடத்தில் அவர் நடிக்கிறார்,” என்றார்.

மனம் அதே நினைப்பில் உள்ளது – ஹன்சிகா

April 14, 2020
நடிகை ஹன்சிகா தனது பிகினி போட்டோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில் வெகு நாட்களாக கடலுக்கு போகவில்லை. மனம் அதே நினைப்பாக தான் இருக்கிறது, என குறிப்பிட்டுள்ளார். இவர் நடிப்பில் தயாரான மஹா படம் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மளிகை பொருள் வழங்கிய விஷால்

April 14, 2020
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் 1500 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை நடிகர் விஷால் வாங்கி கொடுத்துள்ளார். இதுதவிர 300 திருநங்கைகளுக்கும் ஒரு மாத மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்துள்ளார். இதேபோல வெளியூர்களில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்கள், நாடக நடிகர்களுக்கு ஒரு மாத மளிகை சாமான்களும் வாங்க ஏற்பாடு செய்து வருகிறார். இதனை நடிகர் ஸ்ரீமன், தினேஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

மாளவிகா மோகனுக்கு மச்ச சாஸ்திரம் என்ன சொல்கிறது?

April 14, 2020
நடிகை மாளவிகா மோகனன், தன் இடுப்பு தெரியும்படியாக சேலை கட்டிய புகைப்படம் ஒன்றை, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதை ரசிகர்கள் சிலர், அந்தப் படத்தை ஜூம் செய்து, மாளவிகாவின் இடுப்பில் மச்சம் இருக்கிறது. இப்படி இருந்தால் நேர்மையாளராக இருப்பார் என்பது மச்ச சாஸ்திரம்’ என, பதிவிட்டுள்ளனர்.

நடிகர் சங்கத்தின் பெயரையோ அதிகாரியின் பெயரை பயன்படுத்தக் கூடாது

April 14, 2020
ஊரடங்கு உத்தரவால் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தற்போது சிலர் நிதி திரட்டி அதனை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இதுபோன்ற விஷயத்தில் நடிகர் சங்கத்தின் பெயரையோ, தனி அதிகாரியின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேண்டசி வகையான திகில் நிறைந்த படம் அந்தகாரம்

April 14, 2020
இயக்குநர் அட்லி பிகிலுக்கு பிறகு தனது சொந்த படத்தை தயாரித்து முடித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுசி சித்தார்த் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அந்தகாரம் என பெயரிடப்பட்டுள்ளது. “அந்தகாரம் என்பது புதையல்கள் நிறைந்த ஒரு இடம். அந்த இடத்தை சாத்தான்களும், பிசாசுகளும் பாதுகாக்கிறது” என்று குறிப்பிடுகிறது பைபிள். அந்த வகையில் அந்தகாரம் ஒரு புதையலை தேடிச் செல்லும் பேண்டசி வகை திகில் படம் என்று தெரியவருகிறது.

எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது மனோஜ்! உண்மை விபரம் வெளியீடு

April 13, 2020
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எந்திரன். தமிழில் எடுக்கப்பட்ட ரோபோட்டிக் கதை. வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும், சிட்டி என்ற ரோபோவாகவும் ரஜினி நடித்திருந்தார். இதில் வசீகரன், சிட்டி இருவரும் வரும் காட்சிகளில் பாடி டபுள் என்கிற வகையிலான டூப் போட்டு நடித்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் கே.பாரதி. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த செய்தியையும் அது தொடர்பான வீடியோ மற்றும் படங்களையும் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் மனோஜ் பாரதி.

நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

April 13, 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்களோ, தனிப்பட்ட அமைப்புகளோ நேரடியாக உதவி செய்ய தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதனை நீக்க வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடவுளின் பெயரில் வியாபாரம் கேவலம் – ராஜ்கிரண்

April 10, 2020
நடிகர் ராஜ்கிரண், தனது முகநுால் பக்கத்தில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். அதன் பின்னுாட்டத்தில், ‘கடவுள் மறுப்பாளர்களை விட, கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோரின் செயல்கள் தான், மிகவும் கேவலமாக உள்ளன’ என, குறிப்பிட்டுள்ளார்.

யோகி பாபு மீது கடுங்கோபத்தில் ராஷ்மி

April 10, 2020
முருகன் இயக்கத்தில், யோகிபாபு, ராஷ்மி கோபிநாத் உள்ளிட்டோர் நடிக்கும் படம் காக்டெய்ல். இது குறித்து, ராஷ்மி கூறும்போது, ”அழ வேண்டிய காட்சிகளில் கூட, யோகிபாபு நகைச்சுவையாக பேசி சிரிக்க வைக்கிறார். இதனால், அவர் மீது கடும் கோபத்தில் உள்ளேன்,” என்றார்.

அஜித் மிகவும் நல்லவர் – நடிகை கிரண்

April 10, 2020
நடிகர் அஜித், மத்திய மாநில அரசுக்கு ரூ.1 கோடி நிதியாக அளித்துள்ளார். இந்நிலையில் நடிகை கிரண், அஜித் மிகவும் நல்லவர் என டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

உலகின் முதல் மொழி மைம் மொழி -கோபி

April 10, 2020
உலகின் முதல் மொழி என்றால், அது, ‘மைம்’ மொழி தான். சைகை மற்றும் செய்கை மூலம் மட்டுமே பரிமாறப்படும் மவுன மொழி அல்லது வித்தியாசமான கலை என்று, இதை சொல்லலாம். மைம் மூலமாக நிறைய நல்ல விஷயங்கள் செய்யலாம் என நடிகர் மைம் கோபி தெரிவித்தார். கலையை வளர்க்க சிறிய ஸ்டூடியோ துவங்கினேன். 24 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, தற்போது நிறைய பேரை வளர்த்து விட்டிருக்கேன்; இன்னமும் வளர்ந்துட்டு இருக்காங்க என்றார்.

பூனைக்குட்டியுடன் காலத்தை தள்ளும் ஸ்ருதி ஹாசன்

April 10, 2020
ஊரடங்கால் சினி பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தினமும், நடனம், பாட்டு என, ‘பிசி’யாக இருந்து வந்த ஸ்ருதி ஹாசன், போரடிக்காமல் இருப்பதற்காக, வீட்டுக்குள்ளேயே சத்தமாக பாடுவது, நடனமாடுவது என, உற்சாகமாக காணப்படுகிறார். அதுவும் போரடித்து விட்டால், தான் செல்லமாக வளர்க்கும் பூனைக் குட்டியோடு நேரம், காலம் தெரியாமல் விளையாடி மகிழ்ந்து வருகிறார்.

நியூஜெர்சியின் சூழல் பயமுறுத்துகிறது – நடிகை அங்கிதா

April 10, 2020
இந்தியாவில் கொரோனா தாக்கம் பெரிய அளவில் பரவ விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கு முன்பே கொரோனாவின் பிடியில் சிக்கிய பல நாடுகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தற்போது நிலவும் சூழல் பயமுறுத்துவதாக நடிகை அங்கிதா அச்சம் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் தொடரும் கொரோனா பலி

April 10, 2020
கொரோனா வைரசுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர், நடிகைகள் தொடர்ந்து பலியாகி வருவது உலகையே அச்சுறுத்தி வருகிறது. 80 வயதான ஹாலிவுட் நடிகர் ஆலன் கார்பீல்ட் மரணம் அடைந்தார். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் , சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காமெடி நடிகர் யோகி பாபு துணை நடிகர்களுக்கு 1250கி அரிசி வழங்கினார்

April 10, 2020
முன்னணி நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் பெப்சி அமைப்புக்கு மட்டுமே நிதி வழங்கி வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எதுவும் செய்வதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி தடைபட்ட நிலையிலும் துணை நடிகர், நடிகைகளுக்கு உதவும் விதமாக தன் சார்பில் 1250 கிலோ அரிசியை சம்பந்தப்பட்ட துணை நடிகர்களுக்கு நேரடியாக வழங்கினார்.

கொரோனா! டாக்டர்களின் பயன்பாட்டிற்கு 6 மாடி ஓட்டலை வழங்கிய சோனுசூட்

April 10, 2020
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு கல்யாண மண்டபம், ஓட்டல்கள் சொந்தமாக இருக்கிறது. இது தங்கள் சொத்து என்பதைகூட அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை. இந்த நிலையில் ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கும் சோனுசூட் மும்பையில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களின் பயன்பாட்டுக்கு வழங்கி இருக்கிறார்.

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை மரணம்

April 9, 2020
1964ம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் படமான கோல்ட் பிங்கர் படத்தில் நடித்தவர் ஹானர் பிளாக்மேன். இந்திய ரசிகர்களுக்கும் கனவு கன்னியாக திகழ்ந்தவர். 94 வயதான ஹானர் பிளாக்மேன் லண்டன் அருகில் உள்ள லெவிஸ் நகரில் குடும்பத்தினருடன் வசித்த வந்தார். முதுமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காததால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் முன்னணியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸினால் மீண்டும் ஹாலிவுட் நடிகர் பலி

April 9, 2020
ஹாலிவுட் நடிகர் 68 வயதான ஜாய் பெனடிக், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார்.

டாஸ்க் கொடுக்கும் பார்த்திபன்

April 9, 2020
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், தன் முகநுால் பக்கத்தில், மூன்று படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ”மூன்றையும் இணைத்தால் ஒரு வார்த்தை வரும். அதை கண்டுபிடியுங்கள்,” என, தெரிவித்துள்ளார். இது குறித்து, கூறும் அவர், ”தற்போதைய ஓய்வு நேரத்தில், மக்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்க நினைத்தேன். அதன் விளைவு தான் இந்த பதிவு,” என்றார்.

லாரி ஓட்டுநராக அல்லு அர்ஜுன்

April 9, 2020
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் — ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம், புஷ்பா. தன் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் அல்லு அர்ஜுன், நேற்று இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டார். இது குறித்து, அவர் கூறும்போது, ”இப்படத்தில், லாரி ஓட்டுனராக நடிக்கிறேன். இதற்காக, நீண்ட முடி மற்றும் தாடி வளர்த்துள்ளேன்,” என்றார்.

செல்பி தான் எனக்கு டைம் பாஸ்! தெலுங்கு நடிகை

April 9, 2020
‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த சந்திரிகா ரவி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் வெளியிட்டுள்ள, ‘செல்பி’ புகைப்படம், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து சந்திரிகா கூறுகையில், ”வீட்டிலேயே இருப்பதால், செல்பி எடுத்து வெளியிடுவது தான், தற்போது எனக்கு, ‘டைம்பாஸ்’ ஆக இருக்கிறது,” என்றார்.

காதலிக்க நேரமில்லை படம் குறித்து கோமாளி பட இயக்குநர் புதிய அப்டேட்

April 9, 2020
‘கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், ரைசா வில்சன் நடிக்கும் படம், காதலிக்க யாருமில்லை. இப்படம் குறித்து, கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஒரு, ‘அப்டேட்’ தகவலை வெளியிட்டுள்ளார். அவர், ”கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவான, ஹைவே காதலி என்ற குறும்படத்தில், நான் நாயகனாக நடித்தேன். அப்படம் தான், தற்போது காதலிக்க யாருமில்லை படமாக உருவாகிறது,” என, தெரிவித்துள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத்தை நிகழ்ச்சியை காப்பியடிக்கும் அனிருத்

April 9, 2020
இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இரு தினங்களுக்கு முன்பு யுடியூபில் லைவ்வாக இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினார். இசைக்கருவிகளுடன் தெலுங்குப் பாடல்கள், தமிழ்ப் பாடல்கள் என 50 நிமிடங்கள் இசை நிகழ்ச்சி நடத்தினார். அதனை ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள். தேவிஸ்ரீபிரசாத் செய்தது போலவே இசையமைப்பாளர் அனிருத் நேற்று யு டியூப் லைவ் நிகழ்ச்சியை நடத்தினார். ஆனால், அனிருத் இரண்டரை மணி நேரம் வரை நடத்தி பல பாடல்களைப் பாடினார்.

மது கிடைகாத்தால் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி

April 9, 2020
மது கிடைகாத்தால் நடிகை மனோரமாவின் மகன் அதிக அளவில் தூக்கமாத்திரை சாப்பிட்டு அப்போலா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

பொழுதை பயனுள்ளதாக கழிக்கும் சாக்ஷி

April 8, 2020
நடிகை சாக் ஷி அகர்வால், ஊரடங்கு உத்தரவான நேரத்தில், வீட்டில் இருப்பது எனக்கு அலுப்பாகவே தெரியவில்லை,” என்றார். மேலும் ”நிறைய புத்தகங்கள் படிப்பதால் பொழுது பயனுள்ளதாக கழிகிறது. இப்போது கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி, அனைவரும் படியுங்கள்,” என்றார்.

டல்கோனா காபி செய்முறை – ஐஸ்வர்யா ராஜேஷ்

April 8, 2020
வீட்டிலேயே இருப்பதால் விதவிதமாக சமைத்துப் பார்ப்பதாக கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘டல்கோனா காபி’ செய்யும் முறையை, தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், ‘அரை ஸ்பூன் காபி பவுடருடன், மூன்று ஸ்பூன் சர்க்கரை கலந்து, இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். அந்த கலவையை குளிர்ந்த பாலில் ஊற்ற வேண்டும். அதன் மீது, சிறிது லவங்கப்பட்டை துாள் சேர்த்து அருந்துங்கள். சுவை அருமையாக இருக்கும்’ என, குறிப்பிட்டுஉள்ளார்.

ஆண்ட்ரியாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

April 8, 2020
நடிகை ஆண்ட்ரியா தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘இந்த கொரோனா ஊடரங்கு குறித்து, பிற்காலத்தில் நம் பேரப்பிள்ளைகளிடம் சொன்னால், ஆர்வத்துடன் கேட்பர்’ என, பதிவிட்டுள்ளார். அதற்கு பலர், ‘கருத்து சரிதான்! இதற்கு எதற்காக உள்ளாடை தெரியும்படி புகைப்படத்தை பதிவிட்டு உள்ளீர்கள்?’ என, நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ராஷ்மிகாவை நெகிழச் செய்த ரசிகர்

April 8, 2020
நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் தன் பிறந்தநாளை, எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினார். இது குறித்து, அவர் கூறும்போது, ”ஒரு ரசிகர், எனக்காக கோவிலில் பாலாபிஷேகம் செய்து, அதை வீடியோவாக அனுப்பி நெகிழ வைத்துவிட்டார்,” என்கிறார்.

மனதை தளரவிடாதீர்! மாளவிகா மோகனன்

April 7, 2020
நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா ஊரடங்கால் மனதை தளரவிடாதீர். குடும்பத்தினருடன் நேரத்தை கழிக்க, இது அருமையான தருணம். உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். மனம்விட்டு பேசுங்கள்’ என, ஆலோசனை கூறியுள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகும் சுசி கணேசன் படம்

April 7, 2020
தமிழில், தான் இயக்கிய திருட்டு பயலே படத்தை, ஹிந்தியில் எடுத்து வருகிறார் சுசி கணேசன். இந்நிலையில், ”என் அடுத்த படத்தில் பெரிய ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளார். இப்படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என, மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும்,” என, அறிவித்து உள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கீர்த்தி சுரேஷ்

April 7, 2020
மகாநடி தெலுங்கு படத்தில் நடித்ததற்காக, தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ். ”அதே போல, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் ஒன்றில் விரைவில் நடிக்க உள்ளேன்,” என, அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளாடையுடன் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட மீரா

April 7, 2020
நடிகை மீரா மிதுன் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் படுகவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல், நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

மீண்டும் முருகதாஸை வம்பு இழுக்கும் ஸ்ரீரெட்டி

April 7, 2020
சினிமா துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் இயக்குநர் முருகதாஸை வம்பு இழுத்துள்ளார். அதில் “முருகதாஸ் அங்கிள் பெண்களை திருடுவது போல சினிமா கதைகளையும் திருடுகிறார். இவர்கள் எல்லாம் சினிமாவில் ஜாம்பவான்களாம். தமிழ் சினிமாவை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது” என ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கனிகா கபூர்

April 7, 2020
நடிகை கனிகா கபூருக்கு ஏற்கனவே 5 முறை கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவருக்கு 6 வது முறையாக கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்ததில் இவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

சபதம் எடுக்கும் பூனம் பாஜ்வா

April 6, 2020
தமிழ் திரையுலகில், சேவல் படம் வாயிலாக அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா, தொடர்ந்து சிலபடங்களில் நடித்தார். பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. தற்போது கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, வீட்டிலேயே கடுமையான உடற்பயிற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ,”ஊரடங்கு நீக்கப்படுவதற்குள், 5 கிலோ எடை குறைக்கசபதம் எடுத்துள்ளேன், என்றார்.

ஆலோசனை சொன்ன ராஷி கண்ணா

April 6, 2020
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகை ராஷி கன்னா, ‘யோகா செய்யுங்கள்’ என ஆலோசனை கூறியுள்ளார். மேலும், ‘உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல… மன ஆரோக்கியத்துக்கும் யோகாசிறந்த வழி’ எனகுறிப்பிட்டுள்ளார்.

சமூக இடைவெளி விட்டு கொரோனாவை விரட்டுவோம் – தமன்னா

April 6, 2020
கொரோனா குறித்து தமன்னா பேசியிருப்பதாவது, கொரோனாவை எளிதாக விரட்ட முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே. இந்த நேரத்தில் நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அது தான் பாதுகாப்பானது. இந்த நோயிலிருந்து விடுபடுவதும் நம் கையில் தான் உள்ளது. அதற்கு அரசு உத்தரவுப்படி அடிக்கடி சோப்பு உபயோகித்து கைகளை கழுவ வேண்டும். விலகி நின்று ஒன்றிணைவோம். கொரோனாவை வெல்வோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தமன்னா கூறியுள்ளார்.

காதல் பிரிவுக்கு பிறகுதான் நிம்மதியாக இருக்கிறேன் – சானாகான்

April 6, 2020
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்கும் சானா கான், நடன இயக்குனர் மெல்வின் லுாயிஸ் என்பவரை காதலித்தார். இந்நிலையில் சமீபத்தில், தன் காதல் முறிந்துவிட்டதாக சானா கான் அறிவித்தார். தற்போது ‘காதல் முறிந்த பின்பு தான், நிம்மதியாக இருக்கிறேன்’ என தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமையல் செய்து பொழுதை போக்கும் பூஜா ஹெக்டே

April 6, 2020
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகை பூஜா ஹெக்டே, தன் நேரத்தை உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகைகளை செய்து பொழுதை கழிக்கிறார். அதோடு அவரே உணவும் சமைக்கிறார். இப்போது தானே கேரட் அல்வாவை கிண்டி, அதை நானே சாப்பிட இருக்கிறேன் என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

லாக்டவுனில் நிச்சயதார்தத்தை முடித்த சின்னத்திரை நடிகர் கதிர்

July 3, 2020
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்றான செம்பருத்தி.தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார் VJ கதிர். செம்பருத்தி தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவராக ஆனார். இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை என்று பதிவிட்ட கதிர்.கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரும் அழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை உருக்கம்

July 3, 2020
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமாவர் ஆத்மிகா. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கடந்த ஜூன் 26 ஆம் தேதி தனது அப்பா மரணமடைந்ததாக பதிவிட்டுள்ளார்.

லாக்டவுனில் நிச்சயதார்தத்தை முடித்த சின்னத்திரை நடிகர் கதிர்

July 3, 2020
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்றான செம்பருத்தி.தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார் VJ கதிர். செம்பருத்தி தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவராக ஆனார். இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை என்று பதிவிட்ட கதிர்.கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரும் அழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை உருக்கம்

July 3, 2020
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமாவர் ஆத்மிகா. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கடந்த ஜூன் 26 ஆம் தேதி தனது அப்பா மரணமடைந்ததாக பதிவிட்டுள்ளார்.

சைவத்திற்கு மாறிய சமந்தா

July 3, 2020
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், தொழில் முனைவோருமான ஸ்ரீதேவி ஜஸ்டியை பின்பற்றும் சமந்தா, ‘இன்ஸ்டாகிராமில்’ அவரை புகழ்ந்துள்ளார்.@உணவே உங்கள் மருந்தாகவும், மருந்தே உங்கள் உணவாகவும் இருக்க வேண்டும்’ என, கிரேக்க நாட்டு மருத்துவ அறிஞர் ஹிப்போகிரட்டீஸ் கூறியதை மேற்கோள்காட்டி, நடிகை சமந்தா கூறுகையில், ”நான் சமைப்பதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டேன் என நினைத்தேன். ஆனால், தற்போது தெய்வீக சுவை பற்றி அறிய ஆர்வம் காட்டுகிறேன். ”நாம் நன்றாக சாப்பிடுவதோடு, அவை, நம் ஆரோக்கியத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை […]

மீண்டும் பிஸியாகும் ரம்யா நம்பீசன்

July 3, 2020
ரம்யா நம்பீசனுக்கு நடிக்க மட்டுமல்ல, நன்றாக பாட்டு பாடவும் தெரியும். ஏற்கனவே, சில மலையாளம், தமிழ் திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே, பிரபலமான பாடல்களை பாடி, அதை, ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொழுது போக்கி வருகிறார். அவர் நடித்த சேதுபதி படத்தில் இடம் பெற்ற, ‘கொஞ்சி பேசிட வேணாம்… உன் கண்ணே பேசுதடி’ என்ற பாடலை பாடி, வீடியோவை பதிவிட்டுள்ளார். அதற்கு ஏராளமானோர், ரம்யாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

நானும் வெற்றி கொடியை பறக்கவிடுவேன் – பயல் ராஜ்புத்

July 3, 2020
ஏஞ்சல் படத்தின் மூலமாக, தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் பயல் ரஜ்புத். இவர், வட மாநிலத்தைச் சேர்ந்தவர். ஹிந்தி, ‘டிவி’ சீரியல்களில் பிரபலமான நடிகையான இவர், ஒரு சில ஹிந்தி திரைப்படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்தார். தற்போது உதயநிதி ஜோடியாக, ஏஞ்சல் படத்தில் நடித்து வருகிறார். ”ஏற்கனவே, சிம்ரன், ஜோதிகா போன்ற நடிகையர், வட மாநிலங்களில் இருந்து வந்து தான், கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டினர். அதே போன்ற ஒரு வாழ்க்கை எனக்கும் கண்டிப்பாக அமையும். கோடம்பாக்கத்தில் […]

இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பார்வதி

July 3, 2020
ஊரடங்கு எப்போது முடியும், தான் நடித்த, 83 ஹிந்தி படம் எப்போது வெளியாகும் என, ஆவலுடன் காத்திருக்கிறார் பார்வதி நாயர்.கடந்த, 1983ல், இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கவாஸ்கர் கேரக்டரின் மனைவ