சுசிலீக்ஸ் சுசித்ராவின் அடுத்த வீடியோ அவதாரம்!

பார்வையாளர்களின் விமர்சனம் சுசிலீக்ஸ் சுசித்ராவின் அடுத்த வீடியோ அவதாரம்! 0.00/5.00

செலிபிரிட்டிகளின் பார்ட்டி வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய சுசிலீக்சை முறியடிக்க சமையலை கையில் எடுத்திருப்பதாக முன்னணி பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில், நடிகர் தனுஷ், த்ரிஷா, டிடி, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சுசித்ரா, மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி, சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுசித்ரா கூறுகையில், என் டுவிட்டர் அக்கவுண்டில் 4.5 லட்சம் பேர் என்னை பின்தொடர்கின்றனர். சம்பந்தமில்லாமல் தனுஷ், அனிருத் குறித்த தவறான வீடியோக்கள் வதந்திகளாக பரப்ப பட்டன. இதனால் நிறைய பிரச்சனைகள் உருவானது எனக்கும் இது வேதனை அளித்தது.

இத்துடன் மன வேதனைக்கு என் விவாகரத்தும் ஒரு காரணமாக அமைந்தது. ஒரே நேரத்தில் இரண்டும் நடந்ததால் எனக்கு கவலையாக இருந்தது. என் டுவிட்டர் கணக்கிலிருந்து வீடியோக்களை யார் பரப்பினர் என்பதை இதுவரை அறிய முடியவில்லை.

சிக்கலான நேரத்தில் மனதை தேற்றவே எனக்கு பிடித்த சமையலை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதனால் லண்டன் சென்று குக்கிங் கற்றுக் கொண்டேன். சர்வதேச உணமை தமிழ் மொழியில் யூடியுப் வழியாக அனைவருக்கும் கற்றுத்தர முடிவு செய்துள்ளேன். சுசிலீக்ஸ் பிரச்சனையை சுசிகுக்ஸ் மூலம் மாற்றியமைக்க போகிறேன் என சுசித்ரா தெரிவித்துள்ளார்.
#SuchiLeaks #SuchiCooks #Suchithra #Flixwood