சம்பளத்தை வாங்க பிச்சை எடுக்க வேண்டியுள்ளது – ராதிகா ஆப்தேவின் சர்ச்சை பேச்சு

பார்வையாளர்களின் விமர்சனம் சம்பளத்தை வாங்க பிச்சை எடுக்க வேண்டியுள்ளது – ராதிகா ஆப்தேவின் சர்ச்சை பேச்சு 0.00/5.00


ராதிகா ஆப்தே ஏதேனும் புதிய சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறார். தமிழ், ஹிந்தி படங்களில் நடிக்கும் சம்பளத்தை பெற பிச்சை எடுக்க வேண்டியுள்ளது என்று கூறி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


ராதிகா ஆப்தே சமீபத்தில் லிபர்டி ஏ கால் டு ஸ்பை என்ற ஹாலிவுட் படத்தில் உளவாளியாக நடிக்கிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் நூர் இனாயத் கான். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.


ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் , ஒவ்வொரு இயக்குநர்களுக்கும் ஒரு தனிஸ்டைல் உண்டு. ஹாலிவுட் – இந்திய இயக்குநர்களுக்கு என்ன வித்தியாசம் என்றால் ஹாலிவுட்டில் மக்கள் அனைவரும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.


குறிப்பிட்ட நேரத்தில் சம்பளத்தையும் கொடுத்துவிடுவார்கள். அதனால் சம்பள பணத்தை கொடுக்குமாறு யாரிடமும் கூறி பிச்சை எடுக்கத் தேவையில்லை என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.