மகத்தான மனிதநேயக் கலைஞனுக்கு பாராட்டுகள்

பார்வையாளர்களின் விமர்சனம் மகத்தான மனிதநேயக் கலைஞனுக்கு பாராட்டுகள் 0.00/5.00

கொரனோ பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்களுக்கு முன்னணி நட்சத்திர நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா உள்ளிட்டோர் தலா 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் பிரகாஸ் ராஜ் தான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு, தனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டு பணியாளர்கள் என அனைவருக்குமே மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன்” என்றார்.

“இந்த கட்டுபாடு காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களில் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தது அரை சம்பளத்தை தர தேவையான வழிமுறையை இறுதி செய்தேன். இன்னும் முடியவில்லை. என்னால முடிந்த வரை இன்னும் செய்வேன்.

அதுபோன்று உங்களால் சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று உங்களை கேட்டு கொள்கிறேன்” என்றார். “வாழ்க்கைக்கு நாம் திருப்பி தரவேண்டிய நேரமிது. ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது” என்றார்.