100 கோடி சந்தோஷத்தில் கியாரா குஷி

Kiara Advani
பார்வையாளர்களின் விமர்சனம் 100 கோடி சந்தோஷத்தில் கியாரா குஷி 0.00/5.00


பாலிவுட்டில் டோனி படம் மூலம் அறிமுகமானவர் கியாரா அத்வானி. அவர் நடித்த முதல் படம் 100 கோடி வசூலை எட்டியது. அதன் பிறகு அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை.

அர்ஜுன் ரெட்டி நடித்த படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக கியரா அத்வானி நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. ரூ.100 கோடி வசூலை தாண்டி ஓடியது.

இந்நிலையில் அக்‌ஷய்குமார், கரீனா கபூர் நடித்துள்ள குட் நியூஸ் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக கியரா நடித்திருக்கிறார். இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ரூ.100 கோடி வசூலை தாண்டி, ரூ.150 கோடி வசூலை இந்த படம் நெருங்கிவிட்டது. அடுத்தடுத்து தனது படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் கியரா சந்தோஷத்தில் இருக்கிறார். அத்துடன் தனது சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறார்.

Previous articlePATTAS – Official Trailer
Next article2020 தல பொங்கல் கொண்டாடும் சீரியல் பிரபலங்கள்