விஜய் ரசிகர்கள் இதை செய்திருக்கமாட்டார்கள் – நடிகை கஸ்தூரி

பார்வையாளர்களின் விமர்சனம் விஜய் ரசிகர்கள் இதை செய்திருக்கமாட்டார்கள் – நடிகை கஸ்தூரி 0.00/5.00

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “பிகில்” படம் நேற்று(அக்டோபர் 25) வெளியாகி வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அதிகாலையில் திரையிட முதலில் அனுமதி கிடைக்கவில்லை.


பின்பு, கடைசி நேரத்தில் தமிழக அரசு “பிகில்” படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதியளித்தது. ஆனால் சில கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை.


அதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் ரோட்டின் ஓரமாக இருக்கும் சில பொருட்களை சேதப்படுத்தி, சிறு கலவரத்தை உண்டாக்கியுள்ளனர். உடனே சம்பா இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வந்து விஜய் ரசிகர்கள் 30 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது வலைதள பக்கத்தில், பிகில் திரைப்படம் எத்தனை சாதனைகளை செய்தாலும், இந்த வன்முறை நிகழ்ச்சி இந்த படத்தை கூறும் போதெல்லாம் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். இந்த சம்பவம் யாருடைய வேலை என்பது தெரியவில்லை, இருந்தாலும் உண்மையான விஜய் ரசிகர்கள் இந்த செயலை செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்’ தெரிவித்துள்ளார்.