கொரனோ பாதிப்பு! திரைப்பட தொழிலாளர்களுக்கு முன்னணி நட்சத்திரங்கள் நிதியுதவி

பார்வையாளர்களின் விமர்சனம் கொரனோ பாதிப்பு! திரைப்பட தொழிலாளர்களுக்கு முன்னணி நட்சத்திரங்கள் நிதியுதவி 0.00/5.00


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக சில தினங்களுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும் கொரோனா தொடர்பான அச்சம் குறைந்த பின்னர் மீண்டும் படப்பிடிப்புகள் தொடர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் திரைப்பட தொழிலாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், தரப்பில் 10 லட்சம் ரூபாயும், விஜய் சேதுபதி தரப்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளனர். நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் சேர்ந்து ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கியுள்ளார்.