கொரனோவிலிருந்து மக்களை காப்பாற்ற நடிகை ரோஜா வீட்டில் சிறப்பு யாகம்

பார்வையாளர்களின் விமர்சனம் கொரனோவிலிருந்து மக்களை காப்பாற்ற நடிகை ரோஜா வீட்டில் சிறப்பு யாகம் 0.00/5.00


சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து பரவிய கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தினம்தோறும் உலகம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். இந்த வைரஸின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தி உள்ளார்.

கொரனோ வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காத்துக் கொள்ள இந்தியா மட்டுமின்றி பலநாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தினர். கொரனோவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட வேண்டி இந்த யாகத்தை தனது வீட்டில் நடத்தியதாக ரோஜா தெரிவித்தார்.