எனக்கு அவரைப் பிடிக்கும்னு ஊருக்கே தெரியும்! த்ரிஷா ஓப்பன் டாக்!!

365

நடிகை த்ரிஷா நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் படம் “கர்ஜனை”. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக “ராங்கி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், யுனிசெப் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற நடிகை த்ரிஷா செய்தியாளர்களிடம் பேசியபோது, நேர் கொண்ட பார்வை படம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.


அப்போது அவர் கூறுகையில், ‘நேர் கொண்ட பார்வை’ போன்ற படங்களில் அஜித் நடித்தது சூப்பர். அவரை நான் பாராட்டுகிறேன். எனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.