அஜித் படத்தை பார்த்து கதறிஅழுத விஜய்யின் அப்பா..!

21

தளபதி விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது ஜெய், அதுல்யா ரவியை வைத்து “கேப்மாரி” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தை பார்த்த எஸ்.ஏ. சந்திரசேகர் அஜித்தின் நடிப்பை பாராட்டியுள்ளார். மேலும் ஒவ்வொரு நடிகரும் இதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


இதுமட்டுமில்லாமல், விஸ்வாசம் படத்தில் தந்தை-மகள் பிணைப்பைப் பார்த்து, தனது மகள் வித்யாவின் நினைவு வந்து அழுததாகவும் தெரிவித்துள்ளார்.