அஜித்தை பின்னுக்கு தள்ளிய ஜெயம்ரவி..! ரசிகர்கள் ஷாக்..!

3

கடந்த சுதந்திர தினத்தன்று பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான படம் “கோமாளி”. இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக சம்யுக்த ஹெக்டே, காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.


சில பிரச்சனைங்களை தாண்டி வெளியான இப்படம் நான்கு நாட்களில் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.


தமிழ்நாட்டில் கோமாளி படம் ஏ சென்டர்களை தவிர்த்து பி மற்றும் சி சென்டர்களிலும் அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” விட அதிகமாக வசூல் செய்து வருகிறது.


மேலும், முக்கியமான தியேட்டரில் பெரிய திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த அஜித் படத்தை பின்னுக்கு தள்ளி தற்போது கோமாளி திரைப்படம் பெரிய திரையில் திரையிடப்பட்டு வருகிறது.


“கோமாளி” படம் இப்படி “நேர்கொண்ட பார்வை” படத்தை பின்னுக்கு தள்ளிவிடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இது ஜெயம் ரவி கொடுத்த ஷாக்.