ரசிகர்களை பார்த்து கண்கலங்கிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

7

எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.


இப்படத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் படத்தை அதிகாலை 4 மணி காட்சியை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தனர்.


இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதல் காட்சி முடிந்து வெளியே வரும் போது கண்கலங்கினார். பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த ஷ்ரத்தா, “ரசிகர்களுடன் படம் பார்த்ததை மறக்க முடியாது. ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மிகவும் வலுவானவர்கள். படத்தின் மிக முக்கியமான வசனங்களைக் கவனிக்கிறார்கள். மாஸ் காட்சிகளுக்கு சந்தோஷப்படுகிறார்கள். முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது ஒரு அனுபவம். ஆனால், அதே படத்தில் நாமும் இடம்பெற்றிருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம் “ என்றார்.