தர்பார் இசை பற்றி அனிருத் சொல்லும் ரகசிய சேதி!!

39

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் “தர்பார்”. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.


இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


இந்நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அனிருத், தர்பார் எப்போது வெளியாகும் என்பது குறித்து தனக்கும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று கூறியுள்ளார்.