விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை…!

பார்வையாளர்களின் விமர்சனம் விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை…! 0.00/5.00

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் “பிகில்” படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


அடுத்ததாக விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கும் நிலையில், இதில் வில்லனாக மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்நிலையில், இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Image result for kiara advani