பிரான்ஸ் தமிழர்களுக்கு அஜித் படத்தால் வந்த சிக்கல்!

6

அஜித் நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியான படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படம் தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது.


இந்நிலையில்,பிரான்சில் உள்ள ‘லீ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் படம் வெளியானது. தமிழ் நாட்டில் கொண்டாடுவது போலவே பிரான்ஸ் அஜித் ரசிகர்கள் அங்கு கொண்டாடி வந்தனர். திரையரங்கு முன் ஆடிப்பாடி, பாலபிஷேகம் செய்து கொண்டாடியுள்ளார்கள்.


இதுமட்டுமில்லாமல் திரையில் அஜித் தோன்றும் காட்சியில் ஸ்கிரீனுக்கு பக்கத்தில் சென்று அஜித்தை கும்பிட்டு வணங்கியுள்ளனர். இதனால் அந்த திரையரங்கின் ஸ்க்ரீன் கிழிந்துவிட்டது.


கிழிந்த ஸ்க்ரீனை சரி செய்வதற்கு ரூ. 5.5 லட்சம் செலவாகியுள்ளது. இதனை படத்தின் உரிமையை பெற்ற விநியோகஸ்தர்கள் கொடுத்துள்ளனர். இதனால் விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தாக தெரிவித்துள்ளார்கள்.


இதனை அடுத்து ‘லீ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் இனிமேல் எந்த தமிழ்த் திரைப்படமும் திரையிடப்பட மாட்டாது என்ற முடிவை திரையரங்கு நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதற்கு முன் இந்த திரையரிங்கில் “சர்கார்”, “பேட்ட”, “விஸ்வாசம்” வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.