பிகிலுக்காக டப்பிங்கில் விஜய் பிஸி!

பார்வையாளர்களின் விமர்சனம் பிகிலுக்காக டப்பிங்கில் விஜய் பிஸி! 0.00/5.00

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் “பிகில்”. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளிவந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் படக்குழு தனது அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.


அது, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது விஜய் டப்பிங் பேச தொடங்க இருக்கிறார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் கம்போஸிங் பணியை விறுவிறுப்பாக செய்து வருகிறார்.