கொரோனாவால் தள்ளிப்போன கிரகப்பிரவேசம் – யாமி கவுதம்

9

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர் நடிகை யாமி கவுதம். அவர் நடித்த 3 படங்களும் திரைக்கு வராததால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகி விட்டார்.

யாமி கவுதமின் சொந்த ஊரான சண்டிகரில் புதிதாக பங்களா வீடு கட்டியுள்ளார். மே முதல் வாரத்தில் அதன் கிரகப்பிரவேசத்தை பிரமாண்டமாக நடித்த முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் இதை ரத்து செய்து விட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: கொரோனா ஊடரங்கால் நான் நினைத்தபடி எனது வீட்டு கிரகப்பிரவேசத்தை நடத்த முடியவில்லை என்றாலும் கொரோனா பிரச்சனைக்கு பிறகு புதிய வீட்டில் குடியேற இருக்கிறேன். பயணம் செய்வது பாதுகாப்பானது என்று அதிகாரிகள் எப்போது சொல்கிறார்களோ அப்பொழுது நான் சண்டிகர் செல்வேன்.

அதன் பிறகு குடும்பத்தினருடன் நாங்கள் புது வீட்டில் குடியேறுவோம். எனது வீட்டில் ஓவியம் வைப்பதற்காகவே நான் புதிதாக ஓவியம் வரைந்து வருகிறேன் என்றார் யாமி கவுதம்.