விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் தொடர்கள் முடியப்போகிறது! ஷாக்கான ரசிகர்கள்

13

சின்னத்திரை தொலைக்காட்சி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது விஜய் டிவி. இதில் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் விதவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது சீரியல்களும் நல்ல வரவேற்ப்பை பெறத் தொடங்கி உள்ளன. லாக் டவுனுக்கு பிறகு சீரியல் லைவ்வாக ஒளிபரப்பட்டதிலிருந்து மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்மையில் 3 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த மௌன ராகம் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும் முடியப்போகிறது என பேச்சு பரவத் தொடங்கியுள்ளது.

இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரினா தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு இயக்குனர் புதிய சீரியல் இயக்க தொடங்கிவிட்டார் என்றால் பழைய சீரியலை முடித்துவிடுவார் என்று இல்லை. பாரதி கண்ணம்மா இன்னும் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் முடிய போவதில்லை என தெரிவித்துள்ளார்.

பிரவீன் பென்னட் தான் பாரதி கண்ணம்மா, பொம்முட்டி அம்மா சீரியல்களை இயக்குகிறார். அவர் புதிதாக ராஜா ராணி 2 சீரியல் இயக்க தொடங்கவே பாரதி கண்ணம்மா முடிய போகிறது என்ற பேச்சு பரவத் தொடங்கியுள்ளது.

Your Digital PR