போயி வேற வேலை இருந்தா பாருங்கடா! நெட்டிசன்களை விளாசும் விஜய் சேதுபதி

45


லோகேஷ் கனகராஜ் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இதில் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்தவாரம் விஜய், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்கள் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியனின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த விஜய்யை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடியே காரில் சென்னைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டன. விஜய்க்கு நெருக்கமான கல்லூரி நிர்வாகத்தின் பெண் உரிமையாளர் ஒருவர் இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி எடுத்து வருவதாகவும், இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல் பரவியது.

விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும் பரவியது. இதனால் தான் ரெய்டு நடத்தப்பட்டதாக இணையத்தில் ஒரு தகவல் பரவியது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பதிலளித்துள்ள விஜய்சேதுபதி, ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ என கூறியுள்ளார்.
#போயிவேறவேலைஇருந்தாபாருங்கடா