வரலட்சுமி நடிக்கும் மூன்றாவது தெலுங்கு படத்தின் புதிய அப்டேட்

79


விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான வரலட்சுமி அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் கதாபாத்திரம் பேசும் படியாக அமைந்தது.

அதன் பிறகு வரலட்சுமி தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தார். அதில் ஒரு படமான ’கிராக்’ என்ற படம் தற்போது தயாரிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரலட்சுமி நடிக்கவிருக்கும் மூன்றாவது தெலுங்கு படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ஒன்றை இயக்குனர் விஜய் கனகமெடல என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் வரலட்சுமி நடிக்கவிருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தின் பூஜை வரும் 20ஆம் தேதி ஐதரபாத்தில் நடைபெறவிருப்பதாகவும், இந்த படக்குழுவினர் களுடன் இணைவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.