படமாக மாறிய வைரமுத்துவின் பாடல் வரி!

37

கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலின் வரி ஒன்றில் இருந்து ‘மிஸ்டர் டபிள்யூ’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சக்தி என்பவர் தயாரித்து வருகிறார். படத்தின் கதாநாயகன் எஸ்.பி. சித்தார்த் நடிகிறார். இவருக்கு ஜோடியாக வாணி போஜனம் நடிக்கிறார்.


ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ ஊர்வசி ஊர்வசி……. பாடலில் இடம் பெற்ற வரிகள் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி” என்ற ஒன்றை வரியை மையமாக வைத்து முழு படமும் எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை காமெடியுடன் சொல்லும் படம் தான் “ மிஸ்டர் டபிள்யூ”. என்று கூறினார். சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.