2020 தல பொங்கல் கொண்டாடும் சீரியல் பிரபலங்கள்

119
Serial Celebrity

பொங்கல் திருவிழா கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். தமிழர்கள் கொண்டாடும் முக்கியமான விழாக்களில் ஒன்று பொங்கல். திருமணம் ஆனவர்கள் கொண்டாடும் தல தீபாவளியைப் போன்று தல பொங்கலும் சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் இந்த வருடம் தலை பொங்கல் கொண்டாடும் சீரியல் பிரபலங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

சஞ்சீவ் – ஆல்யா மானசா

’ராஜா ராணி’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் கார்திக் – செம்பா ஜோடி ரசிகர்களிடம் வெகுவாக பிரபலமாகினர். சீரியல் முடிவதற்குள் சஞ்சீவும், ஆல்யா மானசாவும் நிஜ காதலர்களாக மாறினர். இருப்பினும் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காததால், கடந்த மே மாதம் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக, செப்டம்பரில் தெரிவித்திருந்தார் சஞ்சீவ். தற்போது ஆல்யா கர்ப்பமாகவும் இருக்கிறார்.

ஜெனிஃபர் – சரவணன்

செம்பருத்தி சீரியலில் ஆதியின் மீது ஆசைப்படும் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெனிஃபர். இவர் தான் காதலித்து வந்த சரவணனை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். பொறியியல் படித்திருக்கும் சரவணம் சொந்தமாக கார் வைத்து, ஓட்டுநராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மைனா நந்தினி – யோகேஷ்

2 வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் நந்தினி. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினாலும், மன உளைச்சலாலும் சில மாதங்களிலேயே தற்கொலை செய்துக் கொண்டார் கார்த்திக். அதன் பிறகு தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் நந்தினி.

இந்நிலையில் ’நாயகி’, ‘சத்யா’ போன்ற தொடர்களில் நடித்த யோகேஷ்வரனை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணம் சமீபத்தில் நடந்தது.