நாதஸ்வரம் நாயகி ஸ்ரித்திகாவா…இது! திருமணத்திற்கு பிறகு கலக்கலான போட்டோ ஷுட்

20

தனியார் தொலைகாட்சியில் ஒளபரப்பாகி வந்த நாதஸ்வரம் தொடரில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ரித்திகா. மேலும் இவர் கல்யாண பரிசு, குலதெய்வம் ஆகிய தொடர்களிலும் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார்.

இது மட்டுமல்லமல் வெள்ளித்திரையில் கூட நடித்துள்ளார். ஆம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தார். அதே போன்று விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது.

அதன்பின் மதுரை டூ தேனி எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்த வந்தார். அதன்பின் ஸ்ரித்திகாவிற்க்கு வெள்ளித்திரையில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சமீபத்தில் 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் எனும் நபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளிவந்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் ஸ்லிமாக மாறியுள்ளார் ஸ்ரித்திகா என ரசிகர்கள், ஸ்ரித்திகா வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு கமெணட் செய்து வருகின்றனர்.

Your Digital PR