இயக்குநர் கார்த்திக் நரேன் பெயரில் வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி! அதிர்ச்சி தகவல்

7

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கோலிவுட்டையே தன்பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இவருடைய இரண்டாவது படமான நரகாசுரன் சில காரணங்களால் இன்னும் ரிலீசாகவில்லை. இருப்பினும் சமீபத்தில் வெளியான மாஃபியா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கார்த்தி நரேனின் அடுத்தப் படத்தில் நடிக்கவும் தொழில்நுட்ப பணிகள் செய்யவும் வாய்ப்பு வாங்கி தருவதாக மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி செய்து வருவதாகத் தெரிகிறது. இது குறித்த தகவல் தனது பார்வைக்கு வந்தவுடன் இயக்குனர் கார்த்திக் நரேன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

குறிப்பிட்ட நம்பரிலிருந்து தன்னுடைய அடுத்த படத்தில் பணிபுரிய வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இது முழுக்க ஒரு மோசடி நபரின் செய்கை என்றும் இந்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த எண்ணை பிளாக் செய்யவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவும் தான் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் பெயரில் மர்ம நபர் செய்து வரும் மோசடியால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.