‘தளபதி 64’ படத்தின் நடிகர்கள் இவர்கள் தானா!

37

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 64’ என தலைப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாயகனாக விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

மேலும் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி (நடிகர் வைபவ் சகோதரர்) என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.