தலைவி படத்தில் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

38


மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் படமாக்கி வருகின்றனர். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடிக்கின்றனர். படத்தினை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

அரவிந்த்சாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஷ்ணுவர்தன், இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் அ.தி.மு.க கட்சி கொடி நிறத்தில் ‘பார்டர்’ உள்ள சேலை அணிந்து கங்கனா ரனாவத் காட்சி அளிக்கிறார். இந்த தோற்றத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தலைவி படம் இந்தாண்டு ஜூன் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.

சசிகலா வேடத்தில் பூர்ணாவும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடிக்கின்றனர். படத்தில் கங்கனா ரணாவத் பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ஜெ கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக உள்ளது என கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
#Thalaivi #KanganaRanaut #அம்மா #Jayalalithaa #Flixwood