60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி – தமிழக அரசு

12

கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சின்னத்திரையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் தன்னார்வலர்கள் உதவி புரிந்தனர்.

கடந்த வாரம் 20 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கலாம் என தமிழக அரசு அனுமதித்தது. 200 பேர் இருந்தால்தான் படப்பிடிப்பு நடத்த முடியும். அப்படியிருக்கையில் 20 பேருடன் படப்பிடிப்பு நடத்த முடியாது. என வே 60 பேர் படப்பிடிப்பில் பங்கேற்க அனுமதி வேண்டும் என பெப்சி அமைப்பும், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை வைத்தது.

இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, இதுதொடர்பாக முதல்வர் பழனிச்சாமி இன்று (மே 30) விடுத்துள்ள அறிக்கையில், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துகிறவர்கள் மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற இடங்களில் நடத்துகிறவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடமும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும். படப்பிடிப்பு நடக்கும்போது அரசு அவ்வப்போது விதிக்கும் கட்டுப்பாடுகளை உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.