அழுகிய நிலையில் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகை தற்கொலை! அதிர்ச்சி தகவல்

61

சென்னையில் அண்ணன் தங்கை டிவி நட்சத்திரங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த நிலையில் அந்த வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் சின்னத்திரை சீரியல் நடிகர் நடிகைகளான ஸ்ரீதர் மற்றும் ஜெயகல்யாணி ஆகிய இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். இருவரும் தொலைக்காட்சி தொடர்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வெளியானதால் அக்கம் பக்கத்தினர் உள்ளவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் அழுகிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து இரண்டு பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் அவர்கள் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது தான் மரணம் அடைந்த இருவரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் என்பது அவர்களுடைய அடையாள அட்டையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இருவருமே அண்ணன் தங்கை என்பதும் இருவரும் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் இருவரும் வறுமை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் கடன் பிரச்சனை இருந்ததாகவும், சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்ததால் மனவிரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கடிதம் எதுவும் எழுதி வைக்காததால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.