சின்னத்திரையில் ஆக்சன் களத்தில் களமிறங்கும் தேவயானி

314


தமிழ் சினிமாவில் கமல், சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை தேவயானி. இவர் சரத்குமார், சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்ட பின்பு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவர் சின்னத்திரையில் கோலங்கள் சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பல சீரியல்களில் நடித்த தேவயானி, சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு ராசாத்தி சீரியலில் சௌந்திரவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி ராசாத்தியை வில்லி சிந்தாமணியிடம் இருந்து காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.