கொரோனா பரவலுக்கான முக்கிய காரணத்தை தெரிவித்த ஏமி ஜாக்சன்

9

லண்டன் மாடல் அழகியான ஏமி, மதராசப்பட்டிணம் படத்தின் தமிழ் நடிகை ஆனார். அதன்பிறகு பாலிவுட் நடிகையானார். தற்போது லண்டனில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். விலங்குகளை பாதுகாக்கும் பீட்டா அமைப்பிலும் பணியாற்றி வருகிறார்.

கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமான இடமாக இருப்பது இறைச்சிக் கூடங்கள் என கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் உள்ள இறைச்சி கூடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மையமாக இவைகள் இருக்கிறது. இறைச்சி கூடங்களில் உள்ள செயற்கை குளிர்ச்சி, ஈரமான தரைப்பகுதி, சரியான வெளித்தோற்ற காற்றோட்ட வசதி இல்லாதவை. இதுபோன்றவை களால் தான் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தொலைக்காட்சிகளில் விவாதிப்பதாக ஏமி தெரிவித்துள்ளார்.