மீண்டும் சர்ச்சையை தூண்டிய சின்மயி!

27


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீடூ விவகாரத்தில்  வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி.

 இதற்கிடையே, கமலஹாசன் அலுவலகத்தில் சமீபத்தில் கே பாலச்சந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சின்மயி தனது சமூக வலைத்தளத்தில், “பெரிய மனிதர்கள் மட்டும் தங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை தங்களுடைய புகழ் மூலம் மறைத்துவிட்டு எப்போதும் போல் வலம் வருகிறார்கள். ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளான நான் மட்டும் தடை செய்யப்பட்டு உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் இதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.