விஜய்க்கு ஆறுதல் சொன்ன சீமான்…!

57

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தி ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்  நிறுவனம் தயரிப்பில் உருவாகியுள்ள படம் “பிகில்”. இப்படம் நாளை(அக்டோபர் 25) வெளியாக இருக்கிறது.


இந்த படத்திற்க்கான சிறப்பு காட்சி திரையிடக்கூடாது என்று கடம்பூர் ராஜு தெரிவித்தார். ஆனால், அதிகாலை காட்சிக்கான டிக்கெட்டுகள் பல நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.


இதற்கு கடம்பூர் ராஜு டிக்கெட்டுக்காக வாங்கிய பந்தை ரசிகர்களுக்கு திருப்பியளிக்குமாறு தியேட்டர் உரிமையாளர்களுக்கு ராஜு தெரிவித்தார்.

Image result for seeman


இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‘நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டு தான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகி விடும்.


செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது இதனால் அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது’ என்று கூறியுள்ளார்.