ஆலியா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்!

52


தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த தொடரில் கதாநாயகியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சிவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர்கள் இருவரும் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆலியா கர்ப்பமாக இருக்கிறார் என்று சஞ்சீவ் தெரிவித்திருந்தார்.

தற்போது தான் முதன் முறையாக ஆலியா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வமான வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு They Are My Life என கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.