தந்தையர் தினத்தை முன்னிட்டு மகளுக்காக சாண்டி மாஸ்டர் இயக்கிய பாடல்

18

கலா மாஸ்டரிடம் மாணவனாக அறிமுகமாகி தனியார் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமானவர் சாண்டி மாஸ்டர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார் .

பிக் பாஸ் சீசன் 3- க்கு பின் அதிகமாக பேசப்பட்டவர் சாண்டி மாஸ்டர் . ஹவுஸ் மேட் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் இடம் பிடித்தார். பிக் பாஸ் மூலம் சாண்டி மாஸ்டர் மட்டுமில்லை அவரது செல்ல மகள் லாலாவும் அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர்.

இந்நிலையில் தந்தையர் தினத்திற்காக சாண்டி மாஸ்டர் தனது மகள் லாலாவுக்கான பாடல் ஒன்றை இயற்றி அதனை படம்பிடித்துள்ளார் .