“நடிகர் சங்க தேர்தல் கண்டிப்பா நடக்காது”- ராதா ரவி

30

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வர்ற 23-ந்தேதி நடக்க இருக்கு.இதுல நாசரோட பாண்டவர் டீமும், கே.பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் டீமும் இந்த தேர்தல்ல போட்டி போடுறாங்க.


இந்த நிலையில போன தேர்தல்ல பாண்டவர் டீமுக்கு எதிரா போட்டி போட்டு தோல்விய சந்திச்ச சரத்குமார் டீமுல இருந்தவரும் நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் ராதாரவி, இந்த முறை தேர்தல் நடக்காது சொல்லிருக்காரு.


இதுபத்தி ஒரு பேட்டில பேசுனப்போ,‘போன தடவ எங்களுக்கு எதிராக போட்டி போட்ட விஷால் டீம் மாற்றம் தேவன்னு சொன்னாங்க. நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாதுனு சொன்னேன். இப்போ அது தான் நடந்து இருக்கு. விஷால் மேல ஏமாற்றம் வந்துருக்கு. எங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவா நின்ன எல்லாரும் இப்போ அவருக்கு எதிரா நிக்கிறாங்க.


கடந்த முறை ரஜினி தேர்தல்ல ஓட்டு போட்டப்போ யார் ஜெயிச்சாலும் மூணு வருசத்துல சொன்னத செய்ய வேண்டும்னு சொன்னாரு. இப்போ அவங்க ஒண்னுமே நிறை வேற்றத்தால் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கு. அந்த டீம் நிறைய பொய்களை சொல்லி ஜெயிச்ச டீம்.


எதுக்கெடுத்தாலும் விஷால முன்னிலைப்படுத்தி முன்னிலைப்படுத்தி இப்போ அசிங்கப்படுத்திட்டு இருக்காங்க. இது நடக்கும்னு முன்னாடியே நான் சொன்னேன். இன்னும் நிறைய வேடிக்கை காத்திருக்கு. இது சட்ட விரோதமான தேர்தல்.


23-ந் தேதி இந்த தேர்தல் கண்டிப்பா நடக்காது. அவங்க நடத்திய கலை நிகழ்ச்சிக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யல. நிறைய குளறுபடிகள் நடந்திருக்கு. இந்த தேர்தல் கண்டிப்பாக நடக்காது. வர்ற 13-ந்தேதி நீதிமன்றம் மூலமா இந்த தேர்தல் நிறுத்தப்படும்னு’ சொல்லிருக்காரு.