லாக்டவுனிலும் நண்பர்களுக்கு பரிசுகள் அனுப்பும் ராஷ்மிகா

12

தெலுங்கு திரையுலகின் தற்போதைய பரபரப்பு நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்திக்குடன் நடிக்கும் சுல்தான் படம் மூலம் அறிமுகமாகிறார்.

கர்நாடகா மாநிலம் கூர்க் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கொரோனா ஊரடங்கிற்கு முன்பே தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். சமூகவலைதளங்களில் ஏதேனும் புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களிடம் உரையாடி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய தெலுங்கு திரையுலகின் முக்கிய நண்பர்களுக்கு அவரது சொந்த பண்ணையில் விளைந்த பழங்கள், மேலும் சில பொருட்களை பரிசாக அனுப்பி வருகிறார். இதுபற்றிய தகவலை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் ஐந்து மொழிகளில் உருவாக உள்ள புஷ்பா படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க உள்ளதாகவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.