எளிய முறையில் காதலி மஹீகாவுடன் ராணா நிச்சயதார்த்தம்

25

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் டாணா டகுபதி. இவர் சமீபத்தில் தான் தனது காதலி மஹீகா பஜாஜ் என்பவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர் ஒரு இண்டிரீயர் டிசைனர் மற்றும் மாடல் என பன்முகம் கொண்டவர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவீட்டார்களும் ராணா – மஹீகா திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று (21-05-2020) எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடத்தி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்திருந்தனர். வரும் டிசம்பரில் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் நடந்த தகவலை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் டாணா. இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

And it’s official!! 💥💥💥💥

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on