தனிமைப் படுத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வான நடிகைகள்!

9

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து தினம்தோறும் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த சீசனில் கலந்து கொள்ளும் பிரபலங்களான நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கருண் ராமன், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவரைப்போன்று நடிகை ஷிவானியும் தனிமைப்படுத்தப்பட்டதால் கிட்டதட்ட இருவரும் நிகழ்ச்சியில் பங்கு கொள்வது உறுதியாகியுள்ளது.

Your Digital PR