அசத்தலான ராஜா ராணி 2 சீரியலின் புரோமோ வெளியீடு

11

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் முடிந்த உடனேயே அதன் இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற பேச்சு ஆரம்பத்திலேயே எழுந்து விட்டது. ஆனால் உடனடியாக அறிவிப்பு எதுவும் வரவில்லை.

அதற்குள்ளாக ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ்- ஆல்யா ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ஆல்யா கர்ப்பமானார். சமீபத்தில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையே காற்றின் மொழி சீரியல் மூலம் மீண்டும் சீரியலுக்கு திரும்பினார் சஞ்சய். எனவே அதுதான் ராஜா ராணி இரண்டாம் பாகமாக இருக்குமோ என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆல்யா அதில் இல்லையே என்ற ஏமாற்றம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் தான் சமீபத்தில் மீண்டும் சீரியலில் நடிக்கப் போவதாக அறிவித்தார் ஆல்யா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த சீரியலை இயக்கப் போவது ராஜா ராணி இயக்குநர் பிரவீன் பென்னட் என்பதால், நிச்சயம் அது தான் ராஜா ராணி இரண்டாம் பாகம் என யூகங்கள் வைரலானது.

தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக அந்த தொடரின் இரண்டாம் பாக புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டது. அந்த சீரியலுக்கு அதிகாரப்பூர்வமாக ராஜா ராணி 2 பெயரிடப்பட்டுள்ளது.

புரோமோவில், நாயகி ஆல்யா ஐபிஎஸ் கனவில் இருக்க, நாயகன் சமையல்காரராக இருக்கிறார். நாயகியின் கனவுக்கு துணை நிற்கப் போகிறாரா இல்லை தன் தாயின் ஆசையை நிறைவேற்றப் போகிறாரா என நாயகனைச் சுற்றி ராஜா ராணி 2 கதைக்களம் இருக்கப் போகிறது என்பது புரோமோ மூலம் தெரியவருகிறது.

Your Digital PR