குடிக்கும் முன் பசியால் துடிக்கும் மகளின் கண்ணீரை நினைத்துப் பாருங்கள்! ராகவா லாரன்ஸ் உருக்கம்

2

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடரும் ஊரடங்கில் சினிமா தொழிலாளர்களுக்கும் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அளவில் நிவாரண உதவி செய்து மக்களிடையே பாராட்டு பெற்றவர் நடிகர் ராகவா லான்ஸ். இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார் லாரன்ஸ்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. நிறைய பேர் கூட்டம் கூட்டமாக கடையில் மது வாங்குவதையும் பார்க்க முடிகிறது..

எனது அம்மா மற்றும் சில நபர்கள் கூட என்னிடம், நாம் மற்றவர்கள் சிரமப்படக்கூடாது என்று உதவி செய்கிறோமே ஆனால் இப்படி பொறுப்பற்ற நபர்களை பார்க்கும்போது நாம் சரியான ஆட்களுக்குத்தான் உதவி செய்கிறோமா என்றும் தொடர்ந்து இப்படிப்பட்டவர்களுக்கு நாம் உதவி செய்யத்தான் வேண்டுமா என கேள்வி எழுப்பினார்கள்.. எனது அம்மா மட்டுமல்ல எனது நண்பர்களுக்கும் கூட இதே சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

அவர்களுக்கு எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் மது குடிக்கும் ஒரு மனிதரை மட்டும் பார்த்துவிட்டு, அவருக்கான உதவியை நாம் நிறுத்தினால், அவர் குடும்பத்திலுள்ள அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் என பலர் பாதிக்கப்படுவார்கள். நாம் பார்க்க வேண்டியது அவர்களைத்தான்.. அதனால் இந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதை நாம் நிறுத்தக்கூடாது.” என்று கூறியுள்ளார்.

“தவிர மது அருந்துபவர்களுக்கு எனது ஒரு சிறிய வேண்டுகோள் என்னவென்றால் குடிப்பதற்கு முன் உங்கள் வீட்டில் பசியால் துடிக்கும் உங்கள் குழந்தையின் கண்ணீரை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.. அதனால் நேர்மையாகவே சிந்திப்போம்.. சேவை தான் கடவுள்” என குறிப்பிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Tamil Nadu tasmac openingHi friends and fans, The tasmac was opened a few day’s back in Tamil Nadu after seeing the…

Posted by Raghava Lawrence on Tuesday, May 19, 2020