அழகு சீரியலில் அதிரடி மாற்றம்! ரசிகர்கள் உற்சாகம்

42

கொரோனா லாக்டவுனில் தளர்வு காரணமாக கடந்த 31ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்தவும், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 60 பேர் கலந்து கொண்டு பணியாற்றலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற்றது.

இருப்பினும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மீண்டும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கபட்டுள்ளது. இதனால் சின்னதிரை படப்பிடிப்புகள் மீண்டும் ரத்தாக்கியுள்ளது.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அழகு’ சீரியலில் நடிக்கும் நடிகர் அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சஸ்பென்ஸ் என்று குறிப்பிட்டு சுவாரஸ்யமான கதையுடன் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தலைவாசல் விஜய்யுடன் இருக்கும் ஃபோட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் ரேவதிக்கு பதிலாக ஊர்வசி நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் படப்பிடிப்பில் நடிகர் கிருஷ்ணா தொகுப்பாளினி நட்சத்திரா மற்றும் நாயகி படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து மீண்டும் சன்டிவி சீரியலில் நடிப்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.