நாட்களும் குறைப்பு, போட்டியாளர்களும் குறைப்பு!! சுவாரஸ்யம் சொல்லும் பிக்பாஸ் தகவல்

11

தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பிக்பாஸ் நான்காவது சீசன் வருகின்ற அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கருண் ராமன், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 சீசன்களிலும் 16 போட்டியாளர்கள் கொண்டதாகவும், 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை போட்டியாளர்கள் குறைக்கப்படும் என்றும் பிக்பாஸ் நடக்கும் நாட்களும் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதாவது பிக்பாஸ் போட்டியாளர்கள் 12 பேர் மட்டும் கலந்து கொள்வர் என்றும், 80 நாட்கள் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது. 12 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கினாலும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக ஒரு சிலர் போட்டியாளர்கள் அறிமுகப் படுத்தபடுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல் போட்டி சுவராசியமாக சென்று டிஆர்பி எகிறினால் போட்டியின் நாட்களும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக விஜய் டிவி வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் போட்டி தொடங்கும் முதல் நாளில் தான் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர், எத்தனை நாட்கள் இந்த போட்டி நடைபெறும் என்பது குறித்த உறுதியான தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Your Digital PR