அதிரடி பெண் போலீஸ் அதிகாரியாக நந்திதா ஸ்வேதா

12

ராம்குமார் சுப்பராமன் என்பவரின் இயக்கத்தில் ஐபிசி 376 என்ற படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டீசர் இருதினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

டீசரில் வரும் காட்சிகளை வைத்து பார்க்கும் போது படம் கிரைம் த்ரில்லராக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிசி 376 படத்தை பிரபாகர் என்பவர் தயாரிக்கிறார். கிரிராஜ் என்பவர் ஒளிப்பதிவாளராகவும், நிர்மல் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.

தற்போது ஐபிசி 376 படக்குழு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இன்னும் மூன்று நாட்களில் படத்தின் டிரைலர் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். நந்திதா ஸ்வேதா முதன்முறையாக அழுத்தமான பெண் கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதன்முறையான படமாகும்.